திருச்செந்தூர் நீரோட்டக யமக அந்தாதி
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்
திருச்செந்தூர் நீரோட்டக யமக அந்தாதி · துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்
நூல்
2கட்டளைக் கலித்துறைகள்✓
யானைக்கண் டங்கரி சென்றேத் தெழிற்செந்தி லின்றடைந்தே
யானைக்கண் டங்கரி யற்கங் கயிலையை யேய்த்ததகை
யானைக்கண் டங்கரி சேரெண்டிக் காக்கினற் கீநலிசை
யானைக்கண் டங்கரி தாகிய சீர்க்கதி யெய்தினனே.
3✓
தினகர னந்த நனியிலங் காநின்ற செய்யநற்செந்
தினகர னந்த நிதியா யினனடற் சீரயிலேந்
தினகர னந்த கனைச்செற்ற தாளர் திகழ்கனகா
தினகர னந்த நடனர் தனயனென் சிந்தையனே.
4✓
சிந்தனை யாகத் திசையந் தணர்க்கிறை சேரகங்க
சிந்தனை யாகத் தரையளித் தாடரை சென்றிரந்த
சிந்தனை யாகத் திடையியைந் தான்றந்த சேயளியாற்
சிந்தனை யாகத்த நற்செந்தி லாய்நினைச் சேர்ந்தனனே.
5✓
தனத்தலங் கார நிறைநா ரியரந் தரத்தசைகே
தனத்தலங் கார நிகழரங் காடச்செய் தன்னினயத்
தனத்தலங் கார தராயியங் கத்தக்க தண்செந்திற்கந்
தனத்தலங் காரனை யானய னேத்திடத் தங்கினனே.
6✓
தங்கந் தனங்க ளடையத் தனியெனைத் தள்ளியங்கே
தங்கந் தனங்க டரச்சென் றனரறிந் தாரிலைகா
தங்கந் தனங்க ளலர்காக்க ணாரெழிற் றண்செந்திலார்
தங்கந் தனங்க நிகர்செக்கர் செய்சஞ் சலத்தினையே.
7✓
சலந்தர னாகந் தரித்தார்தந் தாதன் றனதிடைச்சஞ்
சலந்தர னாகந் தரைநடந் தாலெனச் சார்ந்ததண்டன்
சலந்தர னாகந் தளரச்செற் றார்தன யன்றலநச்
சலந்தர னாகந் தனக்கிறை சேர்செந்திற் சார்ந்திடற்கே.
8✓
சாரங்கஞ் சங்கரி கட்சிச்சித் தேய்ந்தகைச் சங்கரனார்
சாரங்கஞ் சங்கரி தாஞ்சக் கரங்கையிற் றாங்கினன்சேய்
சாரங்கஞ் சங்கரி யாநண் ணினர்க்கந்தத் தந்திரத்தா
சாரங்கஞ் சங்கரி தேயெனச் செய்நின் சரண்டந்ததே.
9✓
தந்தனஞ் சங்கை யணிகரர் சேர்க்கத் தடங்கணலை
தந்தனஞ் சங்கை யலரென்செய் யாடங்கச் சற்சனர்பித்
தந்தனஞ் சங்கை யகலறத் தீசெந்திற் சார்கதனித்
தந்தனஞ் சங்கை யநக னிலையனற் றாடரற்கே.
10✓
தரங்கனந் தார னனியேற் றெழிற்செந்திற் றந்தைநிரந்
தரங்கனந் தாரக நாடினென் றேநினை சத்தியரந்
தரங்கனந் தார நகரீசர் சேய்கிரித் தையலர்க்கந்
தரங்கனந் தாரள கஞ்சிற் றிடைசல சங்கண்களே.
11✓
சங்கங் களங்கழ னிக்கரை சேர்செந்திற் றங்கினநஞ்
சங்கங் களங்கர நண்ணரன் சேயெய்தச் சார்ந்தனஞ்சற்
சங்கங் களங்க னியைநிகர் தண்ட தரற்கினிய
சங்கங் களங்க ரெனநின்ற யாங்கணெஞ் சங்கரைந்தே.
12✓
கரத்தரிக் கங்கணங் கட்டர னார்தந்த கந்தரழ
கரத்தரிக் கங்கணங் கண்டசெய்ச் செந்திலெங் காங்கெயர்சா
கரத்தரிக் கங்கணங் கட்கய னார்கெழிற் காசணிசே
கரத்தரிக் கங்கணங் கற்றிடத் தாங்கினர் கைச்சத்தியே.
13✓
சத்திக் கரத்த னகச்சேயங் கத்தினைத் தந்தனனற்
சத்திக் கரத்த னகச்சிலை யாளிதன் றாளிணைநே
சத்திக் கரத்த னகத்தியைந் தேத்தரன் தந்தகதிர்ச்
சத்திக் கரத்த னகசெந்தி லாய்நின் சரண்சரணே.
14✓
சரிதங்கை யாரக் கலன்றந் தனந்தரித் தார்நரகே
சரிதங்கை யாரக் கரிடத்தி னார்தந்த தண்செந்தினே
சரிதங்கை யாரக் கணத்தின்னல் கைத்தல் சரதந்தஞ்சீர்ச்
சரிதங்கை யாரக் கசிந்திசைக் கின்ற தகையினர்க்கே.
15✓
இனனந்தி யங்கி நிகர்த்தசெங் கேழன்கை யீரிரண்டா
யினனந்தி யங்கிரி யைச்சிலை யாக்கிதன் சேயெழிற்செய்
யினனந்தி யங்கி யிருங்கஞ்சஞ் சேர்செந்தி லெந்தைதனை
யினனந்தி யங்கிசை யக்கதி யீந்தன னென்றனக்கே.
16✓
தனக்கடங் காரெயில் செற்றகங் காளன் றனயனங்கந்
தனக்கடங் காதிழி தந்திக் கிளையன றளிரெழிற்சந்
தனக்கடங் காநிறை செந்திலி னாற்சேய் சயிலநங்கை
தனக்கடங் காணினச் சாரிலை யண்ண றரணியிலே.
17✓
தரணி யனைய நிறத்தண்ண லாரிரந் தன்றளந்த
தரணி யனைய னிறைஞ்சயி லார்நற் றனிச்சிலையாந்
தரணி யனைய னகனணை யந்தரி தந்திடுகந்
தரணி யனையனெஞ் சேயலர்த் தாள்க டரித்திறைஞ்சே.
18✓
தரிக்கனத் தங்கலை நீள்சடைக் கைக்கனற் சங்கரனந்
தரிக்கனந் தங்கலை நீதிகள் சாற்றரன் றந்தநற்கந்
தரிக்கனந் தங்கலை நீர்ச்செய்க்க ணாஞ்செந்தி லார்தளையா
தரிக்கனந் தங்கலை நீத்திழந் தேங்கரச் சங்கங்களே.
19✓
சங்கரி யக்க நிகர்த்தநின் றாதை தகையதென்னச்
சங்கரி யக்க ரிறைஞ்செழிற் செந்திற் சடானனகஞ்
சங்கரி யக்கதிர் தானிசை கின்ற சரணத்தினாற்
சங்கரி யக்கணத் தேயெற் செறியந் தகற்சினந்தே.
20✓
தகர னலங்க நிறைநிறத் தான்செந்திற் றந்தைசங்கேயந்
தகர னலங்க னளினா தனத்தினன் றாழளகந்
தகர னலங்க டரநின்ற சத்தியன் றாளெனினந்
தகர னலங்கனன் றாலெனச் சீறிடத் தக்கரன்றே.
21✓
தக்க னகத்தி னடறணித் தானயன் றன்கதிசந்
தக்க னகத்தி கிரிக்கர னாக்கங்க டந்தளிக்கத்
தக்க னகத்தி யனையாளி யென்னெஞ்ச தாஞ்சலசந்
தக்க னகத்தி னகரன்றன் செந்திலைச் சந்திக்கினே.
22✓
சந்தத்த னத்திக டந்திறத் தாசை தலத்தினிச்சை
சந்தத்த னத்தி னசைதீ ரடியன் றனதிலிற்சேர்
சந்தத்த னத்தி யதாளான் றனய தடக்கயல்கஞ்
சந்தத்த னத்தி னினங்கீ ழிழிசெந்திற் றங்கினற்கே.
23✓
தங்கச் சினகர நேராக் கலந்திச் சகநிறைந்தார்
தங்கச் சினகர நேயர் தனயன் றனக்கினிதாந்
தங்கச் சினகர நீள்செந்தி னாட்டிற் றனகரிதந்
தங்கச் சினகர நற்கன னென்னங் கடையலர்க்கே.
24✓
அலரின னந்தலை யாழிகண் டாங்குச் சிகியினிடை
யலரின னந்த நிகரயி லான்செந்தி லாயிழையை
யலரின னந்த நினைநிலந் தேர்ந்ததற் கன்றயலா
ரலரின னந்தஞ் சொலற்கிட னாநெஞ் சழிகின்றதே.
25✓
தேயத் தியங்கி யலகி றலங்களிற் சென்றடிகள்
தேயத் தியங்கி யலைய றிடங்கதி சேர்தலறைந்
தேயத்தி யங்கின நித்திலந் தானெறி செந்திலடைந்
தேயத்தி யங்கி தரித்தான் றனயற் றெரிசிக்கினே.
26✓
சிக்கத் தனங்க டிறக்கின்ற கன்னியர் சிந்தைகணே
சிக்கத் தனங்க ளளித்தழிந் தேற்கெழிற் செந்திறரி
சிக்கத் தனங்க ழலையேத்த நல்கினன் சீர்நிறைகா
சிக்கத் தனங்க ளகிலேசன் றந்த திறற்கந்தனே.
27✓
கந்தரங் கானந்த னிற்சென் றடங்கிலென் காசிக்கநே
கந்தரங் கானந்த நண்ணிலென் கன்னியர் கட்டளக
கந்தரங் கானந்த நின்றா டெழிற்செந்திற் கண்டிறைஞ்சிக்
கந்தரங் கானந்த நல்கச் சனனங் கடந்திலரே.
28✓
கடனந்தி னாகத் ததளாடை யாயெனைக் காக்கனிற்கே
கடனந்தி நாணிறத் தாயென நாரணன் கண்டிறைஞ்செங்
கடனந்தி நாதன் றனயனற் செந்திலிற் காரிகையே
கடனந்தி னாயகங் காதலர் தேரிற் கலிக்கின்றதே.
29✓
கணக்காக நாய்கடின் காய நிலையெனக் கண்ணியென்ன
கணக்காக நானலைந் தெய்த்தே னெழிற்செந்திற் கந்தநெற்றிக்
கணக்காக னார்தந்த நின்றனை யேயினிக் காதலினாற்
கணக்காக னாநிகர்த் தேயழி யங்கத்தின் காதலற்றே.
30✓
காதலை யானின்றனாக்காக் கினனினிக் காயந்தந்தே
காதலை யானின் றனக்கா ரணனடிக் கஞ்சங்கணீங்
காதலை யானின் றகங்கரைந் தேத்தரன் கண்ணியராக்
காதலை யானின்ற சங்கரன் சேய்செந்திற் காங்கெயனே.
31✓
காயங் கலைய நலியந் தகனணை காலஞ்செய்ய
காயங் கலையத ளானில நீரழல் காற்றெழிலா
காயங் கலையன லரிசித் தாயினன் காதலழ
காயங் கலையதி ருஞ்செந்தி லாயென்க கன்றனெஞ்சே.