மருதமலை அலங்காரம்
கந்தசாமி சுவாமிகள்
மருதமலை அலங்காரம் · கந்தசாமி சுவாமிகள்
நூல்
2கட்டளைக் கலித்துறைகள்✓
நேசத்து வந்து தினம்பேணு மன்பினர் நெஞ்சகத்தே
பாசத்து வந்துவஞ் சேராம லாண்டிடும் பண்பினவான்
மாசத்து வப்பெரி யோரேத்துஞ் சீர்கொண் மருதவெற்பில்
வாசத் துளவன் மருகோன் றிருவடி வாரிசமே.
3✓
மன்றங்க ளெங்கு நடமாடு மீசன்றன் மார்புடனே
குன்றங்க ளெங்குங் கமழ்ந்திடுஞ் சேய்பொற் குளிர்மலர்த்தாண்
மின்றங் கருச்சுன வெற்பிற்கண் டேத்தினர் விண்ணவர்கண்
மென்றங் கலர்பொழிந் தேத்தவன் னோன்புர மேவுவரே.
4✓
கின்னம் பொருந்து மடவா ரகட்டிற் கிருமியைப்போ
லின்னம் பொருந்த விடாதே யடைக்கலம் யானடியேன்
சின்னம் பொருந்து மணிக்கவு மாரர் திரளெனவெள்
ளன்னம் பொருந்து மலர்த்தடஞ் சூழ்மரு தாசலனே.
5✓
பொன்னை மதித்தழி வார்களை யோர்பொரு ளாமதியா
துன்னை மதித்தடைந் தேனடி யேன்றனை யொத்திடநீ
யென்னை மதித்தரு ளிற்றுய ரொன்றெனை யெய்திடுமோ
பின்னை மதித்தனை வோன்றாழ் மருதப் பிறங்கலனே.
6✓
நறவார் மலர்ப்பொழில் சூழர்ச் சுனகிரி நாதநின்றான்
மறவா வரமடி யேற்கீந் தினியுமொர் மாதகட்டிற்
பிறவாத வண்ணம் புரிந்தா ளுனையன்றிப் பேசின்மற்றோ
ருறவா னவரின் றுலகெவற் றூடு மெனதுயிர்க்கே.
7✓
உன்றிருப் பாதந் துணையென்று பஃறுதி யோதிடுமஃ
தன்றிமற் றொன்று மறிகின்றி லேன்மெய் யருச்சுனப்பேர்க்
குன்றிடத் தாயடி யார்மாட்சி நல்குவை கொள்கருவூ
டொன்றிடச் செய்வைகொ லோதெரி யேனின துட்குறிப்பே.
8✓
பாடிடு மன்பர்க்கின் பீந்திடு நின்பத பங்கயங்கள்
கூடிடு மொப்பில் பரானந்த வின்பங் குவலயத்தி
லூடிடு மங்கையர் பொய்ச்சுகம் வாஞ்சித் தொழிவிலிடு
காடிடு மாக்கை படைத்தேங்கு மானிடர் காண்பரிதே.
9✓
சழக்குண்ட வஞ்சக் கொடுமாயை யின்வன் றளையிடைப்பட்
டுழக்குண் டயரு மடியேனுக் குன்றா ளுபயநெஞ்சிற்
பழக்குண்ட தொண்டர் பெறும்பே றருளச்சம் பந்தமிக்க
வழக்குண்டு னக்கின் றெனிலெனக் குண்டு மருதையனே.
10✓
கண்டமட் டுங்கறுத் தார்குரு நாதனைக் கார்முகிலிற்
கொண்டமட் டுங்கறுத் தோன்றாழு மர்ச்சனக் குன்றிடத்திற்
றண்டமட் டும்புரி வாரையுங் கார்நிறச் சண்டன்முனங்
கண்டமட் டுந்திறற் றீர்வரான் பிரமன் கதிநினைத்தே.
11✓
அல்லாக்குஞ் சோலை யதனிடை பாம்பி னரதனங்க
ளெல்லாக்குஞ் சீர்கொண் மருதா சலனையுள் ளெண்ணிலுடன்
மல்லாக்கு மைம்புலன் மல்லாக்கும் வஞ்ச மனவடிவா
யில்லாக்கு மாயையை யில்லாக்கு மானந்த மீந்திடுமே.
12✓
மருதா சலன்பொன் னடிகளை யன்பின் மனத்திருத்தக்
கருதாத நித்தப் புவிவாழ்வை மெய்யெனக் கண்ணியென்றும்
விருதா வினிலுழல் வார்நர சென்மத்தின் மிக்கதுகாண்
வருதா ரணிமிதித் தற்கஞ்சு பேய்பெறும் வன்பிறப்பே.
13✓
திருவளிக் கும்பெருங் கல்வியு நல்கிடுஞ் சேணுலகார்
தருவளிக் கும்பத ம்யாவையு மீந்திடுந் தன்னனைய
வுருவளிக் குந்தொண்ட ரெண்ணிய யாவு முடனளிக்கு
மருவளிக் கும்பொழில் சூழ்மரு தாசலன் வண்பதமே.
14✓
தானந்த மாதியி லாதங்கு நின்றிடுத் தாட்டுணையா
மானந்த சாகரத் தெந்நா ளணைய வருள்புரிவாய்
பானந்த மேந்துகை மாயனின் மேகம் படிந்தணியார்
வானந்தந் தோய்மரு தாசல மேவிய வானவனே.
15✓
உன்னையொப் பாமுயர் வுள்ளார்ரு மெந்த வுலகிடத்து
மென்னையொப் பாமிழி வுள்ளாரு மின்றிவ் விருவகையாற்
றன்னையொப் பாநிலை பெற்றனம் யாமிந்தத் தன்மையினா
லன்னையொப் பாயுகந் தென்னையொப் பாய்மரு தாசலனே.
16✓
அகோரவி கற்புரி மாயை வலைப்பட் டரிவையர்தம்
பகோதரத் திற்றொடக் குண்டழி யாதுகண் பார்த்தெனையுன்
சுகோதயப் பொன்னடி யூடொன்று மாறென்று தோய்த்தருள்வா
யகோவெனும் பல்வளஞ் சான்மரு தாசல வாண்டவனே.
17✓
வானாருந் தேவர் துயரொழித் தாண்டவை வேலரசே
தேனாரு மின்பக் கவிகொண் டுனைத்துதி செய்திடுவேன்
யானாருந் துன்பறிந் துந்தா மதித்த லியல்புகொல்லோ
கானாரும் பூம்பொழில் சூழ்மரு தாசலக் காவலனே.
18✓
என்பற்ற புன்புழு வென்முற் றுடித்தலி னிவ்வுலகத்
தின்பற்ற வாழ்விற் றுடித்தோர் செயலற் றிரங்கெளியேற்
குன்பற்றல் லாற்பற்று வேறுள தோசொன்மு னும்பர்கொண்ட
துன்பற் றிடச்செய் திடுமரு தாசலத் தூமணியே.
19✓
கல்லைப் புரையு மனத்தீனச் செல்வரைக் கண்டுவந்து
செல்லைப் புரைகைய னேயென்று பல்கவி செப்பியுறும்
பல்லைப் புரைபடக் காட்டுந ரேளனம் பண்ணவென்றன்
சொல்லைப் புரைபடுத் தேன்மரு தாசலச் சுந்தரனே.
20✓
அனங்கன் றிசைமுக னந்தக னாமிவ ராட்சியினான்
மனங்கன்றி யெண்ணரி தாந்துயர் கொண்டுமெய் வாடக்கண்டு
முனங்கன்றி லாண்ட முறைமறந் தாய்முறை யோமுருகா
கனங்கன்றின் மேயு மருதா சலவருட் கண்ணருளே.
21✓
படைத்தலை யாற்றுவன் வேண்டாதுஞ் சூட்டுநின் பாதமென்ற
னுடைத்தலை மேல்வைத் திடவிரந் துஞ்சற் றுதவுகிலாய்
மடைத்தலைக் கொக்கஞ்சப் பாய்சேற்றண் வாவி மருதவெற்பா
ளுடைத்தலை வாவுருட் சிந்தையென் றன்னை யுகந்துகொள்ளே
22✓
பொல்லாத தீமைக் குணங்கோடி கொண்டுநம் பொன்னடிக்கன்
பில்லாத பாவியென் றென்னைப் புறந்தள்ள வெண்ணுதியேற்
கல்லாத பேதைக் கருள்வா ரெவர்கரு ணைக்கடலே
பல்லா தவரில் வயங்குவை வேற்கைப் பரஞ்சுடரே.
23✓
வாளார்ந்த வஞ்சகக் கண்மட மாதர் வடிவினையே
கோளார்ந்த வென்மனத் தூடுநின் னுள்ளங் குளிர்தவமெய்த்
தாளார்ந்த தொண்ட ருளந்தொறுந் துன்னடி சார்தலுண்டோ
வேளார்ந்த வின்பிற் பணிமரு தாசல வித்தகனே.
24✓
பகடேறி வந்ததட் டுங்கொடுங் கூற்றனும் பாவையர்த
மகடே றிடப்புரி மாரனும் வேதனு மான்றதையிற்
சகடே றிடுமரு தாசலன் றாளன்றிச் சாற்றுமண்ட
முகடேறி னாலும் விடார்மன மேசற்றுண் முன்னுதியே.
25✓
இந்தியத் தின்மனஞ் செல்லும் பொழுதி லிசைந்துளதாம்
புந்தியிற் காண்டரு சொற்ப னமாமிப் புவிப்பொருளை
நந்திற வாழ்வென் றுழல்வீ ரறிவின்மெய்ந் நாடியன்பின்
முந்தியுட் டோயு மருதா சலனடி முன்னுமினே.
26✓
தன்னையொப் பாம்வடி வேலாநின் றாட்டுணை தானினையா
தன்னையுந் தந்தையு முற்றாரென் றோர்கணத் தாயிரர்த்தோய்
மின்னையொத் தோடிடு பொன்னைநத் தென்னவி வேகந்தனை
யென்னையென் றோதிடு வேன்மரு தாசலத் தெம்மிறையே.
27✓
ஊனானெ னச்சொற் றுழன்ற தல்லாலுன துண்மையருண்
ஞானாநு பூதி நிலையோர் சிறிது நயந்தறியேன்
மானா ரகடு புகாமைக்கென் செய்வன் மலர்பொழியுந்
தேனார் தடம்பொலி சீர்மரு தாசல சிற்பரனே.
28✓
வேடம் புனைந்தெதிர் காண்போர்க ளுள்ளம் வெருளமெத்த
வாடம் பரஞ்செய் திடுவேனுன் பாத மடைவதுண்டோ
தோடம் பரந்திழி வேன்றலை மீதடி சூட்டிடுவாய்
நீடம் பரந்தொட் டிடுமரு தாசல நின்மலனே.
29✓
மலையிடத் தாடல்செய் நின்றிடுத் தாளென் மனமெனும்வன்
சிலையிடத் தாக வமைந்திட நீயுளஞ் செய்யிலுட
னுலையிடத் தாமெழு கேபோன் றிடற்கைய மொன்றுளதோ
தலையிடத் தாமணி நாகங் குலாமரு தாசலனே.
30✓
போதென் றுவமை பொருந்துநின் பாதம் புகுந்ததொண்டர்
கோதென்று விட்ட குணங்களெல் லாமொன்று கூடியென்பால்
வாதென்றுஞ் செய்ய மனந்தளர் வேனைநின் வாரிசத்தாண்
மீதென்று கூட்ட நினைவா யருச்சுன வெற்பரசே.
31✓
மாயையென் றொன்றுனை யல்லாதுண் டென்ன மதிக்கிலனுன்
சேயையிவ் வாறு செயலே னகலச் சினந்திடினுந்
தாயையல் லாலிளஞ் சேய்க்கிடம் வேறிச் சகத்திலுண்டோ
வேயையொப் பாமனத் தேற்கரு ளர்ச்சுன வேதாண்டனே.
32✓
காமன் றனதலர் வாளிக் கயர்ந்திளங் கன்னியரை
மாமன்ற லாற்ற மதிக்குநெஞ் சொன்று வழுத்திடக்கே
ளேமன் றருதுய ரெல்லையில் லாதண வெண்ணியருட்
சேமந் தருமரு தாசலற் றோயின்பஞ் சித்திக்கவே.
33✓
உருவாழ்வு கொண்டிட வாரமு தான வுணவுகொள்ளுந்
தருவாழ்வு தானுமொர் வாழ்வன் றெனிவிச் சகவநித்தக்
கருவாழ்வு கண்டிறு மாத்தனன் றோவுட் கலந்தழியாப்
பெருவாழ்வு சீர்மரு தாசலன் றாளவை பேணுநெஞ்சே.
34✓
விரவுஞ்சத் தாதிய வாமரு தாசல வேலநின்றாள்
பரவுஞ்சத் தார்குண வீரர்க டாரகப் பாதகனாற்
கிரவுஞ்சத் தார்தரு பெற்றியுற் றேனெனைக் கிட்டுபுவாழ்
தரவுஞ்சத் தாள்பெற நல்குநின் செம்பொற் சரண்சரணே.
35✓
செய்வகை யொன்றறி யாதே யுலகச் சிறுநடையி
னைவகை மிக்குழன் றேன்மரு தாசல நாயகயா
னுய்வகை கொள்ளநின் பாலடுத் தேனரு ளுற்றுனைத்தோய்
மெய்வகை யன்பரன் பீந்தா ளுணைமிக வேண்டினனே.
36✓
அல்லும் பகலு மறியா விடத்தி லமர்ந்தடியேன்
சொல்லும் பொருளுமற் றுன்பத பங்கயந் தோய்சுகத்தி
லொல்லும் படியெற் கருளுந் தினமொன் றுளதுகொலோ
செல்லும் பரிதியுந் தோய்மரு தாசல சிற்பரனே.
37✓
மனமென்ற பாவி மயல்கொண்டு தீவினை மங்கையர்தந்
தனமென்ற வெற்பி லிவர்ந்திழி யல்குற் சலதிபுக்குக்
கனமென்ற னந்தம் பிணிமழை பெய்யொய்க் கடங்கடக்குந்
தினமென்றென் றேனுஞ்சொல் வாய்மரு தாசல சேவகனே.
38✓
வனங்கா தலிக்குஞ் சடையானுங் கும்பனும் வாழ்த்துபுதம்
மனங்கா தலிக்கு மருதேசன் பாத மறந்துவன்பே
யினங்கா தலிக்கு மினமான மாதரொ டேதமிக்க
தனங்கா தலிக்கு மனமே யுனக்கென்ன சால்புடைத்தே.
39✓
தேனூறு மின்ப மருதா சலன்புகழ் செப்பெனவே
நானூறு கோடி தரமுனைப் போற்றி நவிலினும்விட்
டூனூ றுடையபொய் வாழ்விலின் புண்டென் றுழன்றனையா
லேனூ றுனைவிட் டகலுநெஞ் சேமதித் தெண்ணுதியே.
40✓
பவந்தோறு மென்மன மேயுன் வழியிற் படர்ந்தளவி
லவந்தோயுந் துன்புழந் தேன்பிறப் பொன்றிதி லாயினும்யா
னுவந்தோது மாற்ற மதித்தன்பி னோடென் னுடனிணங்கிச்
சிவந்தோயு மாமரு தாசலன் றாட்டுணை சேர்ந்துருகே.
41✓
பெருகும் பரசுகத் தேனல்குன் றாட்டுணை பேணியுள்ள
முருகருஞ் செயல்சற் றடையாத பாவி யொதியனையேன்
பொருகுஞ் சரநிகர் மெய்த்தொண்டர் பான்மை பொருந்தலுண்டோ
முருகுந்து தண்டலை சூழ்மரு தாசல முன்னவனே.
42✓
முன்னந் தரங்கக் கடற்றாண்டிச் சூரை முடித்திமையோர்
மன்னந் தரங்கவி னெய்தச்செய் தாளு மருதவெற்பா
யென்னந் தரங்க மறிந்துஞ் சிறிது மிரங்கிலர்போ
லின்னந் தரங்கம் பெறக்காண்ட னின்னருட் கேற்பதன்றே.
43✓
பழிக்கே பிறப்பிட மாமட மாதர்தம் பாலமுத
மொழிக்கே கலக விழிக்கே யிடையின் முடைகொளுந்திச்
சுழிக்கே விருப்பம் பெறுவதல் லாற்சிற் சுகங்கொணின்றாள்
வழிக்கே வராமனத் தாலிளைத் தேன்மரு தாசலனே.
44✓
வகையொன்றுந் தேர்கில னாயாண வாதி மலங்களினான்
மிகையொன்றும் வெம்பவத் தின்னன்மிக் கெய்த்தனன் வேதவருட்
சிகையொன்று நின்பதஞ் சூட்டிமெய்த் தொண்டர்கொள் சீர்பெறவே
தகையொன்று மாமரு தாசல சற்றெனைத் தாங்கிக்கொள்ளே.
45✓
வெப்பின் றியதண் விளக்கா யெனதுள மேவியநின்
னொப்பின் றியதுணைத் தாணாடிச் சற்று முருகலின்றித்
துப்பின் றியவத் தலையுமென் னெஞ்சநின் றொண்டரொப்பாத்
தப்பின் றியநெறி தாங்கலெந் நாண்மரு தாசலனே.
46✓
காலத்தை வீணிற் கழித்ததல் லாலருட் காட்சிபெறுஞ்
சீலத்தை யோர்சற் றறிகின்றி லேன்வெஞ் சினத்தொடிருட்
கோலத்தை மேவி வருநம னுக்கென் குயிற்றிடுவேன்
சாலத்தை நீக்கி யருண்மரு தாசல தற்பரனே.
47✓
சின்னஞ் சிறுபரு வத்தில்வந் தாண்டின்று தேர்கிலர்போற்
பென்னம் பெரிய துயருறக் கண்டும்பே சாதிருந்தாய்
கன்னங் கரிய நிறத்தந் தகன்கொளக் காட்டிவிடே
றன்னந் தனிப்பொரு ளேமரு தாசல சண்முகனே.
48✓
தருவாகி நின்றம ரர்க்குறு போகந் தருதலிற்சற்
குருவாகி வந்தடி யேற்கருட் சீலங் கொடுத்துமின்னங்
கருவாகி டும்வழி யென்னெஞ்ச மோடக் கறங்கிலெய்த்தே
னருவாகி வாழ வருண்மரு தாசல வாண்டவனே.
49✓
பண்டுண்ட வொன்றினை நாளும் புதிதெனப் பற்றுமிஞ்சி
யுண்டுண் டலைமனத் தேனீ யருள்சற் றுதவினன்றித்
தொண்டுண்ட மெய்யடி யார்போல நின்சிற் சுகக்கடலின்
மொண்டுண் டமையே னிசமரு தாசல முத்திவித்தே.
50✓
உலைக்கண் ணிடுமெழு கேபோல நெஞ்ச முருகுகன்பர்
முலைக்கண்ணிற் பாற்பெரு வாரிதி தோன்று முறையிலின்ப
வலைக்கண் ணியைந்தனர் நானேழை வஞ்சக வைம்புலப்பொய்
வலைக்கண் ணிருந்துயர் கொண்டேன் மருத வரையரசே.
51✓
நானுட னீயென் றிடும்பேத முற்று நசிக்கநறுந்
தேனுடன் பால்கலந் திட்டது மொப்பின்மெய்ச் சிற்சுகத்தி
லூனுட னுள்ள முருகும் படிக்கென் றுதவியென்னை
மானுடப் பேறு பெறப்புரி வாய்மரு தாசலனே.
52✓
மீனென்று மானென்றும் வேலென்றுங் கோலென்றும் வேடனம்பு
தானென்று மாதர்கண் ணைப்புகழ் மோகந் தவிர்ந்தவனி
வானென்று மேத்து மருதாச லேசநின் வண்புகழ்ச்சீர்
நானென்றுந் துத்தியுஞ் செய்துய்யு மாறுரு ணல்குவையே.
53✓
விடந்தீண் டிடுந்தகை போலெனைச் சற்றும் விடாதுமயற்
சடந்தீண்டி வாதனை தந்திடச் சாலத் தளர்ந்தனன்வா
னிடந்தீண் டியமரு தாசல மீதி லிலங்குனின்ப
நடந்தீண் டியபத நான்றீண்ட வென்றரு ணல்குதலே
54✓
வழியாது மோர்கில னாயா ணவவன் மலத்தினுட்கண்
விழியா தழுஞ்சிறு சேய்போற் கிடந்து வெதும்புகின்றேன்
சுழியா தருளிலுய் வேன்சோதிப் பானீ தொடங்கியுய்யேன்
பொழிவார் மதுப்பொழில் சூழ்மரு தாசலப் புண்ணியனே.
55✓
புண்ணியர் யாருநின் பொன்னடி போற்றிப் பொருவிலின்பாங்
கண்ணிய மெய்திக் களிதூங் கினரிக் கடையவனேன்
மண்ணியல் வாழ்க்கையை மெய்யென்று நாடி மதியிழந்து
புண்ணியன் மாயையி லாழ்ந்தேன் மருதப் பொருப்பிறையே.
56✓
அந்தோவிவ் வேழைச் சிறியேந் சகித்தற் கரியதுன்பா
னொந்தோல மிட்டரற் றும்பான்மை தன்னையுண் ணோக்கினிற்குச்
சந்தோட மேவுவ தோமே விடிலதென் சம்மதங்காண்
பைந்தோகை யாட லறாமரு தாசலப் பார்த்திபனே
57✓
கவலைகள் யாவுங் கழிந்தேநின் செம்பொற் கழற்றுணையா
முவமையின் மெய்ச்சச்சி தானந்த வாரிதி யுண்டெழுந்து
நவரசப் பாடல் பல் கோடிபெய் தாட னவிற்றவென்னுட்
டவவிழைந் தேன்மரு தாசல வாஞ்சை தருவதென்றே.
58✓
வார்க்குங் குமமுலை யாரநு ராக வழியிலென்னை
யீர்க்குங் கொடுமனப் பேய்க்கோட்பட் டெய்க்குமெ னின்னலறத்
தீர்க்கும் படியென்று நீநினை வாயுயர் சேணையெட்டிப்
பார்க்குஞ் சிகரி குலாமரு தாசலப் பார்த்திபனே
59✓
திருந்துங் குணமலி மெய்த்தொண் டடியவர் சென்னிமிசை
பொருந்தும் பதமலர்க் கென்சென்னி சாலப் பொருத்தமின்றோ
முருந்துந் தளவ வரும்பும் பொருங்கதிர் மூரல்வள்ளி
வருந்துன் படவி புகுமரு தாசல வானவனே.
60✓
கீர்த்தியென் றூழ்மரு வென்னே ரருண கிரிப்பெயர்சான்
மூர்த்தி புகலுன் றிருப்புகழ்ப் பாக்கண் முதிருமன்பி
லார்த்தியி லோதித் துதிக்காத வத்தி லலையெனக்கண்
பார்த்திடு தற்கிசை வாயோ மருதப் பருப்பதனே
61✓
பனையென்று நீடுயர் பல்கோடி நல்குமிப் பார்நடையின்
மனையென்று மைந்தரென் றுஞ்சுழன் றெய்க்குமென் வஞ்சநெஞ்ச
நினையென்று மன்பி னினையென்று சால நிகழ்த்தினும்யான்
றினையென்றுங் கொள்கில தேமரு தாசல சிற்பரனே.
62✓
கண்டுண்ட மாதிய கொண்டுநின் றாளிற் கலந்தவின்ப
மொண்டுண் டகிலச் சிறுநடை தோயு முயக்கறுமெய்த்
தொண்டுண்ட பேரன் பினர்போ லடியேன் றுலங்கிடுநா
ளுண்டுண்டு கொன்மரு தாசல வேலவ வோதுதியே.
63✓
வேதா கமமுடி மீதே முடியில் விளங்குநின்பொற்
பாதார விந்தமல் லாதுன தாணையிப் பார்மிசையோ
ராதாரங் காண்கில னீதுன் னுளமறி யாச்செயலோ
மாதா பிதாகுரு வாமரு தாசல வானவனே.
64✓
மட்டாரு நின்பொற் சரண்சர ணென்று மதித்தவெனை
யெட்டாத பேரின்ப ஞானாநு பூதி யிசைத்தருளில்
விட்டாலு மல்லது மாபாவி யென்றுள் வெறுத்திருளி
னுட்டாழ வைக்கினும் பாரநிற் கர்ச்சுன வோங்கலனே.
65✓
மயனிறை வுற்றபொய்ப் பார்மீதிற் றந்தை மரபமைந்தா
ரியனினைக் குந்தொறுஞ் சோதனை நீமிக் கியற்றிடினும்
வியனில குற்றெனொர் நெஞ்சத்து ளோகை மிகுகின்றதால்
கயனில வுஞ்சனை யார்மரு தாசல கந்தப்பனே.
66✓
தேனென நின்புக ழேபாடு மாசை செறிந்தவெனை
யானெனக் கூவி யணையாம னெஞ்சத் தருளர்போ
லேனெடுஞ் சோதனை பல்வா றியற்றியு ளெய்க்கவைத்தாய்
கானெழுந் தண்டலை சூழ்மரு தாசல காங்கெயனே.
67✓
பித்துல கத்தவர் தம்மையுற் றாரெனப் பெற்றவரோ
டொத்துழ லுங்கொடு மாயப் பிணிமுற் றொழிந்தறவே
நத்துல வுங்கட லுண்டாற் கருண்மொழி நல்கிடுவாய்
சத்துமுன் முப்பொரு ளாமரு தாசல சற்குருவே.
68✓
எற்றுங் கொடும்புலக் கோட்பட்டி யான்மீண் டிரங்குசெயன்
முற்றுந் தெரிந்து மிரங்கா திருத்தன் முறைமைகொல்லோ
வெற்றுன்ப நின்றுனை யல்லா லெடுப்பவர் யாரிசையாய்
விற்றுன்று மண்டிவந் தோய்மரு தாசல வித்தகனே.
69✓
மானிட ரானவர் யாவரு மர்ச்சன வள்ளனின்றாள்
வானிடந் தோய்ந்திறப் பின்றிய வானந்த மன்னினர்யா
னூனிதி லாசை மிகுத்தே யுணர்வற் றுழன்றிடும்வெங்
கானிடத் தார்விலங் கொத்திழிந் தேன்கதி காண்பதென்றே
70✓
மனங்கண்ட குற்றங்கள் பற்பல கோடி மலைகடல்போற்
றினங்கண்ட பாவிக் கொடியெனென் றுன்மெய்த் திருவுளத்திற்
சினங்கண் டனையெனி னாயேன் றனக்கொரு திக்குளத்தோ
கனங்கண் டகவுஞ் சிகিমரு தாசல கந்தப்பனே.
71✓
எப்படி யாகினு நம்மைவி டானெந்தை யென்றுதின
மிப்படி மீதெதிர் கண்டோ ரிடத்து மிசைக்குமென்சொல்
பொய்ப்படி யாகிடு மாறரு ளாது புறக்கணியேன்
முப்படி யுந்தொழுஞ் சீர்மரு தாசல முன்னவனே.
72✓
வம்புந்து மைம்புல வேடர்க ளான்மிக மாழ்கிநொந்து
வெம்புந் தகையுடை யேனா யினுநின் விரைமலர்த்தா
ணம்புந் தகையு முடையே னெனைக்கை நழுவவிடேல்
கொம்புந்து தேன்கொட் டிடுமரு தாசலக் கொற்றவனே.
73✓
வேண்டா திகழ்ந்துரைக் குஞ்சமன் றன்பதி மேவநம்மைக்
கூண்டா ரொடும்வந் தழைக்குமக் காலுளக் கோயிற்கொண்ட
வாண்டான் மருதப் பிறங்கலில் வாழ்தும் மருட்கடறான்
வீண்டா னிருந்திடு வானோவ வன்றுதி விண்மனமே.
74✓
கற்பனை பற்பல கோடிகொண் டொவ்வொர் கணத்துமுயர்
மற்பனை போற்றுயர் கொண்டுகொண் டேங்கென் மடநெஞ்சமே
யற்பனை மார்க ளனந்தரிற் சீர்த்த வருண்மருத
வெற்பனை நாடுதி யேலெய்து மின்பம் விளம்பரிதே.
75✓
கோதுசெய் வஞ்சக் கொடுமாயை யின்னங் குவலயத்திற்
காதுசெய் வஞ்ச விழியார் கரங்கொளக் காட்டிடுமோ
யாதுசெய் யுங்கொலென் றேங்கிடு வேற்கு ளிரங்கியெந்தப்
போதுசெய் வாயுருண் மாமரு தாசல புண்ணியனே.
76✓
ஆனந்த வாரிதி மேலெழுந் தார்க்கு மலையெனவே
நானந்த மின்றிநின் சீர்கோடி யாக நவின்றுதியா
வானந்த மெய்திட வாஞ்சித் தனனந்த வண்ணநல்கா
தேனந்த வீண்டலைக் கின்றா யருச்சுனத் தெம்மிறையே
77✓
பேயென்று மேலவர் தாம்வெறுத் தோதிய பேதையர்தோள்
வேயென்று மங்கதைத் தோயென்றுஞ் சால விளம்பியென்னை
நோயென்றுஞ் செய்மன மேமரு தேசனை நோக்கியன்பிற்
சேயென் றுரைத்தறி வாயெனின் மற்றிதைச் சீயென்பையே
78✓
எங்கெங்கு போஞ்சனி கட்பற்றிச் சுற்றமென் றெண்ணியிகத்
தங்கங்குஞ் சென்று பொருளிட்டி மற்றவர்க் காக்கிமிகு
பங்கஞ் சுமந்து மடிவேற்கு ஞானம் பலித்திடுமோ
துங்கம் பொருந்து மருதா சலத்தமர் தூமணியே
79✓
நசைசான்ற தொண்டர்க டோய்மரு தாசல நாயகனின்
னிசைசான்ற பத்தியில் லாரிறு மாக்கு மிகற்கலியில்
வசைசான்ற விவ்வுல கத்திருத் தற்குண் மதிக்கலனித்
தசைசான்ற துன்பப் பொறையொழித் துன்பதஞ் சார்த்தருளே
80✓
பணமென்று மாடென்றுங் காடென்றும் வீடென்றும் பாவைநல்லார்
மணமென்றும் பேசி யிருந்தே சுவாச வழக்கொழியிற்
பிணமென் றெடுத்திடு காட்டிட் டழுதமை பேயர்நட்பைக்
கணமென்றும் வேண்டுகி லேன்மரு தாசல காத்தருளே.
81✓
அம்பர மோவெனுங் கண்மட வார்மிசை யாசைமிஞ்சிப்
பம்பர மோவென வோயாது சுற்றுமென் பாவிநெஞ்சஞ்
செம்பர மோக்கம வாயுனை நாடொர் தினமுளதோ
வம்பர மோடணை யுங்கோ புரமரு தாசலனே.
82✓
ஞானத் திருப்புளஞ் சாலரு ணைச்சுக நாதனவில்
கானத் திருப்புக ழோதியொர் சற்றுங் கசிந்துருகா
வீனத் திருப்புள வஞ்சனை யுன்னடி யெய்துமுன்பர்
மானத் திருப்புகண் டாய்மரு தாசலம் வாழ்குகனே.
83✓
முன்னெஞ்ச லின்றி யருளாடல் கோடி முயன்றதன்பர்
நன்னெஞ்ச மேவிய தன்மையி னாலென நன்குணர்ந்தே
னென்னெஞ்ச மேவிய தன்மையி னிற்கு மிரங்குகிலா
வன்னெஞ்ச மாகிய தான்மரு தாசல மாமணியே.
84✓
மதிகொண்ட தொண்ட ருளத்தோ டுயரு மருதவெற்பிற்
குதிகொண்ட தாமரைத் தாள்சிரஞ் சூட்டியென் கோதொழித்துப்
பதிகொண்ட வாழ்விற் பதித்தரு ளாய்செழும் பங்கயந்தோய்
சுதிகொண்ட நான்மறை யோனாதி யர்தந் தொடர்பறவே.
85✓
தேகாபி மானத் தளையுண்ட நித்த செகப்பெயர்கொண்
மோகா டவியிற் சுழல்பாவி வன்கொடு மூர்க்கனிவ
னாகா தவனமக் கென்றுளத் துன்னி யகற்றுதியே
லேகா வருட்கட லேமரு தாசல யார்கதியே.
86✓
தாயா தரிக்கில னேற்பிள்ளைக் கேதொரு சார்பதுபோ
னீயா தரிக்கிலை யேன்மரு தாசல நெஞ்சயர்ந்திட்
டோயா தரிக்கும் புலனா லலைப்புண் டொழிவதல்லாற்
சேயா தரிக்கும் வகையேது நீயுட் டெரிவதிதே.
87✓
முருகாவென் றுன்னரு ணாமமெய் யன்பின் மொழிந்திடுவாட்
கருகாகி நீகர மீந்தாண் டருள்கை யறிந்திருந்தும்
பெருகா தரங்கொடுன் பேரோதி நின்னடி பேணிலராய்
வருநாசிக் கான்மறிப் பார்மதி யென்மரு தாசலனே.
88✓
மையுற்ற வையக் கடத்தின்மின் னாரென் வனசரரென்
கையுற்ற ஞானப் பொருளா றலைக்கக் கலங்கிநொந்தேன்
மெய்யுற்ற நின்னரு ளாந்துணை தன்னை விடுக்கிலுய்வேன்
வையுற்ற வேற்படை யாய்மரு தாசல வானவனே.
89✓
கரணத்தொ டைம்பொறி யாதியு மெத்தக் கலங்கவரு
மரணத் தொடுபவ மென்றெற்றொடர்பிணி மாற்றவுன்பொற்
சரணத் துணைசர ணத்துணை யாமெனச் சார்ந்தனன்பைங்
கிரணத் தொகரப் பரியூர் மருதக் கிரிக்கந்தனே.
90✓
வன்புள மாயை வடிவா மனமென் வசமகன்றே
துன்புள வைம்புலப் பாற்கணந் தோறுஞ் சுழற்றவெய்த்தே
னன்புளத் தொண்டர் பெரும்பே றெனக்கென் றளித்தருள்வாய்
பொன்புணர் கஞ்சத் தடஞ்சூழ் மருதப் பொருப்பிறையே.
91✓
உலைமீ துறுமெழு கேபோல நெஞ்ச முருகிடவென்
றலைமீதுன் பொன்னடி சூட்டிமெய்த் தொண்டர்கள் சார்ந்தவின்ப
நிலைமீ தமையப் புரிந்தருள் வாய்நிக ரின்மருத
மலைமீ தமைகுரு வேசற் றுனது மனமுவந்தே.
92✓
தாட்டா மரைத்துணை யென்சென்னி மீதிற் சதுமுகன்கை
தீட்டாமற் சேய்கொள்ளி நாட்டாமு லுள்ளஞ் சிறிதிரங்கிச்
சூட்டாமன் மெய்ந்நிலை காட்டாம லின்னமுஞ் சோதனையோ
சேட்டா மருவு மருதா சலத்தெஞ் சிவக்கொழுந்தே.
93✓
விரதவித் தாரமெய்த் தொண்டர்க ளொத்திட மேனடிக்கும்
பரதவித் தார முடையே னெனினுநின் பங்கயந்தோய்
சரதவித் தாகிய வாஞ்சையு ளேன்மரு தாசலஞ்சால்
வரதவித் தாலென்னை யாட்கொள்ள நிற்கொர் வழக்குளதே
94✓
எனைத்தடுக் குந்தடை யெல்லாந் தடுத்துனை யெய்தநெஞ்சி
னினைத்தடுத் தேனடி யேற்கருள் செய்ய நினைத்தடுக்கி
னினைத்தடுக் குந்தடை யொன்றுள தேகொ னிகழ்த்திடுவாய்
கனைத்தடுக் கும்புய றோய்மரு தாசலக் காவலனே.
95✓
வெதுப்புஞ் சகலத் தொடுகேவ லத்தில்வி ழாமலுன்பொன்
மதுப்புண் டரிகத் திருத்தாளி லென்றெனை வைத்தருள்வாய்
சதுப்புந்து மாயைப் புவிவாழ்வி லிச்சை தவிர்ந்தவருள்
விதுப்புந்து சீர்மரு தாசல மேவிய வித்தகனே.
96✓
மின்கவின் மேனி யுருட்குரு வாக விளங்கியரு
ணின்கரு ணைத்திறஞ் சற்றேனு மன்பி னினைந்துருகா
வன்கருங் கல்லன்ன நெஞ்சகத் தேன்வயக் கும்பிழைகட்
கென்கட வேன்கழு வாய்மரு தாசலத் தெம்மிறையே.
97✓
சும்மா விருசொல் லறவென்று நீமுனஞ் சொற்றலுமே
யம்மா பொருளொன் றுமறிந் திலனெ னருணையெங்கோன்
விம்மானந் தானு பவஞ்சிறி யேற்கு விளக்கிடுவாய்
கைம்மா வுலவும் பொழின்மரு தாசல காரணனே.
98✓
மலவாகக் கானடைந் திட்டே னடைக்கல மற்புரியும்
புலவேட ராலரிப் புண்டே னடைக்கலம் புன்மனச்சஞ்
சலவாழ்க்கைக் குட்சலித் திட்டே னடைக்கலந் தாங்கியரு
ணலமேற் றடைக்கல நான்மரு தாசல நாயகனே.
99✓
வள்ளிதெய் வப்பிடி நாதா வபய மணங்கமழுங்
கள்ளிய னீபத் தொடையா யபயங் கலாபவெழிற்
புள்ளி மயிற்பரி யானே யபயம் பொருதுசத்தோ
டொள்ளிய வேன்மரு தேசா வபய முனதடிக்கே.
100✓
படைக்கலந் தாங்கிப் பொரும்வேள் சமன்றன் பகைபெறும்பார்
நடைக்கலந் தோர்புக லுங்காண் கிலதுநின் னாண்மலர்த்தாட்
கடைக்கல மாயின னாயேனை யுன்ற னருளடியார்
புடைக்கலந் தின்புறப் பார்மரு தாசல போற்றியவே.
101✓
திசையாறு மேமுக மாய்ச்சம யங்க டிருப்புயமா
யிசைவேத வாகம நிச்சயந் தாள்க ளிரண்டெனக்கொண்
டசையாப் பரந்தண்ட மேந்துகைத் தேசிக னாமுருவாய்
நசைதோ யடியர் தொழமரு தாசல நண்ணியதே.