முருகன் App
முருகன் பாட்டு
சி. சுப்பிரமணிய பாரதியார்
பாட்டு1 / 2
முருகன் பாட்டு · சி. சுப்பிரமணிய பாரதியார்

பாட்டு

பல்லவி✓
முருகா-முருகா-முருகா
1சரணங்கள்✓
வருவாய் மயில்மீ தினிலே.
வடிவே லுடனே வருவாய்
தருவாய் நலமுந் தகவும் புகழுந்
தவமுந் திறமுந் தனமுங் கனமும். (முருகா)
2சரணங்கள்✓
அடியார் பலரிங் குளரே
அவரை விடுவித் தருள்வாய்
முடியா மறையின் முடிவே! அசுரர்
முடிவே கருதும் வடிவே லவனே! (முருகா)
3சரணங்கள்✓
சுருதிப் பொருளே, வருக.
துணிவே, கனலே, வருக.
கருதிக் கருதிக் கவலைப் படுவார்
கவலைக் கடலைக் கடியும் வடிவேல் (முருகா)
4சரணங்கள்✓
அமரா வதிவாழ் வுறவே
அருள்வாய்! சரணம், சரணம்!
குமரா, பிணியா வையுமே சிதறக்
குமுறும் சுடர்வே லவனே, சரணம். (முருகா)
5சரணங்கள்✓
அறிவா கியகோ யிலிலே
அருளா கியதாய் மடிமேல்
பொறிவே லுடனே வளர்வாய், அடியார்
புதுவாழ் வுறவே புவிமீ தருள்வாய். (முருகா)
6சரணங்கள்✓
குருவே, பரமன் மகனே,
குகையில் வளருங் கனலே,
தருவாய் தொழிலும் பயனும், அமரர்
ஸமரா திபனே, சரணம் சரணம். (முருகா)