முருகன் App
திருச்செந்தூர் அகவல்
சிற்றம்பல நாடிகள்
நூற்பயன்2 / 2
திருச்செந்தூர் அகவல் · சிற்றம்பல நாடிகள்

நூற்பயன்

✓
கருத்துற இதனைக் கற்போர் கேட்போர்,
திருத்தகும் அன்பால் தினந்தொறும் துதிப்போர்
பெறும்பலன் இதனைப் பேசுதும் கேண்மின்
உறும்பலன் வேண்டும், உலகத் தோரே!
பாவந் தீரும்; பார்மிகு தருமம்,
மே(வு)இளம் பிறைபோல் மென்மேல் வளரும்
துட்டதே வதைகள் தொட்டதும், வஞ்சர்
இட்ட பில்லி இடர்களும் தீரும்;
வாதம், பித்தம், வலிபடும் காசம்
சீதம் வெதுப்புத் தீரா நோய்கள்,
வேதனை மிகுந்த வியாதிகள் எல்லாம்
ஆதவற் கண்ட பனிபோல் அகலும்
சாகா வரமும் தந்திடும்; உடம்பிற்
போகாப் பீடை போக்கி ரட்சிக்கும்;
வறுமை நீங்கும் வாழ்வுண் டாகும்;
செறிதரும் அட்டமா சித்தியும் கொடுக்கும்
சரியை, கிரியை, சார்ந்திடும் யோகம்,
தெரிதரு ஞானமும் செறிந்து வாழ்குவரே.