முருகன் App
வேலாயுதக்கண்ணி
த.பொ. கார்த்திகேசு
பாடல்1 / 1
வேலாயுதக்கண்ணி · த.பொ. கார்த்திகேசு

பாடல்

✓
சொற்கண்ட தொண்டைமான் ஆறதனில் தோற்றியே
விற்கொண்ட வள்ளியொடு விளங்கும்வே லாயுதனே
செல்வச் சந்நிதியே தீர்க்கும் வினைகளென்ற
கல்வியுளோர் தம்கருத்தே காக்கும்வே லாயுதனே
கதிர்காமக் காட்சிகளைக் காட்டுநற் சந்நிதியாய்
கதிர்வேலா என்னைநீ காப்பாய்வே லாயுதனே
வேண்டுவார் வேண்டியதை வேண்டியவா றேகொடுக்கும்
ஆண்டிநீ ஐயா அருள்வாய்வே லாயுதனே
உன்றன் அருளாலே உரைத்தேனிப் பாடல்தனை
என்னிரு கண்ணே இறைவாவே லாயுதனே.