கொடுமளூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஞான உலா
கவிராஜபண்டிதர்
கொடுமளூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஞான உலா · கவிராஜபண்டிதர்
நூல்
2✓
செங்கமலத் தண்ணலெழு தேவிமார் தாங்குசிவ
செங்கமலத் தண்ணலெனுஞ் செந்திலான்—செங்கமல
3✓
கங்கைமகன் கந்தன் கருணை பொழிவதனக்
கங்கைமக னான கனதையான்—கங்கையருள்
4✓
சேந்தன் குகன்கடம்பன் செவ்வே ளெனுமினிய
சேந்தன் குகன்கடம்பன் செவ்வேளன்—சேந்ததினில்
5✓
கார்த்திகேயன் முருகன் காலாயுதஞ்சிறந்த
கார்த்திகேயன் முருகன் காங்கேயன்—கார்த்திகையா
6✓
தந்த சரவணத்தான் தந்த சரவணத்தான்
தந்த சரவணத்தான் தாணுவான்—தந்தை
7✓
முதலா கமத்தான் முடிவிலோ ரைந்துமென
முதலா கமத்தான் முதலான்—முதலான
8✓
ஆறு முகத்தன் அறுமுகத்தன் தேவருக்காய்
ஆறுமுகத்தன் அறுமுகத்தன்—ஆறுமுகம்
9✓
குன்றைத்துகள் படுத்துங்கூர்வேலன் வெய்யவினைக்
குன்றைத்துகள் படுத்துங்கூர்வேலன்—குன்றெடுத்து
10✓
நின்றான் மருகன் நிமலன் திருமருகன்
நின்றான் மருமகன் நிராலம்பன்—நின்றாடுந்
11✓
தூய கலபத் துரகத் துகந்தேறுந்
தூய கலபத் துரகத்தான்—தூய
12✓
விடையா னமலன் விமலன் மருகன்
விடையா னமலன் விமலன்—விடையாள்
13✓
கமலா சனத்தான் கடைநாளில் தோன்றும்
கமலா சனத்தான் கமலன்—கமலநிறை
14✓
ஆர்க்குஞ் சரவணத்தான் ஆறு சமயவிதம்
ஆர்க்குஞ் சரவணத்தான் ஆதியான்—ஆர்ப்பரவ
15முடுகு✓
வீரமுண்டு கொண்டடர்ந்து மேலெழுந்து வங்கிபொங்கி
வீரமுண்டு சூரைவென்ற வேலினான்—வீரமிகும்
16✓
வீரனுக்ர துங்கன் விதங்கன் விலக்ஷணமால்
வீரனுக்ர துங்கன் விதங்கனான்—வீனுக்ரன்
17✓
ஆறு மிருநான்கும் ஐயைந்தும் ரண்டுபத்தும்
ஆறு மிருநான்கும் ஆகினான்—ஆறுவித
18✓
எட்டெட்டு நான்கும் இருபத்தோ ரைந்துமதில்
எட்டட்டு நான்குவீ டெய்தினான்—எட்டட்டு
19✓
முந்து முதலின் முடிவுங் கடைநடுவும்
முந்து முதலின் முடிவிலான்—முந்துமுதல்
20✓
மூவாறு மாறும் முடிவிலோ ரைந்துமென
மூவாறு மாறும் முதலினான்—மூவாறு
21✓
சஷ்டா க்ஷரத்தான் சடாக்ஷரத்தான் வீறுடைய
சஷ்டா க்ஷரத்தான் சடாக்ஷரத்தான்—சட்டமிடு
22✓
ஷட்கோண வீதி தவள நவகோண
ஷட்கோண சக்கரமாய்த் தாபிதன்—ஷட்கோணத்து
23✓
எண்ணாநான்கும் ஐந்தும் இனையிலஷ்ட கோணமற்
றெண்ணாநான்கு ஐந்துவீ டெய்தினான்—எண்ணாநான்கு
24✓
வட்டமிட்ட கோட்டை மகர வதிகார
வட்டமிட்ட கோட்டைமதில் வாசலான்—வட்டத்திட
25✓
துருவன் துருவனெனச் சொல்லிலடங் காமெளன
துருவன் துருவனெனத் தோன்றி—துருவச்
26✓
சமர துரங்க தவள லளித
சமர துரங்க சதுரன்—சமரமுக
27✓
வேதாள கோரரண பீஜாக்ஷ ரப்பிரம்ம
வேதாள கோரரண வீரன்—வேதாள
28✓
ஆதி யுரகவண ஆவன் னிதியாகி
ஆதி யுரகவண னாகினான்—ஆதிநாள்
29✓
சம்ஹார கால ஜடராக் கினிவடிவு
சம்ஹார காலவர சாம்பவன்—சம்ஹார
30✓
உதிர ரணபகிர உன்மத்தன் உத்த
உதிர ரணபகிர உன்மத்—துதிரமிகு
31✓
மாசாண ருத்ர மௌன சிவயோக
மாசாண ருத்ர மௌனத்தான்மேல்—மாசடையான்
32✓
அஷ்டவித மூர்த்த அனங்கநனி தானபர
அஷ்டவிதத் தஷ்டவித மாகினான்—அஷ்ட
33✓
திசைபுரக்குந் தேவாய்ச் செயலாய் பிரம்மாத்
திசைபுரக்குந் தேவாய்ச் செயலுற்—றிரைபுரக்கும்
34✓
இந்திரனுக் கிந்திரனாய் இன்பஞ் சிறக்கவருள்
இந்திரனுக் கிந்திரனாய் என்கோமான்—சந்த
35✓
விதுவைக் கதிரோனை வெண்டா ரகைக்கொள்
விதுவைக் கதிரையணி வேணி —விதுமேவும்
36✓
குன்றைத் திருத்தணிகைக் கோதிலாச் சோலைமலைக்
குன்றைத் திருத்தணிகைக் கோதிலான்—குன்றிலகு
37✓
ஏரகத்தி லேரகத்தும் ஏத்தித் தராதலத்தில்
ஏரகத்தில் வாழும் இறையோனாம்—ஏரகமாம்
38✓
செந்திலெனச் செந்திலெனத் தென்கோ புரநீடு
செந்திலெனச் செந்திலெனச் செந்திலான்—செந்திலான்
39✓
போரூர் கருவூர் புகுதாப் பழநிமலை
போரூர் கருவூர் பொதிந்துளான்—போரூர்
40✓
முதிர்காம நோய்க்கினிய மோன மருந்தாய்க்
கதிர்காமம் மேவுகதிர் காமன்—எதிராளும்
41✓
போராடு சூரைப் பொறுத்தாடி நீராடிப்
போராடு சூரை வென்று பூரணையான்—போரடர்ந்த
42✓
ஜமா நிலத்தி லமர்ந்தான் பினாகியெனும்
ஜமா நிலத்தில் அமர்ந்தோனே—ஜமாவின்
43✓
ஒன்று படமூலத் துதிரத் தளத்தூடே
ஒன்றுபட நின்றங் குலாவினான்—ஒன்றுபட
44✓
நாபிக் குங்கீழாக நாற்கோண மண்டபத்துள்
நாபிக்குங் கீழாக நண்ணினான்—நாபியுள்ளே
45✓
சுற்றிய நாடிச் சுழியின் வழியாகச்
சுற்றிய நாடிச் சுழிமுனையான்—சுற்றியெழும்
46✓
நாடி குணமூன்றும் நாற்கரணும் ஐம்புலனும்
நாடிகுண மூன்றும் நாடினான்—நாடிவிசை
47✓
விந்தைக் கருவில் விளையாட்டயன் மாலோன்
விந்தைக் கருவில்விளை யாடினான்—விந்தையதாம்
48✓
மேல்நாடும் ஆறும் மிசையார் பதநான்கும்
மேல்நாடு மண்டலமும் மேவினான்—மேனடுவே
49✓
போது முடித்துப் பொடிய கலைமதிசேர்
போதுமணி மண்டபத்தே போந்துளான்—போதுநிறை
50✓
தட்டைத் திறந்து தளத்துள் கமலநடுத்
தட்டைத் திறந்த தயாநிதியான்—தட்டற்ற
51✓
மேலாம் பரவெளியில் மேதினியெல்லாம் நிறைந்து
மேலாம் பரவெளியில் மேவினான்—மேலாம்
52✓
இருநான்கு சித்தி யிசையஷ்ட யோக
இருநான்கு சித்திக் கிசைந்தான்—இருநான்கு
53✓
நான்கு கலையாகி நாதவிந்துக் கப்பாலே
நான்கு கலையாகி நடஞ்செய்வோன்—நான்குகலை
54✓
ஒன்றா யிரண்டாகி ஒன்றிரண்டா யொன்றிலதாய்
ஒன்றா யிரண்டாய் உருவுள்ளோன்—ஒன்றி
55✓
உருவா யருவாய் உருவருவாய் ஒன்றி
உருவரு வாயொன்று மில்லான்—உருவருவாய்க்
56✓
கோடி ரவிமதியும் கூடி யொளிருமொளிர்
கோடி ரவிமதியும் கோடியான்—கோடி
57✓
அழியும் அழியா தனந்தமிகு கோடி
அழியும் அழியா வனந்தன்—அழியுநாட்
58✓
காலாக் கினிரூப கண்டவுப சம்ஹார
காலாக் கினிவடிவக் காக்ஷியான்—காலாக்கினி
59✓
மேலுந் தலைகீழும் மென்மேலும் அண்டபிண்டம்
மேலுந் தலைகீழும் மேவினான்—மேல்கீழ்
60✓
தலையிற் சராசரங்கள் தானாகிப் பின்னும்
தலையுட் சராசரமாய்த் தாங்கித்—தலையுச்சம்
61✓
மேனாளும் தேடும் விதிமுகிலுங் காணரிய
மேனாளும் தேடும் விதிமுகிலான்—மேனாளும்
62✓
உள்ளத்தின் உள்ளே ஒளிரும் ஒளியாகி
உள்ளத்தின் உள்ளே உறைகுவோன்—உள்ளத்தில்
63✓
வஞ்சருக்குந் தோன்றாத வஞ்சநவ வஞ்சமிலா
வஞ்சருக்குந் தோன்றும் மதிநாதன்—வஞ்சருக்குக்
64✓
கண்ணாடி கண்புருவத் தேத்தினித கண்ணாடி
கண்ணாடி கண்டவர்க்குக் காக்ஷியான்—கண்ணாடி
65✓
தோன்று சமுசாரத் துன்பச் சமுத்திரத்தில்
தோன்று சமுசாரச் சோங்கினான்—தோன்றும்
66✓
சமய பதங்கநிரு தத்துவங்கள் மேலாம்
சமய பதங்க நிருசாம்பன்—சமயபத
67✓
சம்புகௌ ரீசனென்றும் கந்தனென்றும் முன்புவரு
சம்புகௌ ரீசத் தாதையான்—சம்புவென
68✓
வந்து வசிகரத்து மாமோ கனத்துநிதம்
வந்து வசீகரமா மோஹனத்தான்—வந்துவசி
69✓
ஆகர்ஷ பேதனத்தான் ஐம்பது மொன்றானதுவே
ஆகர்ஷ பேதனத்தான் ஆதாரன்—ஆகர்ஷ
70✓
தம்பனத்தா னுச்சா டனத்தான் சருப்பகுக
தம்பனத்தான் உச்சாடனத் தானான்—தம்பனத்தான்
71✓
மாவித்து வேஷணத்தான் மாரணத்தான் நாரணத்தான்
மாவித்து வேஷணத்தான் மாரணத்தான்—மாவித்
72✓
துகார மகாரத் துதிக்குமோங் காரத்
துகார மகாரத் துறைவோன்—உகாரஞ்சேர்
73✓
வட்டரீங் கார சௌவு மாவெழில்சேர் எண்ணான்கும்
வட்டரீங் காரசௌவுள் வாழ்பவன்—வட்டிட்ட
74✓
பத்மா சனத்திலகு பஞ்சாட் சரநடுவே
பத்மா சனத்தில் பதிந்துள்ளான்—பத்மத்தின்
75✓
எட்டுமீ ரெட்டும் எழில்சேர் மகார விந்து
எட்டுமீ ரெட்டெட் டெழுத்தினான்—எட்டாத
76✓
நத்துவத்தி னுள்ளாகி நானாகித் தானாகி
நத்துவத்துள் அத்துவித ஞானபரன்—நத்துவத்து
77✓
ஐயுங் கிலியும் அகார சகாரந்தனையும்
ஐயுங் கிலியும் அமைந்துள்ளான்—ஐயார்
78✓
சயம்பு வளையேந்திச் சங்கரனுந் தானாய்ச்
சயம்புவளை யேந்து சடாதாரன்—சயம்புவளை
79✓
ஆனந்த னாதை அலரியார் மாகோரை
ஆனந்த னாதை அபிராமி—ஆனந்த
80✓
நிர்த்த நடன நிமலை அகோர
நிர்த்த நடன நிராதாரை—நிருத்தமிடும்
81✓
உன்மனா தீபத் தொளிருமோங் காரபரை
உன்மனா கண்டிநிமிர் உன்மத்தை—உன்மனையில்
82✓
அண்டமுண்ட குண்டலிமுன் அன்பர்க்கமலையாம்
அண்டமுண்ட வுந்தி அவுதாரை—அண்ட
83✓
அமிர்த கலாதீதை ஆனகரை வீர
அமிர்த கலாதஸுசு னானான்—அமுதொழுகு
84✓
தாரா தராகிரண சந்த்ரோ தயமெளலி
தாரா தராகிரண ஷண்முகன்—தாரார்
85✓
நரசிம்ம வீரரண கோரவுத் தண்ட
நரசிம்ம வீர ரவுத்ரன்—நரசிம்(ஹ)
86✓
வயிர வருக வாயுட்ப்ர காச
வயிர வருக மயூரன்—வயிரமிடும்
87✓
சங்குசக்ர சூலதண்டி யிண்டிசூலந் தாங்கும்
சங்குசக்ர சூலதார் காலன்—சங்குசக்ர
88✓
மாகால பாச வரவீர கெம்பீர
மாகால பாச வரவீரன்—மாகால்
89✓
உரகவண காள விஷமுண்ட வீரனுக்ர
உரகவண காளமுண்ட வுள்ளன்—உரகபண
90✓
வண்டலண்ட வுண்டமெளனப் பிர்யங் கதவ
வண்டலண்ட குண்ட வரநாதன்—வண்டலண்ட
91✓
வல்லலவ வல்ல லவணத் திரியாதி
வல்லலவ வல்லவண நாவணிகன்—வல்லலவ
92✓
குண்டுண்டு டுண்டு டிமிடா டிமிடாவென
குண்டு டுண்டுரண பேரிகையான்—குண்டுண்டு
93✓
திம்மிதிமி தத்தித் - திமிதத்-திமிதத்தி
திம்மிதிமி நர்த்தமிடு சேவலான்—திம்மிதிமி
94✓
சண்டப்ர சண்டநவ கண்டவுப சம்ஹார
சண்டப்ர சண்ட தகரினான்—சண்டப்ர
95✓
பூதசிவ பூதியணி பூதிசிவ தூளியணி
பூதிசிவ பூதியணி பூதியான்—பூதியான்
96✓
வஜ்ராயுதக் கவச வல்ல சபைராஜ
வஜ்ராயுதக் கவச வல்லவனார்—வஜ்ரம்
97✓
வருபூத வேதாள வஞ்சவினை யஞ்ச
வருபூத வேதாள தூளி—வருபூத
98✓
வெய்யபில்லி வஞ்சவினை மேற்செய்வார் தன்னுடலை
வெய்யபில்லி வெய்யதழல் வீழ்த்தினான்—வெய்ய
99✓
கொடுநோய்க் கருமருந்தாய் கோளர்க் கிடியாய்க்
கொடுநோய்க் கருமருந்தாய் கூலன்—கொடியார்பால்
100✓
செல்லா திருத்தித் திருவருளைத் தான்செலுத்திச்
செல்லாத செல்வமருள் செவ்வேலான்—நல்லார்
101✓
கொடுமட் பதிக்குமுயர் குன்று தோறாடல்
கொடுமட் பதிக்கோயில் கொண்டான்—கொடுந்தன்
102✓
உடைநிழல் தன்னிலே உற்றதவ யோகம்
உடையான் எனையா ளுடையான்—உடைசேரும்
103✓
செங்கமலத் தண்ணல் கெழுமறையோர் தேவர்முதல்
செங்கமலத் தாடொழுமெஞ் சேவலான்—செங்கமலத்து
104✓
உற்பவித்த அற்புதனை ஓர்தா மரையானை
உற்பவித்த நெஞ்சத் துளர்வோனை—உற்பவித்த
105✓
ஜென்மவினைக் கன்மம் செழுங்கதிர்முன் போம்பனிபோல்
ஜென்மவினை கன்மத் திரக்ஷிப்பான்—ஜென்மவினை
106✓
இல்லையப மில்லையிருள் இல்லையிடர் இருப்புவியில்
நல்லையென வாழ்வார் நயந்து