முருகன் App
குகனே போற்றி
த. சண்முகசுந்தரம்
மாவைக் கந்தா மலரடி போற்றி1 / 2
குகனே போற்றி · த. சண்முகசுந்தரம்

மாவைக் கந்தா மலரடி போற்றி

✓
மாவைக் கந்தா மலரடி போற்றி
தேவர் சேனா பதியே போற்றி
சிந்தா குலம்தீர் செவ்வேள் போற்றி
வந்தனை செய்வார் வாழ்வே போற்றி
நந்தா விளக்கா யொளிர்வாய் போற்றி
✓
கொந்தார் கடம்பணி கோவே போற்றி
ஆரா வியற்கை யவாவினை நீக்கும்
பேரா வின்பப் பேறே போற்றி
ஏறு மயிலினி லேறி விளையாடும்
ஆறு முகத்தெம் மையா போற்றி
✓
கோயிற் கடவை யிறங்கு துறையின்
நேயப் பெயர்பொறி நிர்மலா போற்றி
கொடித்திரு விழாவிற் கோலங் காட்டி
அடியரைக் காக்கு மருளுரு போற்றி
சங்காபி டேகத் தீர்த்த மாடித்
✓
துங்க நடம்புரி தூயோய் போற்றி
வேட்டை விழாவில் வீரங் காட்டி
யாடல் புரியு மமலா போற்றி
கார்த்திகை விழாவில் தேனுடன் தினையும்
சேர்ந்தமா விளக்கிற் றிகழ்வோய் போற்றி
✓
பூஞ்சப் பரத்திற் பொலிவுடன் றோன்றிக்
காஞ்சன மலர்ப்பதம் காட்டுவாய் போற்றி
தில்லையந் தணரின் றிருக்கரப் பூசையிற்
சொல்லு மந்திரப் பொருளே போற்றி
தேர்ப்பவ னிதனில் தேவி யருடனே
✓
நேர்த்தத் துவத்தை விளக்கினை போற்றி
ஆட்கொளும் வண்ணம் வருவாய் போற்றி
பூட்கைநன் றாகப் பொலிவாய் போற்றி
பேரியற் சப்பர மீதினி லமர்ந்து
பாரியல் காட்டும் பரனே போற்றி
✓
தேர்முட் டிதனிற் றேவரும் யாவரும்
சேர்ந்தே பரவச் சிறந்தனை போற்றி
தேரடி யிருப்பிற் சேவக னாகிச்
சீரடி யார்க்கருள் சேந்தா போற்றி
ஆரா வியற்கை யழகா போற்றி
✓
பேரா வியற்கைப் பேறே போற்றி
மாம்பழ விழாவில் மாதவம் காட்டி
நாற்பழம் பொருளென நாட்டினை போற்றி
முத்துக் குமரா முதல்வா போற்றி
வித்தகம் விளக்கும் விமலா போற்றி
✓
ஞானப் பழமாய் நின்றாய் போற்றி
ஊனப் பிறவி யொழிப்பாய் போற்றி
குன்றமர்ந் தாடுங் குமாரா போற்றி
வன்றிற லவுணரை வதைத்தோய் போற்றி
காவடி கரகம் ஆடுவோர் தமக்குச்
✓
சேவடி யருளும் செல்வா போற்றி
நன்னடங் கொண்டு நகுல கிரிக்கடல்
மன்னியே தீர்த்தம் மகிழ்ந்தே யாடி
யடியவர்க் கருள்புரி யமலா போற்றி
மிடிதனைப் போக்கு மேலோய் போற்றி
✓
கந்த சட்டியைக் கருத்துடன் நோற்பவர்
பந்த மறுத்தருள் கந்தா போற்றி
விளக்கி டதனில் வியங்கொளி காட்டித்
துளக்கம் தீர்க்கும் சுடரே போற்றி
சங்கப் புலவனா யமர்ந்தாய் போற்றி
✓
தங்கத் தமிழைத் தந்தாய் போற்றி
குன்றெறிந் தாண்ட குமரவேள் போற்றி
வென்றிவேல் ஞான விகிர்தா போற்றி
கதிதந் தருள்புரி கற்பகம் போற்றி
விதிதனைச் சிறையிடு விமலா போற்றி
✓
மயில்மிசை யேறி மகிழ்வோய் போற்றி
அயில்வே லேந்து மழகா போற்றி
ஒளவையின் தமிழுக் கருளினை போற்றி
செவ்விய அறுமுகச் சேயே போற்றி
அருண கரிக்கரு ளையா போற்றி
✓
கருணைத் திருப்புகழ் களித்தாய் போற்றி
சொக்கே சன்றரு சுகிர்தா போற்றி
நக்கீ ரர்க்கருள் நம்பா போற்றி
அகத்தியர்க் கருளுங் குருமணி போற்றி
சகத்தினி லழகொளிர் தற்பரா போற்றி
✓
சரவணப் பொய்கையிற் றவழ்ந்தோய் போற்றி
பிரணவந் தந்தைக் குரைத்தோய் போற்றி
கலியுக வரதனாய் வருவாய் போற்றி
வலிமையைத் தந்தே வளர்ப்பாய் போற்றி
பத்தர்க் கருளும் பாலா போற்றி
✓
முத்தி கொடுக்கும் முதல்வா போற்றி
வள்ளி மணாளா வரதா போற்றி
கள்ளங் கெடுக்கும் கதிரே போற்றி
தேவசே னைக்கருள் சேயே போற்றி
ஏவருந் துதிக்கு மெழிலோய் போற்றி
✓
செங்கடம் பணியும் செல்வா போற்றி
சங்கரன் பாலா சண்முகா போற்றி
உமைதரு மைந்தா வுத்தமா போற்றி
இமையவர்க் காக்கு மேந்தலே போற்றி
கெஞ்சு மடியரைக் கொஞ்சுவாய் போற்றி
✓
மிஞ்சுங் கொடியரை மிதிப்பாய் போற்றி
குரைகட லொளித்த சூர்முதல் தடிந்தோய்
நரைதிரை யில்லா வாழ்வருள் போற்றி
உள்ளங் கவருங் கள்வா போற்றி
அள்ளக் குறையா வருளே போற்றி
✓
தெள்ளமு தத்தின் றெளிவே போற்றி
உள்ளங் கோயில்கொள் குகனே போற்றி
ஆசா பாசம் தூசாய்ப் போக
நேசந் தந்தெமை யாளுவாய் போற்றி
சச்சிதா னந்தச் சிவகுரு போற்றி
✓
விச்சையின் மூலப் பொருளே போற்றி
மாருத வல்லியின் மாமுகம் நீக்கி
மாவையி லமர்ந்தருள் மணியே போற்றி
சாவைத் தடுக்கும் சண்முகா போற்றி
சரவண பவஓம் சரவண பவஓம்
திருவடி தந்தாள் சரணஞ் சரணம்