முருகன் App
நல்லைக் கந்தசுவாமி வாழி விருத்தம்
நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்
விருத்தம்1 / 1
நல்லைக் கந்தசுவாமி வாழி விருத்தம் · நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்

விருத்தம்

1✓
அருணவிக சிதகமல மலரைநிகர் தருவதனம்
ஆறுமநு தினமும் வாழி,
அமரர்தொழு கனகசபை நடனமிடு பரமசிவ
அருண்முருகர் சரணம் வாழி
கருணைமழை பொழிபனிரு நயனமதி னொடுவல்லிய
கவினுலவு தோள்கள் வாழி,
கனகிரியை இருபிளவு படவுருவு நெடியவயில்
கரதலத் தினிது வாழி,
வருணமர கதவழுகு திகழவரும் அவுணனெனும்
மயிலினொடு சேவல் வாழி,
வனசரர்தம் அரசனுத வியகுறமி னொடுகடவுண்
மயிலிவர்கள் தினமும் வாழி,
தருணமிது எனவமரர் பணிநல்லை அமர்கந்தர்
தமதடியர் நிதமும் வாழி
சகசநிரு மலபரம சுகிர்தபரி பூரண
சடட்சரம் வாழி வாழி.