முருகரநுபூதி
உமாபதியார்
முருகரநுபூதி · உமாபதியார்
நூல்
1✓
உலகா திபர்கோ தையுமா பதிநீள்
புலவோ னனுபூ திபுகழ்ந் திடவே
பலநாயகர் பார்வதி தென்பனகா
சலவேலவர் நாமகள் தாள் துணையே.
2சரவணபவன் துணை✓
பூவே மணமே பொருளே யுரைபூங்
காவே சுவையே கருணா நிதியே
கோவே மதியே குணவா ரிதியே
தேவே அரவா சலதே சிகனே.
3ஈசன் புகழ்தல் தோத்திரம்✓
சீலா சரணஞ் செகசோ திமய
வேலா சரணங் கள்விசா கானனுங்
கோலா கலனே சரணங் குமரி
பாலா சரணம் பரிபூ ரணனே.
4ஈசன் புகழ்தல் தோத்திரம்✓
கந்தா சரணம் கயிலா சபதி
நந்தா சரணங் கிரிநா சன்மகள்
மைந்தா சரணஞ் சரணங் கயிலை
விந்தா சரணஞ் சதுர்வே தியனே.
5ஈசன் புகழ்தல் தோத்திரம்✓
சரணம் பரனார் விளிசார் பதமே
சரணஞ் சுரர்பூ சிததா ளிணையே
சரணந் தமியே னிதயந் தனில்வாழ்
சரணஞ் சரணஞ் சிவசண் முகனே.
6ஈசன் புகழ்தல் தோத்திரம்✓
போற்றி மறையா கமபூ சிதனே
போற்றி யெனையாள் பரிபூ ரணனே
போற்றி பழனா புரிமே வரசே
போற்றி சிவமேர் வளர்புண் ணியனே.
7ஈசன் புகழ்தல் தோத்திரம்✓
சங்கம் திருநே மிதரித் தபிரான்
பங்கென் றுரைபெண் டிருபார் வதியும்
தங்குந் திருநா டதுதன் னில்வளர்
செங்குன் றினின்மே வியசே வகனே.
8மனமிரங்க✓
மலையா கியகுன் றுகள்தேர் வடிவுஞ்
சிலையா கையிலோ யிதுசே குணம்
கலையா கனிவெள் ளனவுங் கருணை
அலையா கிரிமே வியவந் தணனே.
9விகாரமடக்க✓
மோகா மவிகா ரமுனிந் தடியேன்
யோகா தியில்நின் றொளியா முருவ
மோகா னவுமின் பமெனக் கருள்வாய்
நாகா சலமே வியநா யகனே.
10அன்னமளிக்க✓
கனகா சலமுந் தணிகா சலமென்
மனமே யெனவந் துநிறைந் துவளர்
அனதா னவினோ தஅலங் கிருதா
பனகா சலமே வும்பரா பரனே.
11பிணி விலக்க✓
பிணியே உடல்கொண் டுபிலன் றவிறு
மணியே திருவிஞ் சைமருந் தமுதாம்
வணிகே சுரனே சிவமா மலைவாழ்
தணியே திரிலோ கதயா பரனே.
12வித்தையுண்டாக✓
வேதா கமநூல் விவரங் களிதென்
றோதா யறிவா னதுகந் திடவே
நாதா மனநா வினினின் றுலவுங்
கோதா புரிமே வுகுணா நிதியே.
13நீதியுண்டாக✓
என்னா லுனையிப் படியே னிதமாய்
மன்னா நிதியென் றுவருந் திடுவேன்
என்னான் முடியா துதியங் கிடுமென்
நன்னா கசிவா சலநா யகனே.
14பயம் தவிர்க்க✓
எங்கோ னெனதுள் ளமிருந் துவளர்
பங்கோ னெளியோர் கள்பயங் கரனேன்
றங்கோ லியநா யனையஞ் சலிசெய்
செங்கோ டினின்மே வியசே வகனே.
15தரிசனந்தர✓
பொன்கோ தைசகோ தரியாள் புதல்வி
மின்கோ தைசுதாள் சுதைவேல் மயிலோ
டென்கோ தயவாய் வருநா ளெதுவோ
தென்கோ தையின்மே வுசிரா மணியே.
16செல்வமுண்டாக✓
எந்தா யுமெனப் பரிந்தங் கிருதி
யிந்தா வெனவந் தருளீ கையது
தந்தால் வளர்செல் வமதுந் தணிவோ
கந்தா மணிமோ வளர்கா ரணனே.
17வாழ்வு உண்டாக✓
சீரும் பெருவாழ் வதுசேர் கமனந்
தேரும் வடியே யினிதே செயலால்
பேரும் புகழுண் டுபிழைத் திடுவேன்
காருந் தணிகா சலகாங் கெயனே.
18நின்பதி யுண்டாக✓
நூரு ரதிபன் றருநுண் ணிமையான்
ஓரூர் நிலையென் றுஉகந் திலையென்
ஊரு ரலைகொண் டுவுழன் றிடவோ
சீரூர் திருவே ரகதே சிகனே.
19பேதம் நீங்கல்✓
அகரா தியினந் தமெனட் சரமும்
சகலா கமவிஞ் சையதுஞ் சமைய
மகமா பகைய தாய்வளர்ந் துகுகா
சிகரா சலமே வியசே வகனே.
20திருவாய் மொழிய✓
இப்பா ரினிலுன் னையலா மல்என்
றொப்பா ரிணையார் நிசமுள் ளவரார்
செப்பாய் கலிகா ரணதெய் வமெனுந்
அப்பா பழனா புரியான் குகனே.
21அடியார் புகழ்தல்✓
சிந்தத் தருணந் தனையே தெளிவாய்
வந்துன் செயலென் றதைவா வியவுன்
மைந்தன் புவிவாழ் கிறதுன் பெருமை
யுன்றன் புகழல் லவதோ குகனே.
22செய்வினை யற✓
விண்ணோர் துதிமே விம்விறா விமலை
துன்னார் மறையும் பயில்சுவா மிமலை
குண்ணா மெதினுங் குதிகொண் டபிரா
னெண்ணா வினையென் றறிநீ மனமே.
23வறுமை தொலைய✓
ஒருகா லமுநிந் தைகளுங் கலிநோய்
வருகா லமுநீ துணைவந் தருள்வாய்
முருகா வசுதே வமுரா ரிதிரு
மருகா நிதிசேர் வணிகே சுரனே.
24கரி விலக்கல்✓
சதமா யுனைநம் புவர்தம் விழிதேர்
பதசேர் வையிரும் படியி வையருள்
சுதது ரகேசன் றனையன் றிரைகொள்
மதவா னைசகோ தரவல் லவனே.
25நஞ்சு விலக்கல்✓
காலுண் டதிலாத் துக்கக் கும்விடம்
மாலுண் டரனுண் டதுமாய்ந் திடவே
பாலுண் டதுபோல் வினைபா யும்விடம்
வேலுண் டிடவே விடுவே லவனே.
26இருள் விலக்கல்✓
தூர்மே கமதாய் வருசூ ரர்கண்மேல்
போர்மே வியுமே பொடிசெய் தவனே
சீர்மே வுசெழுஞ் சுடர்தீ பகமே
கார்மே விருள்தா கதிர்வே லவனே.
27விஷம் விலக்கல்✓
அலகூர் விடமுன் கருடா சலனார்
உலகூர் விடமுண் டுவுலா வுதல்போல்
நிலமே விடவென் றுநிறைந் தவனே
வலகூர் விடமுன் மயில்வா கனனே.
28இடர் விலக்கல்✓
மேன்விஞ் சையர்தம் மிடம்வே தவிநி
தான்முன் வினையுங் கிரகசா ரபலன்
ஏன்வந் திடுமுன் செயலோ திதெலாம்
பான்முன் பனிசெய் பனகா சலனே.
29மாயை விலக்கல்✓
வடுவா கியமா யவலைக் குள்மனந்
தடுமா றியுழன் றுதவிக் குதெனை
யடுபா விமயக் கமறுத் திடவே
தொடுவேல் முருகா சுரர்பூ பதியே.
30நினைத்தது முடிய✓
உனதா வல்மிகுந் துளனுன் னடியார்
மனதா வல்முடிந் திடவந் தருள்வாய்
எனதே வலுகந் துனதின் பமருள்
அனதா னகுகா கருணா கரனே.
31சருவ வசீகரம்✓
அருவா யுருவா யகமே வுயிராய்
குருவா யரசாய் நிலைகொள் பொருளாய்
தருவாய் மணிமந் திரமா கியவா
வருவாய் துணைசர் வவசீ கரனே.
32செக மோகனம்✓
தருகா ரண்முதல் தானே வருவ
குருகா வலளென் றசொல்கொள் பவனே
வருகார் மயில்மீ தினில்வா துணையாய்
முருகா அருள்சேர் செகமே கனனே.
33ஸ்திரீ மோகனம்✓
அகவா கனனா லயர்தோ கையரும்
சகவாழ் வையிகழ்ந் துனதாள் கருதும்
புகழ்சீர் வடிவே பெருபூ பதியே
செகமோ கனதெய் வசிகா மணியே.
34பிறர் மனை விரும்பாமை✓
தருகா தலிமார் மயல்தங் கிமனம்
உருகா நிலைதந் திரவும் பகலும்
முருகா வெனநா வில்ஒளிந் திடவா
தருகாக வும்நின் றெனையஞ் சலியே.
35நமன் விலக்கல்✓
நமனும் பகடே றியும்நா டியெனைச்
சமரம் புரியா தகைதந் தருள்வாய்
தமரும் பெறுதாய் குருசா மியெனங்
கழுமுள் ளுயிரா கியகா வலனே.
36இல் வாழ்க்கை✓
உனையின் றியும்வே றுபொரு ளுளதாய்
நினையென் றிடினும் நினையே னிதமாய்
மனையுந் திருமக் கள்நல்வாழ் வதுவுந்
தனையும் தொலையன் பருள்சண் முகனே.
37மனம் ஒருவழிப்பட✓
அலைபட் டுளம்நொந் துமலைந் துமனங்
கலைபட் டதுழன் றுகலங் குதெலாம்
நிலைபட் டதுநேர் நிலைநின் றிடநூல்
வலைகட் டிடுவள் ளிமனோ கரனே.
38நோய் விலக்கல்✓
நீயும் பரிவுள் ளநிறைந் தமையால்
நோயும் பொடுயா மிடிநொந் துவிடும்
தேயும் சுடுகா ததுதின் றிடுகார்
வாயும் பகையா துமனோ பவனே.
39பூதம் பிசாசு விலக்கல்✓
தாயும் தமரும வளர்சங் கரனார்
சேயுந் துணையுண் டுசினந் துகுறள்
பேயுந் தொடரா தபிலன் றவறு
தாயும் பொருளென் றறிவாய் மனமே.
40வழித் துணை✓
படிமே லுனையண் டியபத் தரிடம்
குடியா கவுநின் றிடுகோ லமெனில்
அடியார் பிணையுண் டதனா லுனது
வடிவேல் துணையுண் டுவழித் துணையே.
41✓
அயிலுந் துணையுண் டுனதன் பதுவுஞ்
செயலுந் துணையுண் டுதினந் தினமும்
பயில்மந் திரமுண் டுபசுங் கலப
மயிலுந் துணையுண் டுவழித் துணையே.
42துயில் விலக்கல்✓
தாயுண் டிருவோர் கள்சம தரமென்
வாயுண் டெனதன் புமனந் தனிலே
நீயுண் டெனதுள் ளருறைந் தசெய
லேயுண் டொருசிந் தையெனக் கிலையே.
43தாழ்வணுகாமலிருக்க✓
இயலுண் டறிவுண் டிமையோர் பணியும்
புயமுண் டிளையோ னிடம்பூ ரணநன்
மயமுண் டரவா சலமா மலையார்
தயவுண் டுநமக் கொருதாழ் விலையே.
44துணையிருக்க✓
அணையுண் டிடறாக் கயிலா றுமுகந்
துணையுண் டடியார் சுகம்போ தரவும்
பிணையுண் டிணையோன் அருள்பே சிடுநோய்
மனையுண் டனுபூ திமனத் துணையே.
45அடைக்கலங் காக்க✓
தாளுங் கலியும் பிணியுஞ் சமனுங்
கோளங் குறியா தெதுகொள் கையெனில்
வாளுந் தமியே னுடல்வல் லுயிரும்
ஆளுங் குருசா மியடைக் கலமே.
46வரங் கொடுக்க✓
நீதா வரமென் றுநினைந் தவுடன்
நேதா னெதிர்வந் தறிவென் னினது
மேதா விழிசிந் தையின்மே விவளர்
நாதா யெனையாள் குருநா யகனே.
47பேசி விலக்கல்✓
பாலா மொழிபைங் கொடியார் கலவி
மாலா னதையென் றுமறந் திடுவேன்
கோலா கலவே லவனே குமரி
லீலா மறைபூ சிதநே மனனே.
48சூனியம் விலக்க✓
மூவர்க் கொருகா ரணமூ லமெனத்
தேவர்க் குயிர்தெய் வசிகா மணிநின்
காவல் துணையுன் கவசந் துணையா
யேவல் பிணியே தணுகா தெமையே.
49ஊமை விலக்கல்✓
உருகா மனுமவி ணச்சியும் பிரமன்
தருகா மன்வ ரந்தர வேபிணி
மருகா யதுதாய் நிலைமா றியுநின்
றிருகா ரணமுந் தருதே சிகனே.
50மனந் தெளிவு✓
சிலைநம் முறுமென் றுதியங் கியதில்
இலையுண் டெனவெண் ணுமியற் கையெலாம்
நிலைகண் டனனெங் கும்நிறைஞ் சனனே
தலைகொண் டனனுன் பததா ளிணையே.
51சஞ்சலம்✓
சிலையென் றிடுகா மலினிற் றலமாம்
நிலைநின் றிடுசெல் வமுநின் கருணை
அலைவின் றியெனக் களித்தா லடசஞ்
சலைகுன் றியுனன் புதனைத் திடுமே.
52பாரஞ்சுதல்✓
நின்பங் கடியற் கினநீ மகள்வாய்
துன்பங் கணுமின் பசுநந் தரினும்
நன்பங் கல்சேர் நலமுங் கேடும்
உன்பங் கெனதொன் றிலையுத் தமனே.
53மனக் குறை தீர✓
துறையா னவர்தம் முடனே சுதனும்
குறையா றியுமன் புகொடா ததின்மேல்
முறைதா னெவரோ டுமொழிந் திடுவேன்
தறைமேல் வளரிம் பர்தயா நிதியே.
54வஞ்சனை செய்யாதிருக்க✓
நினையுந் தமியே னிடம்நே ரெனவஞ்
சனைவந் திடுகா விதயந் தருவாய்
வினைநிந் தையதா யமர்மே வசுரன்
தனைவென் றிடுகா ரணசண் முகனே.
55நர ஸ்துதி செய்யாதிருக்க✓
நணம்பா விலுனைப் புகழ்நா வினியே
மணம்பா லரைநத் திவருத் துவதும்
பணம்போ கலிதொந் துபரந் திடவுன்
கணம்பார் முருகா கருணா நிதியே.
56வறுமை தீர✓
சிறுமைப் பொழுதே அருள்செய் தபிரான்
வறுமைக் கிடமாய் விடும்வன் மையதும்
பெருமைக் கிடமா வதின்பே சுவனார்
அருமைத் துரையே யெனையாண் டவனே.
57துயர் தீர✓
காவே றுதுசிந் தைபசுங் கலப
மாவே றியும்வந் தென்மனத் துயர்தீர்
சேவே றியதே வர்செழும் புயமென்
நாவே றியசீர் பதநம் பினனே.
58மனக் குறை✓
திருவுங் கனசெல் வமதுன் செயலும்
வருகும் வருமென் றுவழுத் திமனம்
உருகும் படியன் றியுமொன் றறியேன்
குருவென் றுணையிப் படியோ குகனே.
59கிருபை யுண்டாக✓
ஐயன் செயலிப் படியா னதன்மேல்
வையந் தனிலா ரைவழுத் திடுவேன்
நையும் படியே விடநான் மறுகச்
செய்யுந் தொழிலே திலைதே சிகனே.
60மனமிரங்க✓
அண்டுஞ் சிறியே னையுமா ളடிமை
கொண்டுந் தமியே னுடைக்கோ லமெலாம்
கண்டும் பரிவின் றியகா ரணமென்
தொண்டன் றுணையா ருரையாய் துரையே.
61குறையாற்றல்✓
விதனத் தையுமா றியுன்மே வடிகண்
டிதமுற் றிடநின் றுமிறைஞ் சிடவே
மதலைக் கொருகா லமும்வந் திடுமோ
சதமெய்ப் பொருளா யிசுதந் தவனே.
62உயிர்த் துணை✓
காவிக் கமலங் களிகட ரவும்நான்
சேவித் திடவஞ் சலிசெய் வதுவும்
பாவிக் கொருநா ளதுவோ பகராய்
ஆவிக் கரசே துணையா னவனே.
63அஞ்சல் செய்தல்✓
சேவற் கொடியோ னடிசார் பதமாய்
ஏவற் கொடியோன் மனமே கருத
ஆவற் கொடியா னமல்சங் கிதமென்
சேவற் கொடியோ னருள்சே வகனே.
64மனக் குறை யாற்றல்✓
என்றுன் றிருவுள் ளமிரங் கிடுமோ
மன்றின் புவிமேல் மகிவாழ் வதுதான்
என்னின் றதறிந் தெளியன் றிணிவேன்
அன்றின் றினியென் றுணையா னவனே.
65மனமிரங்க✓
குன்றுங் கனியுங் கவிகூ றினதால்
ஒன்றுந் தயவில் லையுகந் திடிலா
ரென்றுந் தளர்வெய் தியிருந் திருகால்
என்றுந் துணைசண் முகமே மனமே.
66வாழ்வு பெற✓
நானிப் படிபா டியுநா டியுநீ
ரேனிப் படிமோ டியதே செய்வதுந்
தானிப் படிசெய் வதடா தினியம்
மானிப் படிமேல் மிகுவாழ் வருளே.
67அன்பு பெறல்✓
என்பே ரினிலே யினியா கிலுநல்
லன்பா கியுமா தரியா மல்விடில்
உன்பே ரினிலே பழியும் சுமரும்
நன்பூ தலமே பணிநா யகனே.
68மெய்ந் நிலைமை புகழ்தல்✓
நிலைமைக் கினிதா கியநீ தியுமன்
சலைமைக் கினிகால் வெளிதா னும்வளர்
தலைமைக் கினியான் மதிதா னெனவென்
புலமைக் கினிதா கியபுண் ணியனே.
69மனத்தியல்பு✓
ஆதா ரமகத் துவநீ தரமென்
மீதா னமுடறி பொருள்மெய் உயிரும்
மாதா வுநினைத் ததுவந் துதவும்
தாதா வுமெனக் கினிதா னவனே.
70மனந் தெளிய✓
உலகிற் பலதெய் வமுமுண் டெனினும்
தலமெய்க் குருசண் முகனைப் பணியார்
அலகைக் கிணையா வரதான் முருகன்
வலமைத் துரையென் றறிவாய் மனமே.
71அடிமை யாதல்✓
அமரர்க் குயிர்கா ரணமா னபிரான்
குமரப் பெருமா னியல்கூ றுமவர்
தமதற் புதந்தான் தனிலங் ஙனஞ்சீர்
அமைநற் பதமே பெறுவாய் மனமே.
72வள்ளிநாயகியை மணஞ்செய்த புகழ்ச்சி✓
பொன்னா டுநமா தொடுபொன் னுலகில்
மன்னா ரொடுயான் மருவே னெனதல்
அன்னாள் விபுதா சுதைய ளுலகந்
தன்னால் வரவுஞ் செய்தயா பரனே.
73உண்மை நிலை✓
முன்னோ தியல்கூ றெனமொய் குழலாள்
தன்னோ டுரைசெய் ததுவுஞ் சகலோர்
அன்னா ளிலறிந் தன்றா கையினால்
உன்னா லமர்பொன் நிலையுத் தமனே.
74வாம நிலை✓
மதுகொண் டவர்தங் குலம்வந் தவளென்
றதுகொண் டிகழ்வாள் பெரியா ளெனவும்
எதுகொண் டுரைபொன் புதல்வோ னியல்பு
அதுவிண் டுமைபூ செயறைந் தவனே.
75உயிர் காத்தல்✓
வனமா தொடுகூ டிவரும் பொழுது
புனவே டுவர்வந் தமரும் பொழுது
சினமாய் வதைசெய் துதிரும் பவுயிர்
தனதா கவுகந் ததயா பரனே.
76மனத்தெளிவு✓
முனிவந் திதுசே திமொழிந் திடவென்
றனைவந் துகபா டமடைத் திடவா
தனைசொல் லிவிரிஞ் சனதா யெனதாய்
மனதுந் தெளியச் செய்மனோ கரனே.
77சீர் பெற✓
விண்சீர் பெரியா யவிரும் பிடவும்
மண்சீ ரெனுந்தா யவசம் பெறவும்
அண்சீ ருரைசெய் தவரும் பொருளே
நண்சீ ரதுவென் னநரா திபனே.
78குற்றம் விலக்கல்✓
பானந் தனையுண் குறவோர் மருகன்
றானந் தரநிந் தையெடா மல்வரக்
கானந் தமதந் தனையன் றுதவி
தேனுந் தினைமா விடுதே சிகனே.
79ஞானம் பெறுதல்✓
நீசேர் மருகன் குகனென் றிமையோர்
பேசா மலுஞா னமெனும் பெருமை
ஆது சமிலா மலறைந் தவனே
சேசா சலவா சசிரோ மணியே.
80விரத மகிமை✓
கங்கன் றினமுஞ் செகசோ தியினாள்
தங்குந் திதிசட் டிவிரதந் தனையே
பொங்குங் கனிவோ டுபுரிந் தவர்தம்
பங்கென் றுவிளங் குபரஞ் சுடரே.
81இணையில்லாப் புகழ்✓
மதுகஆ டமுதோ தமிழ்வா ரிதியோ
துதிகொண் டினிதென் சுவையோ கனியோ
எதுவென் றுனைநா விலிறைஞ் சுவனா
வதுவுஞ் சலியா மயில்வா கனனே.
82✓
பணியோ வுயரே மமதோ பகை
மணியோ பொருளோ நிதியோ மணிசேர்
அணியோ தெதுவென் றடியன் புகலத்
துணிவோ வயில்வீ ரதுரந் தரனே.
83✓
உருவோ உடலோ வுயிரோ பொருளோ
அருவோ தமரோ அனையோ சனமோ
குருவோ தெய்வமோ குறியா தெனயான்
தெருள்வே னருளா யரவா சலனே.
84✓
தருவோ வளர்கா வனமோ சயில
மருவோ மலர்வா சனையோ களபப்
பொருவோ வெய்துவென் றுபுகழ்ந் திடநாம்
வருவோ மெனுமந் திரமா தவனே.
85✓
மகவென் றுதயங் கியும்வந் திடினும்
வெகுநிந் தைகள்செய் துகைவிட் டிடினும்
அகரும் பனதா யுனையான் மறவேன்
சுகதுன் பமுமுன் னதுசுந் தரனே.
86குற்றம் பொறுத்தல்✓
இறுசொற் பனமா கையிலும் கொடிய
வறுமைப் பிணியால் மகுசெய் பிழையும்
பொறுமெய்ப் பொருளே பொறுமைத் துரையே
திருநற் பொருளே அருள்செய் திடுமே.
87நீங்கா நிலைமை✓
இரவும் பகலுந் தினமெப் பொழுதென்
அரிசிங் குவைகண் ணிதயங் களிலும்
நெறியின் பமதா கநிறைந் தமையால்
குறைவொன் றிலையன் பர்குணா நிதியே.
88இனிமை கூறல்✓
உள்ளத் தினியே பணியூ ழியனான்
பிள்ளைப் பொருளல் லவோபே தமையேன்
கள்ளத் தனமுங் கபடே தருமே
எள்ளத் தனைதா னில்லையோ குகனே.
89அவமிருத்தியு வாராமல் காக்க✓
ஊனா யுயிராய் வளறாத் தமனே
நீனா மனமீ தருள்வாய் நினைக்கில்
வாணாள் வளரும் பெருமக் களுமே
வீணா மடியார் வெல்வே லவனே.
90✓
இனியா கிலுமெள் ளளவுன் கருணை
கனிவா கவுநின் றருள்கா ணவுமே
அனிரு தம்வரா மலும்அஞ் சலிசெய்
முனிநா தர்புகழ்ந் திடும்முத் தையனே.
91தவம் நிறைவேறல்✓
தவமா யுனைநேர் விரதங் களுமே
அவமா கிவிடா மலனுக் ரகமாய்
பவநா சனமே செய்பலந் தருவாய்
சிவபூ சிதகா ரணதே சிகனே.
92சரணடைதல்✓
தாய்நீ தமர்நீ குருசா மியுநீ
வாய்நீ மனநீ புகழ்மா நிதிநீ
ஆய்மா மறைநீ யதுமாய் கையினால்
நீயே கதிவே றிலைநீள் குகனே.
93பர மாதர் விலக்கல்✓
மானார் தருமாய் கைமயக் கமதால்
நானா வகையாய் மனநைந் திருகால்
தேனா கவுமுன் துதிசெய் திடவே
ஞானா வமுதே யருள்நன் குருவே.
94வணங்குதல்✓
ஏதுந் தெரியே னுனையே புகழ
வேதங் களுகா ரணமே யறியேன்
நீதங் கிடுசீ தனமா நிலைமை
ஓதுந் தமிழ்மா லையுகந் தவனே.
95கவிதை பாராட்டல்✓
முன்னா கவுமும் மணிமா லையதும்
பின்னா முருகன் பிரபந் தமதும்
என்னா ளும்விளங் கவுமே யுரைசெய்
மன்னா தெய்வயா னைமனோ கரனே.
96✓
இப்போ தெனதுள் ளமிருந் துமுரு
கப்பா ரனுபூ தியதா மெனவு
ஒப்பா கவும்ஓ தியுகந் தவனே
நற்பார் குறிநா யகிநா யகனே.
97குற்றம் பொறுத்தல்✓
சுதனிப் பொழுதுன் சொல்வார் கவியில்
எதுகுற் றமிருந் திடினும் பரிவாய்
மதலைச் சொலிதென் றுமகிழ்ந் தெனையாள்
சதலத் தடியார் கள்தயா பரனே.
98இனிமை கூறல்✓
நானோ துவதே தெனில்நா தனும்நீ
தானோ திருசெந் தமிழா கையிலும்
யானோ தியறென் றருள்செய் பவனே
ஞானோ தயனே மறைநா வலனே.
99✓
தோற்றும் பொருள்நீ கவிசொல் பவன்நீ
ஏற்றுந் தமிழ்மா லையதென் றமையே
சாற்றும் படிசெய் தெனையே தயவாய்ப்
போற்றும் பணியே கொள்பரா பரனே.
100அடியார் பிணைப்பு✓
அணையாய் மெலியா மலும்ஆ ளவுமென்
பிணையா னவனீ பிரியா மலுமென்
துணையா னவனீ செகசோ திசர
வணதே சிகனே மயில்வா கனனே.
101✓
செயமே வியநல் சீர்கரு ணேசா
சுயமா முனிநீள் மரபா கியவே
லயநீள் பொன்செல் லபயனும் வரமே
வியமா லைசொல்நூ றும்விளங் கவுமே.
102✓
அளகா கியமே ரரவா சலமும்
பளனா பிரிமே வுபரா பரனார்
உளமே மகிழ்வா கவுமோ தியில்
வளமே வனுபூ தியும்வா ழியரோ.