முருகன் App
மாவை யமக அந்தாதி
பூ. பொன்னம்பலப் பிள்ளை
நூல்2 / 2
மாவை யமக அந்தாதி · பூ. பொன்னம்பலப் பிள்ளை

நூல்

2✓
திருமா திருமா லருடொழின் ஞானந் திகழுருவத்
திருமா திருமா சுதரே கலைகுரு சேதனக்க
திருமா திருமா னடியே யடைந்த சிறியனுளந்
திருமா திருமாவை யந்தாதி முற்றச் சிகாவளரே.
3✓
காவணங் காவணங் கார்கொடி மேழியர் கற்பகப்பூங்
காவணங் காவணங் காற்றன் மறையே கமலைநெருக்
காவணங் காவணங் காட்டிய மாவைக் கவிகுறையா
காவணங் காவணங் காந்த மறைத்துங்க தாரகமே.
4✓
தாரகந் தாரகந் தோய்நீரிற் றானவர்ச் சாய்த்திடுவி
தாரகந் தாரகந் தப்பொழின் மாவைத் தலையவனே
தாரகந் தாரகந் தைக்கடந் தீச்சினஞ் சாய்த்துனடைந்
தாரகந் தாரகந் தாழ்குக தாகழற் றாமரையே.
5✓
தாமரை தாமரை சந்தனச் சாரற் சயிலகற்பத்
தாமரை தாமரை சாளச்செய் மாவைய சக்கிரியத்
தாமரை தாமரை சானாய மால்விடைச் சந்த்ரமுடித்
தாமரை தாமரை நாண்மலர் காட்டுஞ் சரண்முடியே.
6✓
சரணஞ் சரணஞ் சரவினின் றான்மயி றாங்கிடவஞ்
சரணஞ் சரணஞ் சரந்தொடுத் தாரருள் சத்தியற்குஞ்
சரணஞ் சரணஞ் சரதூர னைத்தடிந் தாய்நினருட்
சரணஞ் சரணஞ் சரசெழு மாவைய தந்தருளே.
7✓
தந்திர தந்திர டானவர் நேருஞ் சமரில்விண்ணோர்
தந்திர தந்திர நாயக மாகித் தருவருக்குத்
தந்திர தந்திர யாம்பக சாமி தருகுமர
தந்திர தந்திர வாமாவை யீரென்றன் பாணனுகே.
8✓
பானலம் பானலம் பட்டிட னீக்கிப் படுத்ததுகோ
பானலம் பானலம் பாதிய வாட்டிப் பணிதனைநம்
பானலம் பானலம் போருகர் கீற்றுக்கப் பாலுமளிப்
பானலம் பானலம் பாழிகொண் மாவைப் பரைமஞ்சனே.
9✓
மஞ்சரி மஞ்சரி மால்வரை மங்கை மணாளர்முக
மஞ்சரி மஞ்சரி தோலணி யாளர்க்கு மாமுடித்தா
மஞ்சரி மஞ்சரி மாநே ரதிர்வரை மாவையர்ந
மஞ்சரி மஞ்சரி நீபத்தர் தாண்முடி மாவணியே.
10✓
மாவரை மாவரை மாய்த்தெழு நீத்த மடித்தசய
மாவரை மாவரை மாணுண வாகு மலைகொடைய்வ
மாவரை மாவரை மாகணத் தார்சுதர் மாவையர்க்கே
மாவரை மாவரை மாண்கவி போற்றி வணங்குவனே.
11✓
வணங்கு வணங்கு வளையார் வளையினர் மார்பினர்பூ
வணங்கு வணங்கு திரையார் முருகரெம் மாலசல
வணங்கு வணங்கு திகழ்வா ரெனுமுரை மாற்றல்செய்தி
வணங்கு வணங்கு பரிவா னுளரென மாவைசென்றே.
12✓
மாவைய மாவைய முப்புரஞ் செற்றவர் மைந்ததரு
மாவைய மாவைய தாக்கிற் கடிகை வரைநிலைக்கு
மாவைய மாவைய மன்கொள வூண்ஞம லிந்நரிக்கா
மாவைய மாவைய வீதோநா னென்று வருந்தினனே.
13✓
வருந்த வருந்த வனஞ்சாய் நிழற்பொழின் மாவையிற்றே
வருந்த வருந்த வறார்பணி செய்தி திமைந்தர்கங்க
வருந்த வருந்த யிலம்பர் கழன்மலர் வண்டின்நற
வருந்த வருந்தக வுற்றகண் ணேகண்ணிவ் வானிலத்தே.
14✓
வானில வானில வும்பொழின் மாவையின் மாணருள்செய்
வானில வானில யம்புகுந் தேத்தல்செய் வாய்மலர்க்கோ
வானில வானில மால்குளிர் நீரெரி வன்னிசல
வானில வானில யப்பொரு ளாமவன் மன்னடியே.
15✓
மன்றன மன்றன தாழினும் மேற்ற வருவனசை
மன்றன மன்றன மேமனங் கொண்ட மதியிலிர்கா
மன்றன மன்றன லாக்கினர் சேயசுர மாமயில்பொன்
மன்றன மன்றன மாவையிற் போற்றுதிர் மந்திரமே.
16✓
மந்தர மந்தர வோடிசைந் தானெரி வாய்க்கவுச்ச
மந்தர மந்தர ளப்பந் திசையார் மகிழ்ந்தெறிசு
மந்தர மந்தர மாவை விழவு வணங்கினர்சா
மந்தர மந்தர கம்புரு தார்கடென் மாதிரமே.
17✓
மாதிர மாதிர டானவர் தேரணி வந்தெதிர்சூர்
மாதிர மாதிர மாய்த்தவன் றீர்த்திகை வாரிவல
மாதிர மாதிர வாடுறு மாவையெம் மான்முனவிம்
மாதிர மாதிர யார்த்தமும் வீடுமுன் வந்திடுமே.
18✓
வந்தனை வந்தனை யானன னீந்த மகாரதநி
வந்தனை வந்தனை யர்க்கக வெம்பசி மாற்றுவுள்ளு
வந்தனை வந்தனை யான்மாவை வாழும் வரதனுரு
வந்தனை வந்தனை செய்முடி யும்பவ வல்லியதே.
19✓
வல்லியம் வல்லியம் பாற்றுரத் துங்குற மாதிதழ்செவ்
வல்லியம் வல்லியம் பேர்மூலை வள்ளி மணாளகுறை
வல்லியம் வல்லியம் பாட்டெழில் காட்டிய மாவைகை
வல்லியம் வல்லியம் பெற்றிடச் செய்வேன் மலர்க்கையனே.
20✓
கரத்தங் கரத்தங் கிளர்கணை யோர்மங்கை காதலர்து
கரத்தங் கரத்தங் கதமுடை யார்தந்த சுந்தரஞ்சா
கரத்தங் கரத்தங் கெழுமாவை யீசர் கதிர்மணிச்சே
கரத்தங் கரத்தங் கொடுத்தா ரிலநர கங்கணமே.
21✓
கங்கண கங்கண வென்றிரை மாவைக் கடல்குடைந்தா
கங்கண கங்கண மாமுடிப் பூணரைக் கச்சுப்பன்ன
கங்கண கங்கண காலாரி சேய்கழல் காணுமுங்கட்
கங்கண கங்கண நீத்தெய்து மேலுல கத்தின்பமே.
22✓
கத்தின கத்தின வாயுழ னீக்கிக் கழற்கொகன
கத்தின கத்தின நில்லா தருடி கறையுணவா
கத்தின கத்தின லீவிலங் காரங் கணிசுனைநா
கத்தின கத்தின மாமாவை யாசுரர் காவலனே.
23✓
காவிலங் காவிலங் கான்மர மார்வரை காவலவே
காவிலங் காவிலங் கற்சிர நீரிற் கடலின்முழங்
காவிலங் காவிலங் கோதோடு மாவைய காலன்முன்னே
காவிலங் காவிலங் கிட்டா தொழிகழற் கஞ்சத்தினே.
24✓
கஞ்சனங் கஞ்சனங் கட்குளுற் றட்டவன் காதன்மரு
கஞ்சனங் கஞ்சனங் கொண்டோன் றிருவடி காணமயக்
கஞ்சனங் கஞ்சனங் கொள்ளா தொழித்தவன் காதலன்காற்
கஞ்சனங் கஞ்சனங் கொண்மாட மாவைநங் காமரனே.
25✓
காமரங் காமரங் கூரயிற் கண்ணார் கனியெழில்வாய்க்
காமரங் காமரங் கந்திகழ் மாவைய கார்வடவா
காமரங் காமரங் கேசர் மருகநின் கான்மலரே
காமரங் காமரங் கந்தகித் தார்கத காமகிழ்ந்தே.
26✓
காமலை காமலை யந்திகழ் மாவைய கன்னலொடே
காமலை காமலை யன்புர சூதனன் கண்ணுதல்பா
காமலை காமலை வந்தோய்நின் றாள்வணங் காவுடல்புக்
காமலை காமலை யாதிய துன்பங் கரக்கவந்தே.
27✓
கவந்தங் கவந்தங் கொடுத்தான் மருக கடைப்பொழுதே
கவந்தங் கவந்தங் கடிநடஞ் சோரி கறங்கிசையா
கவந்தங் கவந்தங் கருன்முடிச் சூர்ச்செற்ற கையெஃகிலங்
கவந்தங் கவந்தங் கிடர்தீர நன்கு கணித்தருளே.
28✓
தருக்கந் தருக்கந் தகாரத்தி னாற்றினஞ் சாய்மடவா
தருக்கந் தருக்கந் தரித்தார் சடிலந் தனில்வளரிந்
தருக்கந் தருக்கந் தநன்மல ரார்கதர் சாருருச்சித்
தருக்கந் தருக்கந் தலமெழின் மாவையந் தானமதே.
29✓
தானசந் தானசந் தெய்துந் தருமணி தாமரைநந்
தானசந் தானசந் தாமுள வாயினுந் தாபதரேத்
தானசந் தானசந் தப்பரி யாக்கொண்ட சத்திகரத்
தானசந் தானசந் தில்லாருக் கட்ட தரித்திரமே.
30✓
திரவத் திரவத் துணுர ணிலையுச் செயுள்விரைசந்
திரவத் திரவத் தயலாஞ் சுகப்பெயர் செப்பிடுமு
திரவத் திரவத் திவாவறி யாத குருட்டையுருத்
திரவத் திரவத் திசங்கம மாவைய தீரத்தனே.
31✓
தீரத்தந் தீரத்தந் தாவள மாமுகன் சிநதிடச்செய்
தீரத்தந் தீரத்தந் துன்போத்து வானவர் சிந்தைவிபத்
தீரத்தந் தீரத்தந் தேமாவை யீரெனச் சிந்தையுறுத்
தீரத்தந் தீரத்தந் தத்துற்று நீப்பன்றென் றிக்கினலே.
32✓
திக்கையத் திக்கையத் தார்மாவை யாதிப சேரிருட்டந்
திக்கையத் திக்கையத் தங்கொண்ட வற்கொல்லி சேயவது
திக்கையத் திக்கையத் தாதீர வந்தரு தீப்பவக்கொ
திக்கையத் திக்கையத் தாதி நரக திமவட்டமே.
33✓
வட்டக வட்டக மார்மா வையவருள் வாரிசெல்கு
வட்டக வட்டக மாவோச்சு வள்ளிம ணாளவுரு
வட்டக வட்டக ச்சதுர வாரிதி மாவினைய
வட்டக வட்டக நீக்கிக்கொண் மாமயில் வாகனனே.
34✓
கனகங் கனகங்கை மேல்வரை காவலன் கைத்தெனமிக்
கனகங் கனகங்கை கொண்டவர் கூறக் கடவுளர்பு
கனகங் கனகங் கணக்கைச்செண் டிற்செற்ற சேய்கழற்கோ
கனகங் கனகங்கு லென்மாவைத் தாழ்திய கந்தருக்கே.
35✓
கந்தவ கந்தவ நீள்பொழில் மாவைக் கடலினன்றி
கந்தவ கந்தவ றாகவுற் றாடிக் கடிமணமு
கந்தவ கந்தவ மேமற வாதுறை கன்னியருக்
கந்தவ கந்தவ னாயுறல் பார்த்தணி கைதலைக்கே.
36✓
தலைவி தலைவி சனத்திறந் தோர்பினுஞ் சார்ந்தனர்ம
தலைவி தலைவி கசிதா னனமகிழ் தந்துபிணி
தலைவி தலைவி பவமின நேசச் சழக்கிலுறத்
தலைவி தலைவி தனமினு மாவை தொழுதவர்க்கே.
37✓
தவங்க தவங்க மரனடி காட்டுஞ் சலதியிலா
தவங்க தவங்க னிறல்பார்க்கு மாவையன் சால்குடமா
தவங்க தவங்க னயன்மா லிடையிருள் சார்தினமெய்
தவங்க தவங்க ளடநோக் கிவாங்கறஞ் சக்கரமே.
38✓
சக்கரஞ் சக்கரஞ் செய்படை குன்றணிந் தார்க்கருள்விஞ்
சக்கரஞ் சக்கரஞ் சொல்வார் தமன்பர் தனையவெம்ம
சக்கரஞ் சக்கரஞ் சால்கூற் றுறுமுனர்த் தாவருட்டஞ்
சக்கரஞ் சக்கரஞ் சாரா திருவினை சார்பவத்தே.
39✓
பவநம் பவநம் பகன்றா ரவளர்ப் பரனருள்வி
பவநம் பவநம் பனம்பிகை சேயருள் பண்பதுசோ
பவநம் பவநம் பறற்காருஞ் செய்தலெப் பாலினுநீ
பவநம் பவநம் வநந்தமம் மாவையிற் பஞ்சகமே.
40✓
பஞ்சர பஞ்சர ணென்றுழைப் பார்யம பாசர்கைவெம்
பஞ்சர பஞ்சர ணேலரி யாம்பகல் பற்றென்மது
பஞ்சர பஞ்சர மார்பொழின் மாவைப் பதியகடப்
பஞ்சர பஞ்சர சாசைநீக் கென்று பணிந்திலரே.
41✓
திலகந் திலகந் தவர்தொழு மாவையன் சீரலைச்செந்
திலகந் திலகந் தருநுதன் மாமுகற் செற்றறெனுளத்
திலகந் திலகந் தொலைப்பா னமர்ந்தவன் சீரடிதாழ்ந்
திலகந் திலகந் துகிரெலைப் பேயல தென்செயுமே.
42✓
தென்றலை தென்றலை யார்மா வையிலெற் றெறுதல்புரிந்
தென்றலை தென்றலை விட்டா ரருள்வர்முன் சேர்வர் கருத்
தென்றலை தென்றலை யன்னதுன் பாறல் சிகியிசையிந்
தென்றலை தென்றலை நோக்கின்றிப் போயநஞ் சிந்தையரே.
43✓
சிந்துர சிந்துர நேர்பல கூறுவர் தீநெறிந
சிந்துர சிந்துர வாரனை மாவை யனையிமங்க
சிந்துர சிந்துர னாற்பொழி வெற்பனைச் செஞ்சடைநோஞ்
சிந்துர சிந்துர கத்தார் சுதற்பணி சேதனத்தே.
44✓
சேதகஞ் சேதகஞ் சந்திகழ் மாவைய தீயவுணஞ்
சேதகஞ் சேதகஞ் செய்வேல ராவணற் செற்றதுரி
சேதகஞ் சேதகஞ் சாய்த்தோன் மருகதித் தித்திடுநஞ்
சேதகஞ் சேதகஞ் சாரா தருணன்றிற் செல்லுகைக்கே.
45✓
கைக்கிளை கைக்கிளை யாழ்நீக்கிக் கஞ்சக் கழலுறுத
கைக்கிளை கைக்கிளை யார்சாரன் மாவைக் கடவுளுண்ண
கைக்கிளை கைக்கிளை யோன்பொருள் பேசிக் கனையிருளுற்
கைக்கிளை கைக்கிளை முத்தொளிர் காலையிற் காத்தனனே.
46✓
கார்த்திகை கார்த்திகை யார்குமி டோன்றி கவினறிலக்
கார்த்திகை கார்த்திகை நீர்விழ வோங்கும் கடல்குடைந்துங்
கார்த்திகை கார்த்திகை மீனல வன்சுடர்க் காடுதிருக்
கார்த்திகை கார்த்திகை மாவையற் காண்முத்தி கண்டனையே.
47✓
கண்டன கண்டன மார்கடன் மாவையைக் காவிசையங்
கண்டன கண்டன மென்மொழி மாப்புனங் காவல்வள்ளி
கண்டன கண்டன கந்தொலைத் தானைக் கடப்பமலர்க்
கண்டன கண்டன மையனைக் காண்டிமோக் கந்தருமே.
48✓
கந்தரங் கந்தரங் கந்தரங் கந்தரங் காயொலிநே
கந்தரங் கந்தரங் கந்தரங் கந்தரங் காட்டுமாவைக்
கந்தரங் கந்தரங் கந்தரங் கந்தரங் காண்கிலக்கீ
கந்தரங் கந்தரங் கந்தரங் கந்தரங் காட்டுவரே.
49✓
காடியங் காடியங் கஞ்சூடி மைந்தனி காயமிலங்
காடியங் காடியங் காட்டிய மாவைக் கடலின்முழுக்
காடியங் காடியங் கைதொழு தேத்திக் கழிக்குதிர்சாக்
காடியங் காடியங் கச்செலுங் கூற்றுவன் கம்பலையே.
50✓
கம்பல கம்பல னார்மாவை வாசர் கருத்தினுருக்
கம்பல கம்பல னாதி தரவுண்டு காவல்செயிக்
கம்பல கம்பல மாடிதன் மைந்தரிற் காமமயக்
கம்பல கம்பல னாக்குந் திறங்கண்டுங் கைக்கலையே.
51✓
கைக்கவி கைக்கவி பார்தாங்கு பாண்டிக் கரையொடிலங்
கைக்கவி கைக்கவி தாசரிற் செல்லக் கடனெடுத்தோ
கைக்கவி கைக்கவி னாரணை செய்தவன் காதன்மரு
கைக்கவி கைக்கவி யாற்புகழ் மாவையன் கைச்சத்தியே.
52✓
சத்தியஞ் சத்தியஞ் ஞானத்தி னால்விர சாசைகளுஞ்
சத்தியஞ் சத்தியஞ் சாற்றெழின் மாவையைச் சார்ந்திடுமா
சத்தியஞ் சத்தியஞ் சாத்தினர் சேய்மலர்த் தாள்பணியாய்
சத்தியஞ் சத்தியஞ் ஞான்றிடு ஞானந் தயங்குருவே.
53✓
குருத்தங் குருத்தங் கழல்புனைந் தார்சொற் குரவர்நல்வெங்
குருத்தங் குருத்தங் குணவமிர் தம்மை கொடுத்தமறைக்
குருத்தங் குருத்தங் குருமணத் தார்சொற்ற கோமகன்சிக்
குருத்தங் குருத்தங் கிமண்செய் செயுமாவைக் கோகத்தனே.
54✓
கோகன கோகன கர்க்கன லாற்புரங் கொன்றபெம்மான்
கோகன கோகன கச்சடை யான்றன் குமரனுலாக்
கோகன கோகன கந்தொலைத் தான்மாவைக் கோட்டமருங்
கோகன கோகன கப்பூவும் பொன்னிற் கொளுஞ்சந்தமே.
55✓
சந்திர சந்திர ளன்னாதி மாமலர் தாம்புலங்க
சந்திர சந்திர ணஞ்செய் மதனம்பிற் சார்ந்துளத்தச்
சந்திர சந்திர மார்மாவை யாதிப தண்மைகுன்றாச்
சந்திர சந்திர வுற்றார் தவிர்த்தித மப்பவமே.
56✓
தமரத் தமரத் தமரத் தமரத் தகுவனடத்
தமரத் தமரத் தமரத் தமரத் தயலர்பிர
தமரத் தமரத் தமரத் தமரத் தலைவரெற்குத்
தமரத் தமரத் தமரத் தமரத்த மாவையரே.
57✓
வையக வையக சேந்திரன் பாவை மணாளவுக
வையக வையக லாபிகள் பூவைகள் வன்னிகள்கு
வையக வையக மால்குளிர் காரணி வான்பொழின்மா
வையக வையக நின்கட் பிணித்தி மலங்கெடவே.
58✓
மலங்க மலங்க நிறைகடல் பார்த்தி மனமயலா
மலங்க மலங்க விழிகனை காணிவ் வனநின்றுவிம்
மலங்க மலங்க லணிந்தார் வரைதெரி மாவையிற்பொம்
மலங்க மலங்க ளலர்கய நோக்குதி மாதரசே.
59✓
மாதங்க மாதங்க வையத்தர் சூரை வணிகனொளிர்
மாதங்க மாதங்க ரத்தயி லாற்செற்று வானவர்விம்
மாதங்க மாதங்க மாற்றிய சேயெல்லி வையத்துற
மாதங்க மாதங்க ணொன்றுதன் மாவையின் மாடறியே.
60✓
மாடக மாடக வார்மொழிப் பன்மலர் மாலைதொழு
மாடக மாடக வீமாவை நாதர் வரையரற்கா
மாடக மாடக மாவேங்கை பொன்சொரி வார்கனைத்தா
மாடக மாடக லாவோரை மேவு மகத்துறையே.
61✓
மகத்து மகத்து மிகுதன்ம மீது மனங்கொழுமே
மகத்து மகத்துய ருஞ்சிந்து மாவையன் வாரிசென்மா
மகத்து மகத்துவ நோக்கிடப் போனபொன் மீண்டிடில்ய
மகத்து மகத்து மடங்குவ தோபடி வார்வித்தமே.
62✓
வித்துரு வித்துரு மோற்பல மாவையர் மேன்மருண்டா
வித்துரு வித்துரு வத்துய ராட்கறு மோபலகு
வித்துரு வித்துரு வைக்கொலை செய்தரி மின்னிசிநா
வித்துரு வித்துரு வப்பாம் வெறியின் மிகுமையலே.
63✓
மையனம் மையனம் பாலாதி மாற்ற வனமலர்க்கா
மையனம் மையனம் புங்குறி மாண்டென்று வன்றுயர
மையனம் மையனம் பாய்வயன் மாவை வளநகரெம்
மையனம் மையனம் போருகத் தாட்குச் சிவைகரமே.
64✓
வைகறை வைகறை யங்கிரி யாற்குற மாதணைத்து
வைகறை வைகறை யார்வேலர் புட்கண மாத்துயிலேல்
வைகறை வைகறை முன்றிரி மாவையர் மால்பிடித்தாய்
வைகறை வைகறை மேற்பக லாவுறு மானிசமே.
65✓
மானிய மானிய மிக்கத் தனையைநன் மாவையிவ்விண்
மானிய மானிய மஞ்செய்து மற்றி மறமுகப்பாய்
மானிய மானிய லாராடச் செய்தின மாதியின்று
மானிய மானிய மார்விழ வேத்துமெம் மைக்குநன்றே.
66✓
மைக்கண மைக்கண வேர்த்தோண் மடமயி லேமருளா
மைக்கண மைக்கண யப்புறத் தந்தவர் மாவைவரு
மைக்கண மைக்கண ணையூங் குழல்கண்டு மான்றனவி
மைக்கண மைக்கண வுச்சிகீழ் வீழ்வன வாரணமே.
67✓
வாரணம் வாரணம் பாற்பகை சாய்த்தவர் மாவையுறை
வாரணம் வாரணம் பங்குடை யார்தமை மார்கழித்தெய்
வாரணம் வாரணம் பாலெங்கு மார்கவிர் மானுமுடி
வாரணம் வாரணம் பாடேல்வை யேத்திடின் மாலுறுமே.
68✓
மாலைய மாலைய னீறழ லாடிசேய் மாவைமரு
மாலைய மாலைய கத்தளித் தாய்தென் வளியொடன்றின்
மாலைய மாலைய னாழி குயில்வெண் மதிவருத்து
மாலைய மாலைய தீந்திடி‌ன் மாறு மனச்சலமே.
69✓
சலசஞ் சலசஞ் சரிகஞ்சொன் மாவைத் தரங்கத்துமா
சலசஞ் சலசஞ் சரப்பரி யாக்கொ டலைவவந்தா
சலசஞ் சலசஞ் சிதைத்தருள் வாயெனத் தாளினைக்கி
சலசஞ் சலசஞ் சிதமற நோக்கநிச் சம்பணியே.
70✓
சம்பகஞ் சம்பகஞ் சார்சோலை நீலஞ் சலத்துறழ்பா
சம்பகஞ் சம்பகஞ் சாறட மாவைய தானவரஞ்
சம்பகஞ் சம்பகஞ் சாரயன் மான்மறை தாகனன்றுஞ்
சம்பகஞ் சம்பகஞ் சேர்த்தோ யருள்வர சாகரனே.
71✓
சாகரஞ் சாகரஞ் சாந்திசெய் வார்பவஞ் சாய்த்தலினுற்
சாகரஞ் சாகரஞ் சாத நடேசர் சடைகளநி
சாகரஞ் சாகரஞ் சாத்தினர் சேய்குக சண்முகவி
சாகரஞ் சாகரஞ் சான்மாவைத் தாளம்பு சாதரென்னே.
72✓
சாதனி சாதனி யாமா லுகுமென் றலையினம்பு
சாதனி சாதனி தார்க்குரைப் பேனன்பர் தம்முள்வன
சாதனி சாதனி லாமாவை நேசத் தலைவன்பாக
சாதனி சாதனி கத்தாற் கிலையித் தலைமண்டலே.
73✓
மண்டவ மண்டவ றொன்றிற்பல் வேறுசெய் வார்குணந்தே
மண்டவ மண்டவ னந்தெறச் சார்பல்சன் மத்தரின்னு
மண்டவ மண்டவ தைக்கொடி யார்ப்பா வனைச்சொலட்டே
மண்டவ மண்டவ மார்மாவை யன்கா லரவிந்தமே.
74✓
விந்தர விந்தர நாதஞ் சிவஞ்சத்தி விண்டுயர்கோ
விந்தர விந்தர வார்சடை யார்திரி வேடசிவ
விந்தர விந்தர சாமாவை யீரென்ன விச்சமற
விந்தர விந்தர விச்செற்ற வர்க்கிட்டீர் மெய்வசமே.
75✓
வசந்த வசந்த முறுமுன் முனிக்கு மறைசொல்குர
வசந்த வசந்த னுடலளித் தார்கத மாமகத்தா
வசந்த வசந்த தனிகலமுற் றோயிறை வாசததி
வசந்த வசந்த மலரணி மாவைய வாமவென்னே.
76✓
வாமத்த வாமத்த லோகதெய் வத்திர்நம் மாவையர்தே
வாமத்த வாமத் தயலரன் சேய்மகிழ் மாவெற்புரு
வாமத்த வாமத்த மாவுள தோவென்கை வாளியிற்போழ்
வாமத்த வாமத்த கக்கறை சோர்ந்திங்கு வாவியதே.
77✓
வாவிய வாவிய வாரலா ரால்வளர் வாலவுரு
வாவிய வாவிய லாழி யரியருள் வள்ளியுள்ள
வாவிய வாவிய வல்லவ வாழவிவ் வூரருளால்
வாவிய வாவிய லோர வுரையருள் வாயுவுள்ளே.
78✓
வாசந்தி வாசந்தி சாந்தஞ்செல் சோலையில் வள்ளிதன
வாசந்தி வாசந்தி யைந்தபெம் மானங்கண் மாவையிறை
வாசந்தி வாசந்தி ரோதய மாலை மலையமலை
வாசந்தி வாசந்தி யானாதி மாற்றன் மனங்கணியே.
79✓
கணியார் கணியார் கலியரி பாடலர் கண்கண்மயக்
கணியார் கணியார் புகல்வரொத் தேங்குகன் மாவைகடைக்
கணியார் கணியார் கருத்தின்று முற்றிற்றுக் காதினெருக்
கணியார் கணியார் வலாயா மிவண்விலக் காந்தினமே.
80✓
காந்தனங் காந்தனங் கொண்டழித் தான்குறக் கன்னியழ
காந்தனங் காந்தனங் கம்பணித் தின்னயங் காட்டியசீர்க்
காந்தனங் காந்தனங் கொண்டொளிர் மாவைக் கடவுடார
காந்தனங் காந்தனங் கேட்பன வீவனங் கைத்தத்தமே.
81✓
தத்தம தத்தம காமாவைக் கோவி றனிற்பணிக்காய்த்
தத்தம தத்தம முந்தினர்க் கூதியஞ் சால்கடன்வே
தத்தம தத்தம ரேசரி னுண்டது சார்கிலர்கைத்
தத்தம தத்தம ரூஉமேனு மிங்கெனல் சங்கையதே.
82✓
சங்கர சங்கர நாசன் மருமகன் றாசர்சலச்
சங்கர சங்கர வின்றன் றுரைவர சாகரன்வா
சங்கர சங்கரங் காமாவை மாத்திரங் கங்குரைமா
சங்கர சங்கர னன்னயச் சாகர ரத்தியங்கே.
83✓
தியங்கந் தியங்கந் தநமவென் றோதுமுன் சேர்ந்திடுஞ்சத்
தியங்கந் தியங்கந் தருபொழில் சூழுஞ் சினகரநித்
தியங்கந் தியங்கந் தரமுரன் மாவையன் செஞ்சடையிந்
தியங்கந் தியங்கந் திருநீ றணிந்த சிவநந்தனே.
84✓
நந்தன நந்தன யந்தோன் மருக ஞமலிசெறி
நந்தன நந்தன மார்தட மாவைய நாதசதா
நந்தன நந்தன ரிப்பரி கூட னடாத்தியவர்
நந்தன நந்தன மேதரு வாய்நய மாவதுவே.
85✓
மாவலி மாவலி யாண்டறு மோவன்பர் மாமகிழி
மாவலி மாவலி யாவுமின் றேநெஞ்ச மாவலிக்கு
மாவலி மாவலி மாரதம் வந்தின்று மாவையனான்
மாவலி மாவலி யாழ்த்தோன் மருகன்றன் மாதலத்தே.
86✓
மாதவ மாதவ னூறிட நோற்றசெம் மாசுணந்தேண்
மாதவ மாதவ வுண்பகற் கோளுடு வாய்த்தறவிம்
மாதவ மாதவ றின்னார்க்க மூழ்கி மருவினமான்
மாதவ மாதவ ணான்மாவை யான்முன் மயற்பங்கமே.
87✓
பங்கச பங்கச தானந்த மாமலர்ச் சாடகரூப்
பங்கச பங்கச மம்புரிந் தார்சுத பண்ணவர்நம்
பங்கச பங்கச வீகாட்டு மாவைய பாலநெருப்
பங்கச பங்கச வாதுளம் வாகிரு பாகரனே.
88✓
பாகரன் பாகரன் சேய்மாவை யின்மண்பொன் பங்குசன்னி
பாகரன் பாகரன் றன்றுவந் தேகப் பணிந்தகிரு
பாகரன் பாகரன் றூர்தே ரிவண்வரப் பண்ணல்வியப்
பாகரன் பாகரன் னம்புரை கம்பு பணித்தனரே.
89✓
பணியம் பணியம் புலியன் புலியன் பரதமுடன்
பணியம் பணியம் பரர்க்களிப் போன்சுதன் பண்ணவர்நாப்
பணியம் பணியம் பகத்தொகை வாசி பரித்தவநட்
பணியம் பணியம் பொருமாவை யின்மலர்ப் பாதத்தினே.
90✓
தத்திமி தத்திமி ழின்னிசை காட்டுஞ் சபையரமிழ்
தத்திமி தத்திமி லானுடை யார்குதர் தந்தனர்சீ
தத்திமி தத்திமி சாமீ னுறைகடன் மாவைமதத்
தத்திமி தத்திமி சார்வரை யாளர் தயாமிகவே.
91✓
யாமினி யாமினி கேதன மாவையர் கின்னலுரை
யாமினி யாமினி யத்தரி யார்திறற் கின்னல்புரி
யாமினி யாமினி லத்துகு மான்மகிழ் வென்றுமொழி
யாமினி யாமினி யெல்லினுஞ் சீருறு மெம்மக்கமே.
92✓
மக்கட மக்கட லான மயல்செற் றவன்னிவெங்கா
மக்கட மக்கட மாறரு மாறெங்கன் மாவைவன்சே
மக்கட மக்கட லைப்பொடி பெண்செய் வரனையுரு
மக்கட மக்கட ரன்பினின் றேத்த வரும்வித்தமே.
93✓
வித்தக வித்தக வாதிய மித்தை விடுத்தருண்மே
வித்தக வித்தக மாற்றவுற் றேனினை வீட்டலையேல்
வித்தக வித்தக ராமாவை யாதீனர் வெந்துயர்சாய்
வித்தக வித்தக ரம்வெறி தன்னமி கைக்கம்பமே.
94✓
கம்பரங் கம்பரங் கொண்மாவை செந்தி கதிரைநல்லே
கம்பரங் கம்பரங் குன்றா வினன்குடி காமரேர
கம்பரங் கம்பரங் காரார் வரைபிற கங்கொளெருக்
கம்பரங் கம்பரங் கூத்தாடி சேயிலக் காமங்களே.
95✓
காமரு காமரு கற்பக மாவைய காந்தையலார்க்
காமரு காமரு டற்களித் தார்சுத கண்ணபிரான்
காமரு காமரு வாரிச பாதவெங் காலன்முன்னே
காமரு காமரு ளீதிமுந் நான்கு கரத்தங்கனே.
96✓
தங்கம் பதங்கம் படங்கமுங் காட்டிடுந் தையலர
தங்கம் பதங்கம் படாசையிற் றாழ்த றவிர்த்துநறித்
தங்கம் பதங்கம் படேர்மாவை யிற்குளிர்ச் சந்திரமா
தங்கம் பதங்கம் படோற்சவந் தாழ்த றகுபுத்தியே.
97✓
புத்திரி புத்திரி பான்மயங் காது பொருந்திவிருப்
புத்திரி புத்திரி தோடமின் றேத்தணி போரவுணர்
புத்திரி புத்திரி யச்செய்த மாவையன் பொன்னிமவெற்
புத்திரி புத்திரி கச்சாமி தாளணி பூதியையே.
98✓
பூதியம் பூதியம் பந்துரம் பல்வகை போமதிறும்
பூதியம் பூதியம் புந்தித்துன் பேகும் புரிவினையூண்
பூதியம் பூதியம் பாரத் தறுமனந் தப்பொருளார்ப்
பூதியம் பூதியம் பார்மாவைத் தாளம் புயாதரன்பே.
99✓
யாதனை யாதனை யாற்றேட வேண்டு மிதயத்தம்பு
யாதனை யாதனை வாக்கினை தாளன் பியைந்துபணி
யாதனை யாதனை யாயருண் மாவை யிறையவதுய்
யாதனை யாதனை யொப்பிலர்க் கென்ற லெலாந்தருமே.
100✓
தருமந் தருமந் திருவுறு நாளினிற் சாயுமிட்டத்
தருமந் தருமந் தமிக்கெழு நாளிற் றனையருமா
தருமந் தருமந் தொலைவென்றெண் ணாளினிற் சாய்குவர்ம
தருமந் தருமந் திபாய்மாவைச் சேய்பத மானந்தமே.
101✓
மானந்த மானந்த னந்தா மரைநன் மணியெழில்வி
மானந்த மானந்த மாரம ராவதி மாவையினெம்
மானந்த மானந்த னையர்தந் நாப்பண் வதிதல்கண்டு
மானந்த மானந்த மாக்கட லாடி மகிழ்ந்திருமே.