முருகன் App
திருவெழுகூற்றிருக்கை
அருணகிரிநாதர்
பாடல்1 / 1
திருவெழுகூற்றிருக்கை · அருணகிரிநாதர்

பாடல்

1✓
ஒருரு வாகிய தாரகப் பிரமத்
தொருவகைத் தோற்றத் திருமர மெய்தி
ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி
மூவா தாயினை;
இருபிறப் பாளரி னொருவ னாயினை;
ஓராச் செய்கையி னிருமையின் முன்னாள்
நான்முகன் குடுமி ஒருநொடி பெயர்த்து
மூவரும் போந்து இருதாள் வேண்ட
ஒருசிறை யிட்டனை;
ஒருநொடி யதனில் இருசிறை மயிலின்
முந்நீர் உடுத்த நானிலம் அஞ்ச
நீவலம் செய்தனை;
நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி
ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை;
ஒருவகை வடிவினில் இருவகைத் தாகி
மும்மதன் தனக்கு மூத்தோன் ஆயினை;
நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்
அறுகு தூடிக் கிளையோன் ஆயினை;
ஐந்தெழுத் ததனில் நான்மறை உணர்ந்த
முக்கட் சுடரினை இருவினை மருந்துக்
கொருகுரு வாயினை;
ஒருநாள் உமையிரு முலைப்பால் அருந்தி
முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்
ஐம்புலக் கிழவன் அறுமுகன் இவன்என
எழில்தரும் அழகுடன் கழுமலத் துதித்தனை;
அறுமீன் பயந்தனை; ஐந்தரு வேந்தன்
நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்டு
அன்றில் அங்கிரி இருபிளவாக
ஒருவேல் விடுத்தனை;
காவிரி வடகரை மேவிய குருகிரிஇருந்த
ஆறெழுத் தந்தணர் அடியிணை போற்ற
ஏரகத் திறைவன் எனஇருந் தனையே.