முருகன் App
செல்வச் சந்நிதி ஒருபா ஒருபஃது
தா பொ கார்த்திகேசு
கட்டளைக் கலித்துறை1 / 2
செல்வச் சந்நிதி ஒருபா ஒருபஃது · தா பொ கார்த்திகேசு

கட்டளைக் கலித்துறை

1✓
சொல்லாருந் தொல்பதி யாகிய தொண்டைமா னாறதனில்
நல்லாரும் நாடிடுங் கற்றாரும் நாடொறும் நானிலத்தில்
எல்லாரு மேத்த வெழில்வே லுடனே யிலங்குமையா
பொல்லாத பாவியென் துன்பங்கள் நீங்கப் புரிந்தருளே
2✓
அருவே வடிவுடை யத்தனே நற்செல்வச் சந்நிதிவாழ்
குருவே குழாத்தொடு முன்னைக் குலாவநான் கூட்டுகண்டாய்
திருவே திகழ்ந்திடுஞ் சைவந் தழைத்திடச் செய்தவனே
மருவே செறிந்த மரகதக் காவுடையச் சிற்பரனே.
3✓
முதலே யெனவும் மொழியுங் குழகனே முன்னிடுநின்
பதமே கொடுத்துப் பரம்பொருள் நீயெனைப் பார்பதமே
சதமே கதியெனச் சொல்லும் முருகநான் சாற்றுவது
இதமே செவிக்கே றலையோ கலோடையா யேதுசொல்லே