முருகன் App
குகனே போற்றி
த. சண்முகசுந்தரம்
செல்வச் சந்நிதிச் செவ்வேள் போற்றி2 / 2
குகனே போற்றி · த. சண்முகசுந்தரம்

செல்வச் சந்நிதிச் செவ்வேள் போற்றி

✓
செல்வச் சந்நிதிச் செவ்வேள் போற்றி
கல்வியும் செல்வமும் அருள்வாய் போற்றி
வெல்லும் தனிவேற் கரத்தாய் போற்றி
வல்வினை நீக்கிக் காப்பாய் போற்றி
✓
அல்லும் பகலும் நினைவார் மனத்தில்
அருளுருத் தாங்கி யமைவாய் போற்றி
நல்லா ருறையும் சந்நிதி யமர்ந்து
எல்லா நலன்களுந் தருவாய் போற்றி
காண்பவர்க் கினிய காட்சிகள் நல்கித்
✓
தாண்டவம் புரியும் தங்கவேல் போற்றி
தோணித் துறையில் தோணி யப்பனாய்
தோன்றாத் துணையருள் சுடர்வேல் போற்றி
வீண்பிற வியினில் வீழ்ந்தழி யாமல்
ஆண்டருள் புரியும் அருள்வேல் போற்றி
✓
மாண்பார் சந்நிதி மருவிய அன்பர்க்(கு)
ஊண்பே றளிக்கும் ஒளிவேல் போற்றி
முத்திக் கரையின் முத்தொளி காட்டும்
முத்துக் குமரன் கைவேல் போற்றி
பத்திசெய் யடியார் சித்திகள் பெறவே
✓
வித்தைகள் புரியும் வீரவேல் போற்றி
சுத்த நெறியில் சித்தம் வைப்பவர்
மெத்திய வினைதீர் வேலே போற்றி
நித்தமும் அடியவர் நேர்த்திகள் விரும்பும்
வித்தக ஞான வெற்றிவேல் போற்றி
✓
அழுவார் தொழுவார் அல்லல் நீக்கி
அருளொளி காட்டும் ஆதிவேல் போற்றி
விழிக்கும் வழிக்கும் பெருந்துணை யாகிய
செழிக்கும் சந்நிதிச் சீர்வேல் போற்றி
அழிக்கும் தீவினை யடுக்கா வண்ணம்
✓
தெழித்தே யுறப்பும் செய்யவேல் போற்றி
அண்டினர்க் கருளும் அருள்வேல் போற்றி
இச்சா ஞானக் கிரியையின் வடிவப்
பச்சை மயிலோன் பருவேல் போற்றி
பண்டைப் பழவினை வேரறுத் தருளும்
✓
தண்டைச் சிலம்பொளிர் தனிவேல் போற்றி
விண்ணவர் துன்பம் விரைவினி லழியத்
திண்ணிய சூர்முதல் தெறுவேல் போற்றி
மண்ணவர் மனங்கரை சந்நிதித் தலத்து
மன்னிய தனிவேல் போற்றி போற்றி
✓
குன்றம்' எறிந்து கொற்றம் தாங்கிய
வன்றிறற் படையோன் வளர்வேல் போற்றி
மன்றிலா டிக்கு மாண்பொரு ளுரைத்த
குன்றமர் குழந்தையின் கூர்வேல் போற்றி
சென்றுறு பிறவியின் வழியடைத் தருளும்
✓
வன்றிறல் குமரன் வடிவேல் போற்றி
செல்வச் சந்நிதி சேர்ந்திடு மடியருக்
கெல்லா நலமுந் தரும்வேல் போற்றி
தெய்வ குஞ்சரியும் சீர்க்குற வள்ளியும்
தைவரு குமரன் தனிவேல் போற்றி
✓
மோன மூர்த்தியா யெழுந்தருள் புரியும்
ஞானப் பழத்தின் நல்லவேல் போற்றி
உள்ளுள ருவக்கும் பேரழ கொளிரும்
தெள்ளிய ஞானத் திருவேல் போற்றி
குறுமுனிக் கினிய தமிழுமு துதவிய
✓
அறுமுகக் குமரனின் அருள்வேல் போற்றி
திருமுரு காற்றுப் படைகொண் டருளி
வருமொரு பூதம் வதைத்தவேல் போற்றி
கற்புங் காதலும் காட்டிய தமிழின்
பொற்புறு குமரனின் போர்வேல் போற்றி
✓
அன்னம் பாலித் தருள்வாய் போற்றி
முன்னிய வெல்லாம் தருதாய் போற்றி
வன்னக் காவடி முரசுடன் சங்கம்
சின்னம் விரும்பும் செவ்வேல் போற்றி
கற்பூ ரத்தொளி யூடே காட்சி
✓
பொற்புட னருளும் புனிதவேல் போற்றி
செல்வச் சந்நிதி வெற்றிவேல் போற்றி
நல்குர வொழிக்கும் நல்வேல் போற்றி
கடம்பணி குமரன் கைவேல் போற்றி
இடம்பல விலங்கும் எழில்வேல் போற்றி
✓
ஞான வடிவச் சத்திவேல் போற்றி
மோனத்தி னுள்ளே முளைத்தவேல் போற்றி
அன்னக் கந்தனின் அருள்வேல் போற்றி
சொன்ன மருளும் சுடர்வேல் போற்றி
முன்னம் குறிஞ்சியில் மோகம் விளைத்த
✓
தன்னொளிக் கந்தன் தனிவேல் போற்றி
கணபதிக் கிளையோன் கரவேல் போற்றி
குணங்கடந் தொளிரும் கூர்வேல் போற்றி
சிவசின் மயனின் சீர்வேல் போற்றி
நவகோள் நலியா வண்ணம் நல்லருள்
✓
மிகவே தந்திடும் மிளிர்வேல் போற்றி
சரவணந் தன்னில் தோன்றிய சாமியின்
அரகர ஒலிக்கு அருள்வேல் போற்றி
கார்த்திகைத் தாயர் பாலுண் டவனின்
கீர்த்தி பெருக்கும் கிளர்வேல் போற்றி
✓
நாத விந்தினில் நடனம் புரியும்
ஆதிக் குமரன் அரும்வேல் போற்றி
அன்னசத் திரத்தி லருள்கொடுத் தமரும்
வன்ன வடிவேல் போற்றி போற்றி
சந்நிதிக் கந்தன் சயவேல் போற்றி
✓
உன்னுவார் வினைதீர் ஒளிவேல் போற்றி
சரவண பவனின் சயவேல் போற்றி
அரனருள் முருகனின் ஆதிவேல் போற்றி
அரகர முருக குருபர சரவண
வரந்தர வருக வருக வருக
✓
சந்நிதிச் செல்வனின் சயவேல் காக்க
சரவண பவஓம் சரவண பவஓம்