முருகன் App
செல்வச் சந்நிதி ஒருபா ஒருபஃது
தா பொ கார்த்திகேசு
வெண்பா2 / 2
செல்வச் சந்நிதி ஒருபா ஒருபஃது · தா பொ கார்த்திகேசு

வெண்பா

4✓
துய்யா முருகா தொண்டைமா னாறதனில்
மெய்யாய பேர்க்கெலா மெய்யவனே — ஐயா
அடியேன் படுந்துயரம் அனமட்டும் சொன்னேன்
வடிவாருங் கந்தாநீ வா.
5✓
தினமுந் தொழுவார் தீவினைகள் தீர்க்கும்
கனவடிவேல் ஏந்தும் கடம்பா — மனமுள்ள
காவடிகள் அன்னதானக் காட்சிநிறை சந்நிதியாய்
சேவடியாய் என்வருத்தம் தீர்.
6✓
தீரா சிவன்மைந்தா செப்புசெல்வச் சந்நிதியாய்
நேராய் உனையே நினைக்கின்றேன் — சீராய்ப்
பதித்தேனே நெஞ்சினில்ல பன்னிருகை வேலா
துதித்தேன்நீ யெற்குத் துணை.