முருகன் App
குன்றக்குடிப் படைவீட்டுத் திருப்புகழ்
தண்டபாணி சுவாமிகள்
பாடல்1 / 1
குன்றக்குடிப் படைவீட்டுத் திருப்புகழ் · தண்டபாணி சுவாமிகள்

பாடல்

✓
என்றைக்கும்உன் ஆளென -
நம்பித்திரி வேனையும்
இந்தப்படி நீதுயர் - செயல்ஏனோ
இன்றைக்கிது நாளையி(து) -
என்றுகுறி யாதெழும்
இன்பக்கட லார்அமு - தருளாயோ
அன்றைக்(கு)உரு மாமலை -
யின்கட்கன வூ(டு)எனை
அங்கைக்கிளி யேஎனல் - பிழைதானோ
அந்தச்சொலை நாடிய -
தெம்புற்றும்என் ஆருயிர்
அஞ்சத்திரி ஏடணை - வரலாமோ
கன்றைக்கனி மீதெறி -
யுங்கைத்திரு மால்பல
கண்பெற்றவர் பால்நுவல் புகழோனே
கண்டுக்கிணை யாகிய -
மென்சொற்குற மாதெழில்
கண்டுட்களி கூர்மயல் - உடையோனே
கொன்றைச்சடை யார்உமை -
பங்கிற்றிகழ் காரணர்
கொஞ்சச்சிறு பாலனில் - வருதேவே
கொம்புக்களி றாடிய -
சந்தப்பொழில் சூழ்தரு
குன்றக்குடி மேவிய - பெருமாளே.
✓
மேற்படி வண்ணத்தின் தொங்கற்றாழிசைஇந்த வண்ணமுழுமையின் கருத்தைத்தொகுத்துரைப்பது.
அமலனது தவமீற வந்தசேய்
அறிவரிய விளையாடல் கொண்டவேள்
விமலமன தினர்தேட நின்றகோ
விடலைதிரு வருள்போலு மங்கையாள்
குமரியர்கள் அரசான பண்பினாள்
கொடுமைதவிர் எனநான் நெருங்கலால்
இமயநிகர் முலைமார் பழுந்தவே
இனிதுபெறும் அநுபோகம் இன்பமே.