முருகன் App
வேல்விருத்தம்
அருணகிரிநாதர்
அண்டர் உலகும் சுழல4 / 10
வேல்விருத்தம் · அருணகிரிநாதர்

அண்டர் உலகும் சுழல

4✓
அண்டர்உல குஞ்சுழல எண்திசைக ளுஞ்சுழல
அங்கியும் உடன்சுழலவே
அலைகடல்க ளுஞ்சுழல அவுணருயி ருஞ்சுழல
அகிலதல முஞ்சுழலவே
மண்டல நிறைந்தரவி சதகோடி மதியுதிர
மாணப் பிறங்கியணியும்
மணிஒலியி னிற்சகல தலமுமரு ளச்சிரம
வகைவகையி னிற்சுழலும் வேல்
தண்டமுட னுங்கொடிய பாசமுட னுங்கரிய
சந்தமுட னும்பிறைகள்போல்
தந்தமுட னுந்தழலும் வெங்கணுட னும்பகடு
தன்புறம் வருஞ்சமனையான்
கண்டுகுலை யும்பொழுதில் அஞ்சலென மென்சரண
கஞ்சம்உத வுங்கருணைவேள்
கந்தன்முரு கன்குமரன் வண்குறவர் தம்புதல்வி
கணவன் அடல் கொண்ட வேலே.