முருகன் App
அப்பன் பழனி அப்பனடா
கண்ணதாசன்
பாடல்1 / 1
அப்பன் பழனி அப்பனடா · கண்ணதாசன்

பாடல்

✓
அப்பன் பழனி அப்பனடா - அவன்
அரும் பெரும் திரவியக் கப்பலடா
அற்புதம் காட்டும் தலைவனடா - அவன்
அன்புக்குப் பணிசெயும் இறைவனடா!
✓
காண்போம் நாம் அவன் படைவீடு - தம்பி
கால்வலி மறந்து நடைபோடு
கண்டால் நமக்கிலை ஒருகேடு - நீ
காவடி எடுத்து நடமாடு!
✓
வணிகனின் குலத்துக்குத் தாயாவான் - அவர்
வளைவினில் ஓடிடும் சேயாவான்
கவிஞர்கள் பாட்டுக்கு வாயாவான் - எங்கு
கடும்பகை கண்டாலும் தீயாவான்!
✓
ஆண்டிக்குப் பாரடி சாத்துபடி - நாம்
ஆடிடப் பழனியில் தீர்த்தமடி
வேண்டிடும் வரம்தரும் தீபமடி - இதில்
வேதனையே இலை லாபமடி!
✓
பழனிக்குப் போவதில் சுகம் அதிகம் - அவன்
பார்வையில் நிற்பதில் குணமதிகம்
விழுந்து வணங்கினால் வயததிகம் - அந்த
வீரன் தருவான் பணமதிகம்!
✓
செட்டிமக்கள் இந்தப் பூமியிலே - பல
தெய்வத்துக் களித்தது கோடியம்மா
கட்டிய கோயில்கள் ஆயிரமே - அதில்
கந்தனின் கோயில்கள் யாவையுமே!
✓
முருகப்ப னில்லாத ஊருமில்லை - ஒரு
முத்தைய னில்லாத வீடுமில்லை
பழனியப்ப னின்றி வம்சமில்லை - எங்கள்
பரம்பரைக் கவனின்றி அம்சமில்லை!
✓
கால்நடைப் பயணத்தில் ஓடிவந்தோம் - உன்
கருணைக்குத் தானுனைத் தேடிவந்தோம்
வேலெமைக் காக்கட்டும் வேலவனே - உன்
விழிஎமைக் காக்கட்டும் நாயகனே!