முருகன் App
கதிரைமுருகன் கீர்த்தனை
வீ.சீ. கந்தையா
காப்பு1 / 2
கதிரைமுருகன் கீர்த்தனை · வீ.சீ. கந்தையா

காப்பு

இராகம்- பைரவி தாளம்- ஆதி
பல்லவி✓
அருள்செய் கதிர் வேலா - ஏழை
அன்பிற்கிரங்கி வந்தே அணைத்து எனை எடுத்து(அருள்செய்)
அனுபல்லவி✓
உருகி மனம் கனிந்து உனது கதிரைப் பதி
கருதும் அடியார்க் கின்பம் காட்டி மனம் நிறைந்து(அருள்செய்)
சரணம்✓
இச்சை கிரியை ஞானம் என்ற உனது புகழ்
ஏத்தி அருள்வளர்த்தே இன்பம் பெருக உன்னை
மெச்சும் அடியார் துயர் மேவித்துடைத்து நிதம்
மேன்மைக் கலையோடன்பு வெற்றி அளிக்கும் ஐயா (அருள்செய்)
உன்னைக் கருதலன்றி ஒன்றும் நினைத்தலில் லேன்
ஊமை விளியேன் உந்தன் ஓங்கு பதம் பணிய
என்னைப் பணித்து இன்பம் ஏற்றி நலம் வளர
என்றும் உனைப்பரவி ஈடில் புகழ் விளங்க(அருள்செய்)