முருகன் App
சிங்கை நகர் தண்டபாணி வருகைப் பதிகம்
ரெ. இராமசாமி
பதிகம்2 / 2
சிங்கை நகர் தண்டபாணி வருகைப் பதிகம் · ரெ. இராமசாமி

பதிகம்

1சிங்கை நகர் தண்டபாணி✓
எங்கெங்கும் பைஞ்சோலை எழிலான திருவீதி
அங்கங்கும் சுறுசுறுப்புக் காளான மக்கள்சூழ்
பொங்கிவரும் வளமான பொன்னான சிங்கைநகர்
தங்கியுள்ள தண்டபாணி தலைப்படுத்த வருவாயே.
2இன்துணைத் தண்டபாணி✓
அந்நாளில் நகரத்தார் ஆக்கமதைத் தேடுதற்குத்
தென்னாடு தனிலிருந்து திருநாடாம் சிங்கைக்குப்
பொன்காசு கொண்டுவந்து பொருளீட்டுந் தொழிலுக்கே
எந்நாளும் தண்டபாணி இன்துணையாய் வருவாயே.
தமிழ்தரும் தண்டபாணி✓
அறிவுக்கே அறிகுறியாம் அருள்வேலை அந்நாளில்
பரிவோடு சிங்கையிலே பரவிவந்து, பின்னாளில்
விரிவாக நகரத்தார் விளைவித்த திருக்கோயில்
தரித்திருக்கும் தண்டபாணி தமிழ்தரவே வருவாயே.
4அழகுதிகழ் தண்டபாணி✓
தங்கமணி முடியோடு தகதகக்கும் முத்தாரம்
பொங்குமொளிக் குண்டலமும் பொன்னான கூர்வேலும்
அங்கமதில் பட்டாடை அணிந்துவரும் அழகுதிகழ்
சிங்கைநகர் தண்டபாணி சிந்தைகுகை வருவாயே.
5பண்டாரத் தண்டபாணி✓
கொண்டாடும் நாட்களிலே கொள்ளும்பல் கோலமதில்
வெண்ணீறுக் காப்புடைய வியனான கோவணஞ்சால்
பண்டாரக் கோலத்தில் பாரிக்குஞ் சிங்கைநகர்
தண்டபாணித் தெய்வமே தலையளிக்க வருவாயே.
6சிவனாம் தண்டபாணி✓
மாறாத இளமையொடு மங்காத எழிலோடு
தீராத நறுமணமும் தெவிட்டாத இனிமையுடன்
கூரார்ந்த கடவுளியல் கொண்டருளும் சிங்கைநகர்
சீரார்ந்த தண்டபாணிச் சிவனேநீ வருவாயே.
7கனிவான தண்டபாணி✓
உனக்கென்று வைக்காமல் உன்னடியார்க் கீந்திடவே
உனதுசுக போகமெல்லாம் உகத்துறந்தே ஆண்டியெனும்
இனியவடி வாலெம்மை என்றென்றுஞ் சிங்கைநகர்
கனிவான தண்டபாணி காத்தருள வருவாயே.
8தஞ்சங்கொள் தண்டபாணி✓
நெஞ்சிலுள்ள கவலையெல்லாம் நேர்ந்துள்ள பாவமெல்லாம்
வஞ்சகரின் சூழ்ச்சியெலாம் வாட்டும்நோய்த் துன்பமெலாம்
“அஞ்சாதே” எனஅருளி அகற்றிடவே சிங்கைநகர்
தஞ்சங்கொள் தண்டபாணி சடுதியில்நீ வருவாயே.
9புள்ளிமயில் தண்டபாணி✓
பிள்ளையின்பம் இல்லாமல் பெருங்கவலை கொள்வோர்க்குக்
கொள்ளையின்பம் கூட்டுகின்ற குலம்வாழும் குழவிபெற
வள்ளிதெய்வ யானையுடன் வரமருளச் சிங்கைநகர்
புள்ளிமயில் தண்டபாணி புறப்பட்டு வருவாயே.
10நன்பு நல்கும் தண்டபாணி✓
அன்பறமும் அறிவுயர்வும் ஆக்கநிறை வளமைகளும்
இன்புகளும் பண்புகளும் ஏற்றம்நீள் ஆயுளொடு
நன்புகளும் என்வாழ்வில் நல்கிடவே சிங்கைநகர்
அன்புடனே தண்டபாணி அடிபணிந்தேன் வருவாயே.
✓
தண்டபாணித் தெய்வமே
தண்ணருளைச் செய்வையே
தண்டபாணித் திருவடி வாழ்க.