முருகன் App
செல்வச் சந்நிதி முருகன் காவடிச்சிந்து
மு. செல்லையா
பாடல்1 / 1
செல்வச் சந்நிதி முருகன் காவடிச்சிந்து · மு. செல்லையா

பாடல்

✓
ஆடாடு பக்தாநீ ஆடாடுபக்தா
அன்போடு காவடி கொண்டாடுபக்தா
ஆடாடு பக்தாநீ ஆடாடு பக்தா
ஆனந்த சந்நிதிமுன் ஆடாடு பக்தா
✓
வேலா வேலா வென்று ஆடாடுபக்தா
வேதா வேதா வென்று ஆடாடுபக்தா
பாலா பாலா வென்று ஆடாடுபக்தா
பன்னிருகை வேலா வென்றாடாடு பக்தா - ஆடாடு
✓
கந்தா கடம்பா வென்றாடாடு பக்தா
கதிரை மலையானே யென்றாடாடு பக்தா
செந்தில் முருகாவென்று ஆடாடுபக்தா
சேவற் கொடியோனே யென்றாடாடு பக்தா - ஆடாடு
✓
மயில் வாகனாவென்று ஆடாடு பக்தா
மாணிக்க மணியேயென் றாடாடு பக்தா
தயிர்திருடி மருகாவென் றாடாடு பக்தா
தாசர் விசுவாசனென் றாடாடுபக்தா - ஆடாடு
✓
மாரிமழை பொழியவென் றாடாடு பக்தா
மாநதிகள் வழியவென்றாடாடு பக்தா
பாரினிலே பகைவன்மை மாவினைக ளெல்லாம்
பற்றறுத் தொழிய வென்றாடாடு பக்தா - ஆடாடு
✓
செந்நெல் செழிக்க வென்றாடாடு பக்தா
செல்வங் கொழிக்க வென்றாடாடு பக்தர்
பன்னிருகை வேலவனின் நல்லருள்களெல்லாம்
பாலர்க்களிக்க வென்றாடாடு பக்தா - ஆடாடு
✓
வேலோடு வாவென்று ஆடாடுபக்தா
விருதோடு வாவென்று ஆடாடு பக்தா
பாலோடு சர்க்கரையு முக்கனிபடைத்து
பக்தி செய்வோமென்று ஆடாடுபக்தா - ஆடாடு
✓
கற்பூரங் காட்டிநின்றாடாடு பக்தா
கையாட்டி யாட்டியே ஆடாடு பக்தர்
அற்புதம் தாதவென்று ஆடாடு பக்தா
அன்பர்முன் வாவென்று ஆடாடுபக்தா - ஆடாடு
✓
கூத்தாடி யாடியே ஆடாடு பக்தா
குரவையிட்டழுது ஆடாடு பக்தா
நேத்திரம் நீர்சொரிய ஆடாடு பக்தா
நெஞ்சில் நேசம்செறிய ஆடாடுபக்தா - ஆடாடு
✓
வேண்டுவன வேண்டி நின்றாடாடு பக்தா
வேதங்களோதி நின்றாடாடு பக்தா
ஆண்டு தோறும் வந்து ஆடாடுபக்தா
ஆனந்த சந்நிதிமுன் ஆடாடுபக்தா - ஆடாடு