முருகன் App
செல்வச்சந்நிதித் திருப்பதிகம்
த.பொ. கார்த்திகேசு
விருத்தம்1 / 1
செல்வச்சந்நிதித் திருப்பதிகம் · த.பொ. கார்த்திகேசு

விருத்தம்

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
✓
அன்புகொண் டோர்தமக்கு அகலாத அப்பனே
அண்ணலே ஆறுமுகனே
ஆர்வமுடன் இன்னல்கள் அகற்றிடும் மெய்யனே
அடியேன்நான் என்செய்குவேன்
துன்புகொண் டோர்எவரும் துதித்திடத் தொடர்ந்துநீ
துரிதமாய்ச் சுடர்வேலுடன்
தோகையில் மீதேறித் தொல்லைகள் நீக்கியே
தோற்றிநீ ஆண்டருளுவாய்
✓
இன்புகொண் டிடத்தேவர் இயைந்துமே ஏத்திட
எதிர்த்தவுணர் குலமழித்தோய்
எந்தையே ஏழையேன் என்னையும் இவ்வேளை
இரட்சிக்க வேண்டுகின்றேன்
சன்மித்த நீயே சரணமுனை நம்பினேன்
தாங்குத லுன்கடன்காண்
சந்ததம் புகழ்தொண்டை மானாற்றி லமர்செல்வச்
சந்நிதி வேன்முருகனே.
✓
எங்கும்ம ருந்துசெய்வித் தேலாதுன் சந்நிதியில்
ஏத்தித் தொழுதபேர்க்கு
இசைந்தநின் மருந்தினால் எவ்வித நோய்களையும்
எளிதினில் நீகளைந்தே
தங்குசென்மப் பிணிக்கும் மருந்தாகுந் தற்பரா
தகுஞான பண்டிதா
தருணமிது வந்தெனையும் தான்காக்க வேண்டினேன்
சடாட்சரா கந்தவேளே
✓
இங்குமுனை நம்பினேன் ஏற்றதுணை வேறில்லை
ஏங்கித் தவித்துநின்றேன்
எழிலாருந் தெய்வமே இன்ப சஞ்சீவியே
இறைவனே யருள்புரிகுவாய்
சங்குதவழ் நெய்தலும் தென்றல்நன் மாருதமும்
சார்ந்தினி திலங்குகின்ற
சந்ததம் புகழ்தொண்டை மானாற்றி லமர்செல்வச்
சந்நிதி வேன்முருகனே.
✓
ஒளியுநீ இருளுநீ ஒலியுநீ ஒருவனீ
உலகங்கள் அனைத்தும்நீயே
உரைக்கின்ற மறைகள்நீ ஓதுவாக மங்கள்நீ
ஒளிர்ந்திடும் உட்பொருளுநீ
வளியுநீ ககனநீ புனலுநீ அனலுநீ
மண்ணுநீ மற்றவையுநீ
வடிவுக்கோர் தெய்வநீ வகையுள அறிவாற்றல்
வருசெயல்கள் யாவுநீயே
அளியிலா நெஞ்சினேன் அனுதினம் நினையாது
ஆணவங் கொண்டலைந்தேன்
அப்பனே பிழைபொறுத் தடியேற்கு நின்கருணை
அளித்தென்றும் ஆண்டருளுவாய்
தளியிலும் மற்றுமுள தலங்களிலு முறைகின்ற
சத்தனே சாத்துவிதனே
சந்ததம் புகழ்தொண்டை மானாற்றி லமர்செல்வச்
சந்நிதி வேன்முருகனே.