முருகன் App
சோதிமயில் ஏறிவரும் முருகனே
வி. கந்தவனம்
பாடல்1 / 1
சோதிமயில் ஏறிவரும் முருகனே · வி. கந்தவனம்

பாடல்

✓
பரமசிவன் கருணையுரு மைந்தனே — ஆறுமுகம்
சொரியும் நலச்சோதி எழிற் கந்தனே
கருதரிய சூழ்ச்சிபுரி சூரனை — தேவர்தொழப்
பொருதழியச் செய்தபெரு வீரனே!
✓
கூறுபயன் பாடுகுறை தொண்டைமா — னாறுகுடி
யேறிவிளை யாடமனங் கொண்டதேன்?
ஆறுபடை வீடுக ளுகந்தவே — பேறுமிகு
கூறுமடி யார்பிடிவ லுகந்தவோ?
✓
மாசிலறு மாகமம் எறிந்ததேன் — ஏழைகளின்
வாசியெனச் சந்நிதி நிறைந்ததேன்?
பூசைபுதி தால்நிறைவு கொள்ளவோ — வடமருயர்
பேசுதமி ழின்பொருளை யள்ளவோ?
✓
தந்தைக்குப தேசம்புரி தனையனே — தமிழ் ஒளவை
சிந்தை மகிழச்செய்த வினியனே
பந்தயம் தமையனுடன் கண்டவா — பழனிதனில்
விந்தையருப் பூண்டுகுடி கொண்டவா!
✓
வேல்வடிவில் விளங்குவது மென்னவோ — ஆறுமுகத்
தாலருளும் அழகெங்கு மன்னவா?
வேல் செயலில் மேலென்னுந் தென்பதோ — அன்பர்பகை
வேலினது போர்க்கும்படை என்பதோ?
✓
கருவியது கருத்தாவோ வேலனே — நின்கூத்தைப்
புரியவுன தருணகிரி யல்லனே
கருவிதனில் கருத்தாவைக் காணுவார் — வேறெதுவுந்
தெரியாதுன் னருள்வடிவே பேணுவார்!
✓
சோதிமயில் ஏறிவரும் முருகனே — மாலயனின்
வேதமகள் படருபுய மருகனே!
தீதிலளங் குறவர்குலக் கொடியினை — மணம்புரிந்து
சாதியிடர் களைந்தபெருங் கடவுளே!
✓
ஆயுர்வே தியருலப் பிலாரிந்
தார்பொரு ளளப்பில பறித்தவிடத்
மானவை யெலாம்விடுத் தமரரடியேன்
பிணிக்கஞ்சி யோடினர் சோதிடர்
மாயுநா ளளவிலக் கணித்துப்
பிணிக்கெதிர் வராதொழிந் தார்மந்திரர்
வாய்மென்று மென்றுவெட் கித்தரும்
பாரிநரை மாட்டுபிணி யோட்டியருள்வாய்
வேயுளெழு முத்துண்மணியே புனக்கணியே
விழைந்திடு மெனக்கணியதே
வீறு செந்தூரோ கம்பாற் கரியாதி
வெற்பின்விளை தருமருந்தே
தோயுமெந் னாவிலுன் னாமமெந்
நாளுமே சொல்ல வெளிதாகிவந்த
சுத்தனே கல்லோடை வைத்தநே
யத்தனே தொத்துநீபத்தொடையனே.
✓
எண்ணிரண் டாண்டுதொட் டிதுகாறும்
நாத்தழும் பேறரோ மாஞ்சிதமுற
விங்கியுணர் வழுமொழி குழறவச
மழிய வுள் ளன்புநெக்குருக மழைபோற்
கண்ணிரண் டும் பொழிய வானந்த
நீரன்னை காணாத மகவுபோலக்
கதிரினைக் காணாத வுலகுபோ
லையநின்றாள் மலர்கள் பாடிவீழ்ந்தேன்
பெண்ணிரண் டாண்ட விருபாகனே
யேகனே பின்னைநா னென்னசெய்வேன்
பெற்றதந் தாய் பராமுகமே
னுனக்கெனைப் பேணி யினியாள்கடனே
சுண்ணவெண் ணீறார்ந்த பண்ணவக்
குமரரே துரியவடி வாகிநின்ற
சுத்தனே கல்லோடை வைத்தநே
யத்தனே தொத்துநீபத்தொடையனே
✓
வேலுமயி லுந்துணையெனச் சதா காலமும்
விருப்புடனுரைக்க வருள்க
மெய்ப்பிணியொ ரெட்டுணையு மணுகாது
பாறியெமை விலகிவிட் டோடவருள்க
ஏலுமள வும்பிச்சை யென்பார்
நடுங்க னிலையென்னாது வழங்கவருள்க
வில்லையென்பார் பாலிரங்கு
நல்குரவோடியெனை யகன்றோடவருள்க
காலுநம னும்பாச கயிறோடு வரினயிற்
காட்டிமயி லோட்டிவருக
கண்ணின்மணி யேயினி யெனக்குருகி யனவரத
காட்சி தந்தருள வருக
தோலுமணியுங் கொண்ட மாலவன்
மருகனே சோதிமயமான தில்லைச்
சுத்தனே கல்லோடை வைத்தநே
யத்தனே தொத்து நீபத்தொடையனே.