திருக்குமரன் திருப்பதிகம்
ஸ்ரீ ராகவன்
பதிகம்1 / 1
திருக்குமரன் திருப்பதிகம் · ஸ்ரீ ராகவன்
பதிகம்
1✓
முருகன் குமரன் குகனென் றுமொழிந்
துருகும் மனமே உவகை பெறுமே
கருணை பொழியும் கதிர்வே லவனை
ஒருநா ளுமறந் தொழியே னுழலேன்!
2✓
கந்தா குமரா கதிர்வே லவனே
மைந்தா முருகா மறைநா யகனே!
சிந்தா குலம்தீர்த் தேநீ யருள்வாய்
வந்தாள் எனையே வரமும் தருவாய்!
3✓
கந்தா சரணம் கதிர்வேல் சரணம்
சிந்தா மணியே தருணம் சரணம்
முருகா சரணம் முகுந்தன் மருகா
மூவா முதல்வா சரணம் சரணம்!
4✓
மூஷிக வாஹனன் தம்பீ சரணம்
வேத முதல்வா சரணம் சரணம்
விண்ணோர் வணங்கும் வேடுவ சரணம்
விருத்தனே சரணம் விருக்கனே சரணம்!
5✓
சரவண பவனே சரணம் சரணம்
ஹரவர ஸுதனே சரணம் சரணம்
சதுரா ஷண்முகா சரணம் சரணம்
வரதா வளம்தாள் சரணம் சரணம்!
6✓
சேவற் கொடியோன் சீக்கிரம் வருக
பாவம் பிணியும் போக்கிட வருக
கூவிய ழைக்கும் கூக்குரல் கேட்டு
வாவா வேலா வந்தே காக்க!
7✓
சூரனைத் துணித்த சுந்தரா வருக
வீரக் குமரா வள்ளி மணாளா
பாரில் உள்ளோர் வல்வினை போக்கிச்
சீராய் அருளே செந்தில் முருகா!
8✓
கந்தா சரணம் கடம்பா சரணம்
கார்த்திகை பாலா குருவே சரணம்
காராய்க் கலைமகள் நாவினில் நாளும்
சீராய் இருந்திடச் செய்திட வருக!
9✓
மாதவக் கண்ணன் மாயோன் மருகா
வள்ளி மணாளா வளமை தருக
வாழ்வைத் தந்திடு வறுமை நீக்கிடு
வணங்கும் எம்மோர் வழியே நின்றிடு! (வந்திடு)
10✓
குருவே போற்றி குமரா போற்றி
திருவே போற்றி செல்வா போற்றி
சிவனின் மைந்தா ஷண்முகா போற்றி
பரனே போற்றி! பார்வதி பாலா!
11✓
அறுமுகத் தரசே அண்ணலே போற்றி
அழகுக் குமரன் அடியே போற்றி
இனியன் குழகன் இணையடி போற்றின்
இனிதே வருவான்! இதமே தருவான்!!