அவனாசிப் பத்து
பாடல்கள்1 / 1
அவனாசிப் பத்து
பாடல்கள்
1வற்றாத பொய்கை வளநாடு✓
வற்றாத பொய்கை வளநாடு கண்டு
மலைமேலிருந்த குமரா அரோகரா
உற்றார் எனக்கு ஒருபேரு மில்லை
உமையாள் தனக்குமகனே
முத்தாடைதந்து அடியேனை யாளும்
முருகேசன் என்றனரசே!
வித்தார மாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே!
2ஆலால முண்டோன் மகனாகி✓
ஆலால முண்டோன் மகனாகி வந்து
அடியார் தமக்கும் உதவி
பாலூர(ல்) உண்டு கனிவாய் திறந்து
பயனஞ் செழுத்தை மறவேன்
மாலான வள்ளி தனைநாடி வந்து
வடிவாகி நின்ற குமரா!
மேலான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே!
3திருவாசல் தோறும் அருள்வே✓
திருவாசல் தோறும் அருள்வே தமோத
சிவனஞ் செழுத்தைமறவேன்
முருகேசரென்று அறியார் தமக்கு
முதலாகி நின்றகுமரா
குருநாத சுவாமி குறமாது நாதர்
குமரேச(ர்) என்ற பொருளே!
மறவாமல் வெற்றி மயில்மீதிலேறி
வரமேணு மென்றனருகே!
4உதிரந் திரண்டு பனியீர✓
உதிரந் திரண்டு பனியீர லுண்டு
உருவாசல் தேடிவருமுன்
ததிபோ லெழுந்த திருமேனி நாதர்
கடைவீடு தந்து மருள்வாய்
முதிரஞ் சிறந்த வயல்வீறு செங்கை
வடிவேல் எடுத்தகுமரா!
யதிராய் நடந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே!
5மண்ணாடு மீசன் மகனாரை✓
மண்ணாடு மீசன் மகனாரை யுந்தன்
மலைவீடு தந்து மருள்வாய்
வண்டூரல் பாயும் வயலூரில் செங்கை
வடிவேல் எடுத்தகுமரா!
நன்றாக வந்து அடியேனை யாண்டு
நல்வீடு தந்தகுகனே!
கொண்டாடி வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே!
6நீலஞ் சிறந்த குறமாது வள்ளி✓
நீலஞ் சிறந்த குறமாது வள்ளி
நின்பாகம் வைத்தகுமரா
காலனெழுந்து வெகுபூசை செய்து
கயிறுமெடுத்து வருமுன்
வேலும் பிடித்து அடியார் தமக்கு
வீராதி வீரருடனே
சாலப் பரிந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே!
7தலைகட்ட நூலின் நிழல்போல நின்று✓
தலைகட்ட நூலின் நிழல்போல நின்று
தடுமாறி நொந்து அடியேன்
நிலைகெட்டு யானும் புவிமீதில் நின்று
நெடுமூச் செறிய விதியோ
அலைதொட்ட செங்கை வடிவேற் கடம்பா
அடியேனை ஆளுமுருகா!
மலையேறி மேவுமயில்மீ திலேறி
வரவே ணுமென்றனருகே!
8வண்டுண்டு பூவில்✓
வண்டுண்டு பூவில் மதுவூரில் பாயும்
வயலூரில் செங்கை வடிவேல்
கண்டொன்று சொல்லித் திரிவார்கள் வாசல்
கடனென்று கேட்கவிதியோ?
வண்டூறு பூவிலிதழ் மேவும் வள்ளி
தெய்வா னைக்குகந்த வேலா
நன்றென்று சொல்லி மயில்மீ திலேறி
வரவே ணுமென்ற னருகே!
9விடதூத ரோடி வரும்✓
விடதூத ரோடி வரும் போது உம்மை
வெகுவாக நம்பினேனே
குறமாது வள்ளியிடமாக வைத்து
மயிலேறி வந்தகுமரா
திடமாகச் சோலை மலைமீ தில்வாழும்
திருமால் தமக் குமருகா!
வடமா னபழநி வடிவேல் நாதா
வர வேணு மென்றனருகே!
10ஓங்கார சக்தி✓
ஓங்கார சக்தி உமைபால் குடித்து
உபதேச முரைத்தபரனே!
பூங்கா வனத்தில் இதழ் மேவும் வள்ளி
புஜமீ திருந்தகுகனே
ஆங்கார சூரர் படைவீடு சோர
வடிவேல் விடுத்த பூபா
பாங்கான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே!
11ஆறாறு மாறு✓
ஆறாறு மாறு வயதான போது
அடியேன் நினைத்தபடியால்
வேறேது சிந்தை நினையாம லுந்தன்
ஆசாரசங்கமருள்வாய்
அசுரேசர் போல யமதூத ரென்னைத்
தொட்டோட கட்ட வருமுன்
மாறாது தோகை மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே!
12கையார உன்னைத்✓
கையார உன்னைத் தொழுதேத்த மனது
கபடேது சற்றுமறியேன்
அய்யா உனக்கு ஆளாகும் போது
அடியார் தமக்கும் எளியேன்
பொய்யான காயம் அறவே ஒடுங்க
உயிர்கொண்டு போகவருமுன்
வையாளி யாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே!
13ஏதேது ஜென்ம✓
ஏதேது ஜென்ம மெடுத்தேனோ முந்தி
யிந்தப் பிறப்பிலறியேன்
மாதாபி தாநீ மாயன் தனக்கு
மருகா குறத்திக ணவா
காதோடு கண்ணை யிருளாக மூடி
உயிர்கொண்டு போகவருமுன்
வாதாடி நின்று மயில்மீ திலேறி
வரவேணும் மென்றனருகே!