முருகன் App
மயில்விருத்தம்
அருணகிரிநாதர்
சிகரதமனிய மேரு9 / 11
மயில்விருத்தம் · அருணகிரிநாதர்

சிகரதமனிய மேரு

9✓
சிகரதம னியமேரு கிரிரசத கிரிநீல
கிரியெனவும் ஆயிரமுகத்
தெய்வநதி காளிந்தி யெனநீழல் இட்டுவெண்
திங்கள்சங் கெனவும்ப்ரபா
நிகரெனவும் எழுதரிய நேமியென உலகடைய
நின்றமா முகில் என்னவே
நெடியமுது ககனமுக டுறவீசி நிமிருமொரு
நீலக் கலாப மயிலாம்
அகருமரு மணம்வீசு தணிகைஅபி ராமவேள்
அடியவர்கள் மிடிய கலவே
அடல்வேல் கரத்தசைய ஆறிரு புயங்களில்
அலங்கற் குழாம் அசையவே
மகரகன கோமளக் குண்டலம் பலஅசைய
வல்லவுணர் மனம்அசைய மால்
வரை அசைய உரகபிலம் அசையஎண் டிசைஅசைய
வையாளி யேறு மயிலே.