வேல் பாட்டு
அருணாசல அரனடிகள் குக ஸ்ரீலஸ்ரீ
பாடல்1 / 1
வேல் பாட்டு · அருணாசல அரனடிகள் குக ஸ்ரீலஸ்ரீ
பாடல்
✓
சீர்மேவும் எட்டுக்குடி வாழும் வேல்வேல்
தெய்வயானை தன்னுடைய செல்வனே நீ வாவா
பார்புகழும் சிந்துதமிழ் பாட வேல்வேல்
பன்னிருகை யாண்டியு நீ முன்னருளவாவா
எச்சரிக்கை என்றிடும்பன் கூற வேல்வேல்
இருபுறங் காவடிகள் நின்றிடுதே வாவா
பச்சைமயி லேறுகின்ற பாலா வேல்வேல்
பக்ஷம்வைத்து என்கலியைத் தீர்த்திடவும்வாவா
அன்பான சந்நிதியில் வந்து வேல்வேல்
ஆறுமுக வேலவனே ஆதரிக்கவாவா
நாதமொடு கீதங்களும் முழங்க வேல்வேல்
நாதாந்த மெய்ப்பொருளை நம்பினேனேவாவா
காணிக்கை கொண்டு வெகுகோடி வேல்வேல்
காத்திருக்கார் சுவாமிமலை ஆண்டவனேவாவா
மச்சங்களின் காவடிகளதுவும் வேல்வேல்
மகிழ்ச்சியாய் வந்திருக்கு கண்டிடவும்வாவா
ஆற்றுமணல் சர்க்கரையு மாக வேல்வேல்
அன்பான காவடிகள் வந்திருக்குவாவா
எத்தனை அலகுகளோ பூண்டு வேல்வேல்
எண்ணிறந்த காவடிகள் வந்திருக்குவாவா
வெள்ளிரதக் காவடிகள் கோடி வேல்வேல்
வெகுவாக வந்திருக்கு கண்டிடவும்வாவா
மெய்முழு தலக்குகளும் பூண்டு வேல்வேல்
மேதினியோர் நெருங்கிட வந்திருக்குவாவா
அலகுமேல் காவடிகள் நிறுத்தி வேல்வேல்
ஆலவட்டம் பறக்குதே ஐயனேநீவாவா
கானமயில் காவடிகள் கோடி வேல்வேல்
கொண்டுவந்து நின்றிருக்கு கண்டிடவும்வாவா
பூந்தேரும் ரதங்களும் வருதே வேல்வேல்
பூமிமுழு தாடுமயில் வாகனனேவாவா
அபிஷேக சாமான்க ளெடுத்து வேல்வேல்
ஆடிவருங் காவடிகள் கண்டி வும்வாவா
தேவர்கள் நெருங்கி வரக்கூடி வேல்வேல்
தேசங்களி லுள்ளவர்கள் தெரிந்திடவேவாவா
வேதியர்கள் ஒருபுறமுங்கூடி வேல்வேல்
வீதிகளில் வேதங்களும் முழங்குதே நீவாவா
தங்கரத காவடிகள் உந்தன் வேல்வேல்
சந்நிதியில் வந்துவிளை யாடுதிதோவாவா
ஆலவட்டம் சாமரங்கள் பிடித்து வேல்வேல்
அசைந்தாடுங் காவடிகள் வந்திருக்குவாவா
எத்தனை விதக் காவடிகள் வருதே வேல்வேல்
எண்ணிடவும் முடியுமோசொல் புண்ணியனேவாவா
அன்பான சந்நிதியின் முன்னே வேல்வேல்
அடியார்கள் வந்திருக்கார் ஐயனே நீவாவா
மூல கணபதிக் கிளையோனே வேல்வேல்
முப்பொருளு மானசிவ சற்குருவேவாவா
ஆண்டிமக னாண்டி மலையாண்டி வேல்வேல்
ஆண்டிசிலை யாண்டிமக னாண்டி யேநீவாவா
மந்திரஞ்சேர் மெய்ப்பொருளே உன்னை வேல்வேல்
வாலையம்ம னீன்றெடுத்த மாமுனியேவாவா
அன்பருள மேவுகின்ற மணியே வேல்வேல்
ஆராரோ ஆறுமுக தெய்வமே நீவாவா
உம்பர்குலம் வாழவந்த நாதா வேல்வேல்
ஓம்நம சிவாயகுரு தேசிகனேவாவா
தென்பொதிகை அகஸ்தியரும் பணிய வேல்வேல்
சிவசிவா எங்களுட செல்வனே நீ வாவா
பூரணமாய் நின்றபரம் பொருளே வேல்வேல்
பூரிப்புடன் இச்சமயம் புண்ணியனேவாவா
நாடுகின்ற மெய்ப்பொருளே சுவாமி வேல்வேல்
நாதாந்த லட்சணியாள் பாலனேவாவா
தேடுகின்ற மெய்ப்பொருளே ஐயா வேல்வேல்
சிவசிவா சின்மயனே செல்வனே நீவாவா
துப்பையனே சுவாமிமலை நாதா வேல்வேல்
துதித்திடும்உன் னடியார்க்கு அருள்புரியவாவா
ஆடுகின்ற நாதாந்தப் பொருளே வேல்வேல்
அடிமையைக் காத்தருள ஐயனே நீவாவா
கோலமயில் மீதினிலே குமரா வேல்வேல்
குழகனேஉன் னருள் கொடுக்க வள்ளியுடன் வாவா
ஈராறு பன்னிருகை வேலா வேல்வேல்
இருவினைகள் நீங்கிடவும் வந்தருளவாவா
அரகரா திருச்செந்தூர் வேலா வேல்வேல்
ஆறுமுக தேசிகனே ஐயனே நீவாவா
சரவண பவகுரு நாதா வேல்வேல்
சுவாமிமலை மீதமர்ந்த சற்குருவே வாவா
பொன்னுமணி உன்னழகைக் கூற வேல்வேல்
மன்னுமாதி சேடனாலும் முடியுமோ நீவாவா
கண்டவர்கள் கன்மவினை யோட வேல்வேல்
அண்டர்களும் வந்திருக்க ஐயனே நீவாவா
கார்த்திகையில் வந்துனது பாதம் வேல்வேல்
கண்டவர் துயரமது நீங்கிடவும் வாவா
சித்திரை பருவமதில் காண வேல்வேல்
சீர்பெறவும் வந்திருக்கார் ஐயனே நீவாவா
பங்குனி உத்திரத்திற் காண வேல்வேல்
தங்கியிருக் கிறாருந்தன் சந்நிதியில்வாவா
அபிஷேகம் நடப்பதனைப் பார்க்க வேல்வேல்
அனைவோர்கள் வந்திருக்கார் ஐயனே நீவாவா
எலுமிச்சை நாரத்தம் பழங்கள் வேல்வேல்
ஏகமாகப் பன்னீரது வந்திருக்குவாவா
சந்தனாபி ஷேகமதைக் காண வேல்வேல்
சர்வஜனங் கூடிவிட்டார் சற்குணனே வாவா
விபூதி அபிஷேகமதைப் பார்க்க வேல்வேல்
விஞ்சையர்கள் கூடிவந்து நிற்கிறார்கள் வாவா
காவிவஸ் திரமிடையி லுடுத்தி வேல்வேல்
கண்டத்தில் ருத்திராக்ஷமாலைக் காணவுமேவாவா
கையினில்வே லாயுதத்தின் காட்சி வேல்வேல்
கண்டிடவும் தேவர்களும் வந்திருக்கார்வாவா
எட்டுக்குடிச் சந்நிதியைப் பார்க்க வேல்வேல்
இந்திரலோகங் கயிலைமலை ஈடல்லவேவாவா
இடும்பன் சந்நிதியினிலே வந்து வேல்வேல்
இறங்கிடுங் காவடிக்கு இடமில்லையே வாவா
பரம சற்குரு வடிவேலா வேல்வேல்
பரமனுடை யதிரு பாலகனே வாவா
தென்பொதிகை வாழுங்குரு முனிக்கு வேல்வேல்
தெரியஉப தேசமதைச் செய்தவரே வாவா
அண்டர்கள் கிடுகிடென நடுங்க வேல்வேல்
அசுரர்களை வேரறுத்த ஐயனே நீ வாவா
தேவர்கள் சேனாதிபதியும் நீயே வேல்வேல்
தெய்வயானையு மகிழ்ந்திடும் செல்வனும் நீயே
முக்கனி சர்க்கரை பாலுடனே வேல்வேல்
முனிவர்கள் கூட்டத்துடன் வந்திருக்கார்வாவா
முத்துக்கும ரேசமுரு கையா வேல்வேல்
முப்புர மெரித்தவரின் புத்திரனே வாவா
ஆறுபடை வீடதனில் மேவும் வேல்வேல்
ஆறுமுகத் தையனே நீ அன்புடனே வாவா
சத்துரு சங்காரவடி வேலா வேல்வேல்
சாமிமலை மீதமர்ந்த சற்குருவே வாவா
ஆதிசிவ ரூபமய மான வேல்வேல்
அகண்ட பரஞ்சுடரே ஐயனே நீவாவா
ஏரகத்தமர்ந்த குரு சுவாமி வேல்வேல்
எங்கள்வினை தீர்த்திடவே எழுந்தருளிவாவா
காவியுடை தண்டுகமண் டலமும் வேல்வேல்
கையில்வடி வேலுடனே காட்சிதரவாவா