முருகன் App
செல்வச் சந்நிதிக் கந்தர் நாம பஜனை
ந. சுப்பிரமணியம்
கந்தா வா வா வா!1 / 2
செல்வச் சந்நிதிக் கந்தர் நாம பஜனை · ந. சுப்பிரமணியம்

கந்தா வா வா வா!

1✓
சந்நிதிவாழ் கந்தனே வா வா வா
சாந்திநிறை ஆறுமுகா வா வா வா
சிங்காரத் திருமுருகா வா வா வா
சீர்தொண்டை மானாற்றோய் வா வா வா
சுந்தரவேல் பிடித்தவனே வா வா வா
சூரனையும் வென்றவனே வா வா வா
செல்வச்சந் நிதிவேலா வா வா வா
சேவற்கொடி கொண்டவனே வா வா வா
சைவர்களின் தெய்வமேநீ வா வா வா
சொக்கநாதன் திருமகனே வா வா வா
சோதிவடி வானவனே வா வா வா
சௌக்கியவாழ் வளிப்பவனே வா வா வா
சச்சிதானத் தம்மருள்வாய் வா வா வா
வா வா வா கந்தா வா வா வா
நீ வா வா கந்தா வா வா வா
மா லோன் மருகா மயில் வா கனனே
வா வா கந்தா வள் ளி மணாளா
ஓம் ஓம் கந்தா உமை யாள் மகனே
கந் தா கந்தா கதிர் வேற் கந்தா
ஓம் கந்தா ஓம் கந்தா
ஓம் ஓம் கந்தா