முருகன் App
கந்தரலங்காரம்
அருணகிரிநாதர்
காப்பு1 / 2
கந்தரலங்காரம் · அருணகிரிநாதர்

காப்பு

அடலரு ணைத்திருக்✓
அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு
வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையில்
தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே.