முருகன் App
கதிரைச் சிலேடை வெண்பா
க. சோமசுந்தரப் புலவர்
காப்பு1 / 2
கதிரைச் சிலேடை வெண்பா · க. சோமசுந்தரப் புலவர்

காப்பு

1விநாயகர்✓
கானுயிர்பூஞ் சோலைக் கதிரைச்சி லேடைவெண்பா
நானுரைக்கச் செஞ்சொ னயந்தருமே—வானவர்க்கு
முன்னானை மாமுகவன் முன்னருளு மைந்துகரத்
தன்னானை மாமுகவன் றாள்.
2மாணிக்கப் பிள்ளையார்✓
தேவரு மேத்துங் கதிரைச்சி லேடைவெண்பா
நாவரு மேத்தி நனிபணிந்தாற்—பூவருளு
மாதங்கம் பாதி வளர்வரையீ மாணிக்க
மாதங்கம் பாத மலர்.
3நாமகள்✓
காசிப் பதிநேர் கதிரைச்சி லேடைவெண்பா
பேசிப் பரவப் பெரிதருளும்—ஆசைமுகன்
அம்புயத்தி னாவி லகத்திற் சிரத்தில்வெள்ளை
அம்புயத்தில் வாழு மனம்.