முருகன் App
கதிரைமுருகன் கீர்த்தனை
வீ.சீ. கந்தையா
வருவீர் கதிர்காமம்2 / 2
கதிரைமுருகன் கீர்த்தனை · வீ.சீ. கந்தையா

வருவீர் கதிர்காமம்

1கிளியைத் தூது விடுத்தேன்.....✓
கிள்ளை உரை செய்நீ கிளி மொழியாள் வள்ளி பங்கன்
தெள்ளு தமிழ் முருகன் தேனார் கடம்பணியும்
பிள்ளை கதிரை நகர் பேசும் அடியவர்க்கு
உள்ளும் பகையுளதோ உறு துயரம் உண்டாமோ!
2✓
அஞ்சுகமே செம்பவள அணிவாய் மணிக்கிள்ளாய்
கெஞ்சுகின்றேன் உன்னைக் கிளர்வான் படர்ந்தேகி
மஞ்சை வடிவேலான் மாணிக்கக் கங்கையிடைத்
தங்கத் தமிழருக்குத் தடையுளவோ கண்டிடுக,
3சென்று வந்த கிளி✓
கீழை நெடுவான் படர்ந்து கொடுமுடியும்
காடும் கடந்து கதிர்காமம் - நாடியே
வந்து மணிக்கிள்ளை வாய்திறந்து பேசுமொழி
சிந்தைதனை உருக்கும் சீர்த்து.
4✓
வள்ளிதனை அணைந்தான் மறைந்தேன் அவள்பகர்வாள்
கள்வா கதிரையுறை கந்தா தமிழர்பயம்
கொல்வாய் எனமுருகன் கூர்வேல் நுதிதொட்டான்
விள்ளும் பயம்உளதோ வேல்வேல் எனஎழுந்தேன்.
5✓
முருகன் அருள்தெய்வம் மூவே ழுலகுக்கும்
ஒருவன் அவன்தீமை ஒன்றும் அணுகவிடான்
தருவன் கதிர்வேல் தம்முள் துணைகொண்டு
வருவீர் கதிர்காமம் மனச்சோர்வு வேண்டாமே.