அருணை ஆற்றுப்படை
சி. அருணைவடிவேலு முதலியார்
அருணை ஆற்றுப்படை · சி. அருணைவடிவேலு முதலியார்
நூல்
✓
கார்வரு வான மேர்பெறப் புனைந்த
சீர்தரு முத்திற் றிகழ்மீ னடுவட்
பான்மதி கிடந்த பான்மைத் தாகி
நிலவரை மருங்கிற் குலவரை நாப்பண்
வாலொளி யானாது வயக்க மாண்ட
✓
கயிலை மால்வரைக் கடவுட் கண்டாங்
கியல்வர வணிந்த வெழில்வெண் ணீற்றொடு
துயல்வர விட்ட கண்டித் தொங்கலன்
வெஞ்சுட ராழி பிறவயிற் றோன்றினுந்
தண்சுடர் மண்டிலம் வெய்துபட் டெறிப்பினு
✓
மாரி மறுப்பினும் வாரிவறங் கூரினு
மசைவின் றமர்ந்த வுள்ளத் தாங்க
ணசைவர மலர்ந்த நகைவாண் முகத்தன்
பெருநீர் ஞாலம் பிறிதுகுடை செல்லா
தொருகுடை வைத்த வுரவோ ராயினும்
✓
வழிமொழி யறியா வாயின னீங்கிவன்
றுறவோன் போலும் மென்னிற் சூழ்ந்த
வுறவோர்க் காகிய வொக்கல் வாழ்க்கையை னதா அன்று
வேறுபடு பன்மலர் மலர்ந்த வல்லியிற்
✓
பொன்னு மணியு முத்துந் துகிரு
மின்னுபு கிடந்த விளங்கிழை மடந்தைதன்
மென்றோள் பிரியாது மேவலு முடையன்
குதலைத் தீஞ்சொற் புதல்வர் தந்தை
தேம்பாது பெற்ற செல்வந் தேம்புநர்க்
✓
கோம்பாது வீசி யுவந்த கொள்கையன்
யாரிவ னென்னத் தேரிய செல்லாய்
பன்மாண் மருண்டு நோக்கி வினவு
நுண்மாண் கேள்வி நுழைபுலத் தொருவ
நின்னோ ரனையனே யானு முன்ன
✓
ரும்மைத் தொடர்ந்த வுழுவ லன்பி
னிம்மை யொன்றிய வுளத்தி ராதலிற்
புணர்த்த பால்வழிப் புணர்ந்த கற்பி
னெணத்தகு மரபி னெண்ணருங் குணத்தி
னின்னுயி ரல்லது தன்னுயி ரறியா
✓
வின்னுயி ராகிய விசையில் லாட்டியொ
டொருமைச் செய்த வெழுமைப் பேற்றின்
விழுநற் பண்பின் விளங்கிளஞ் சிறாஅரும்
பழுத்த காலைப் பழுமரந் துவன்றி
விழுத்த காலை வேறுபடு புள்ளிற்
✓
செல்வக் காலத்துச் செறிதரச் சேளர்ந்
தல்லற் காலத் தறுந ராகாது
வாழ்வின் வாழ்ந்து தாழ்விற் றாழ்ந்து
சூழ்விற் றீராச் சுற்றமு மென்றிவர்க்
கைவீ டெண்ணல் கடவ தென்னாய்
✓
மெய்வீ டெண்ணும் வேட்கையுந் தவிராய்
பொய்வீடு நன்னூற் புலத்தை யாதலி னதனா
னாறா வாழ்க்கை யசைவறச் செலீஇப்
பேரா வாழ்க்கையும் பிழையா தெய்திய
✓
நல்குநர்ப் படர்ந்து பல்வயிற் பெயர்ந்து
தல்கலு மல்கி யொல்குங் காலை
மறுபொழு தில்லென வொருபொழு துண்ணா
னிருபொழு திழந்த வேழை யாளனுஞ்
செறியிதழ்ப் பொலிந்த செவ்வி நோக்கான்
✓
மறைநிலங் கிடந்த வான்சே றுன்னி
நறுமலர் கடியு நயனி லாளனு
மான்றிடை நாறிய வருமை பேணா
னூன்பொதி வுற்ற வொன்றஃ துன்னி
மான்மதம் வெறுக்கு மாண்பி லாளனு
✓
மெழிலுற விளங்கு மியல்பு காணா
னிழிவுறு மண்ணென் றினிய பாவையைப்
பழிபல மொழியும் பண்பிலா ளனுமென்
றினையோர் போலு நினைவின் மாக்கண்
மயிலேர் சாயன் மதைஇய நோக்கத்
✓
தயிலே ருண்க ணரிவையர்ச் சேர்ந்தவர்
காண்டகு நல்லெழில் வேண்டறக் கண்டு
மந்தீங் கிளவி முந்துறக் கேட்டுங்
கனியித ழமுத நனியநந் துண்டுங்
குழன்முத னாற்றம் விழைவின் மோந்து
✓
மெல்லிய லாகம் புல்லத் தீண்டியும்
பஞ்சிற் றூவியிற் பண்ணிப் பன்மலர்
விஞ்சுபு கிடந்த விரிமெல் லணைமே
லோத லொல்லா வூடலி னாங்கவர்
கோதை கோலாக் கோளலைப் புண்டுபிற்
✓
சீரடி பன்மாண் செவ்விதிற் பணிந்து
கூறுபன் மாயக் கூற்றினி னுணர்த்திப்
பணைத்தோண் முயங்கிப் படியுமின் பக்கட
லெனைத்தோர் பொழுது மெய்தா ரவரைப்
புழுப்பொதி மூடை வழுப்புடு நிணக்குழி
✓
நெய்த்தோ ரூற்று நிறைமலக் குரம்பை
நொயின் வாயி லேளா னவிகழ்ந்துந்
துப்புர வெவையு மெய்ப்பட நல்கும்
பொற்புறு விக்குஞ் சொற்செல விடுக்குங்
குலநல முதலாப் பலநல மளிக்கு
✓
நிலம்புர வலரொடு கலந்துற வாக்கு
மன்புகழ் நிறுக்கும் வன்பகை தெறுக்கு
மின்பொருட் பெருமை யிறையு மெண்ணார்
நில்லா தகல்வது புல்லோர் மகிழ்வது
வன்புற் றெழுதருந் துன்பப் பிறவி
✓
யச்சத் துறவு துச்சமென் றிகழ்ந்து
மூட்டிப் புரக்குநர்க் குறுதி யாகி
வேட்டன துய்ப்ப மிகுதுணை யாயுறு
மரும்பெறல் யாக்கைய தருமை யுன்னா
ரிரும்பொறை யுன்பொதி யிழுக்குடைப் புழுக்கூ
✓
டெள்ளற் பிணிச்செறு பொள்ளற் சிறுகுல
நீரிடை மொக்கு ணிகழ்மின் னுருவம்
யாரிது வேண்டுவ ரென்றரு வருத்தும்
பெற்ற வின்பம் பேணாது விடுத்து
மற்றை யின்ப மாண்பெனக் கொளாஅக்
✓
கற்ற கல்வியிற் கனவிய வீடு
மாள்வினை யதுவே யருநிதி யென்னார்
தாள்வினை மறந்து கோள்வினை குறித்து
முயலா மாந்தர் முயலுநர் நெஞ்ச
மயலா கென்ன வகுத்தபல் கொடையும்
✓
வலியின் மாக்க ணலிவுபிற ரஞ்சி
மெலிவின் வகுத்த வேறுபன் னிரையமு
நிலமிசை யின்ப நிரம்பத் துவ்வா
தலம்வரு மிடியரு மருநோ யாளரும்
விரைவன ரெய்திய நரைமூ தாளரு
✓
மனக்கோள் சென்ற வழியெலாம் வழியாக்
கனக்கோள் கொண்டு கட்டிய துறக்கமு
மாயந் தாமென மதியாய் வாயென
நீயுந் தெளிதி போலா நீயினி
மறுமை நோக்கி மனங்கவ லாதிவ
✓
ணுறுநல மெய்து மொன்றுபுரி யுள்ளத்துக்
கலைபல வல்லா யாயின் விலைபெறச்
சிலபல வின்பச் செய்யுள் யாத்தும்
வழக்குரை வல்லா யாயின் முழக்குற
விழுப்பில் பொருணெறிக் கெய்துவ பகர்ந்து
✓
மந்திரம் வல்லா யாயி னந்திற்
செந்திரு மன்னர்க்குச் செறிதுணை யாகியும்
வாள்வினை வல்லா யாயி னவர்க்குத்
தாள்வினை நின்று தருவலந் தந்துமற்
றெவ்வினை யெவ்வினை வல்லா யீங்கிவ
✓
ணவ்வினை யவ்வினை யரும்பயன் கொண்டு
மரும்பொரு ளென்ப பெரும்பொரி தீட்டி
யிரும்பே ரொக்கலொ டினிதுறை மதியென
மெல்லியர் சொல்ல நல்ல வென்னா
யில்லிடை மகாஅ ரிருமுது குரவரை
✓
யட்டன வுண்டாங் கமர்ந்துவிளை யாடல்
பெட்டனி ரிராது பெயர்ந்துபன் முயல்விற்
சென்றுநனி யுழந்து துன்றிய விடும்பை
யொன்றுத லெவனோ வுரைமி னென்னு
நிரம்பா மென்சொலொ டொக்கு மீங்கிவ
✓
ருரஞ்சால் பில்லா வுரையென வுண்ணகு
பாக வாக வாங்கென வவர்க்குப்
போக மொழிந்து புரைகிளைத் தியங்குழி
யிவறலும் புகழு மிரண்டுடன் கொளீஇயர்
கவலுறு மவரிற் கவர்த்தோய் கேளிவண்
✓
வெயிலென மடியாது பனியென முனியாது
துயிலென நினையாது துன்பநனி யுழந்து
மெய்க்குறு மின்பம் வெறுத்தோர்க் கல்லது
கைப்பொரு ளெய்துங் காட்சியோ வின்று
செருக்கு மாணமுஞ் சேட்செல விடுத்துப்
✓
பொருட்குறு மருமை போற்றாது சென்று
பிற்றைநிலை முனியாது பெற்றன கொடுத்துக்
கற்றோர்க் கல்லது கல்வியு மின்றே ஆங்க
வில்லிடை யுறையார் நல்லுடை யுடாஅர்
✓
பல்லவை நுகரார் மெல்லணை கிடவார்
காமந் துவ்வா ரேமங் கொளாஅர்
காடு மலையும் பீடென வடைந்தாங்
கடகு நீரும் வளியு மயின்றும்
படுபவு முண்ணார் பட்டினி யாகியும்
✓
வேனிற் காலத்து வெயிலினும் வீழ்பனி
மாரிக் காலத்து நீரினு நின்று
நோற்றோர்க் கல்லது மேற்செல வின்றே யதனா
னிம்மை யின்ப மெனைத்து நோக்கா
✓
யம்மை யொன்றே யகத்துற வலியா
மக்கண் மனையோ டொக்கல் வாழ்க்கை
சிக்கென விடுத்துச் சேணிடை யகன்றீண்
டுடம்படுஞ் செய்திக் கொருசிறி துன்னாது
கடம்படுஞ் செய்தி காத்தனை யிருந்து
✓
வினைகெட வெழுபு மேன்மே லுயர்ந்து
நினைவரு முலகத்து நீடுவாழ் மதியென
வுலகொடு முடலொடு முடலுஞ் செய்திச்
சிலதெரி நுந்தெரி செப்புங் கேளாய்
நல்லோர் தமக்கு நல்ல வாகிமற்
✓
றல்லோர் தமக்கிங் கல்ல வாகு
முடம்பியல் பிற்கவ ருணர்வுசரி யாகவு
முடம்பினை யொறுக்கு மொன்றுமுன் றுணித
னல்கூர் மாக்க ளொல்கும் பசிக்கிங்
குப்பில் புற்கை யுண்ணா துகுப்பி
✓
னொப்பி லறுசுவை யுண்டியுண் டாகலு
முவலைக் கூரை யொள்ளெரி யூட்டிற்
றவலரு மாடந் தகவிற் பெறுதலு
மேணியை யிறுப்பி னேறச் சேறலுந்
தோணியைச் சிதைப்பிற் சுழிநீர் கடத்தலு
✓
முளவா மென்னு மளவைய தாகலின்
வளனோ வின்றிவர் மாற்றமென் றுன்னா
வுணர்வ லுணர்வனும் முரையென வவர்க்கும்
புணர மொழிந்து போயினை யாதலிற்
கேளினி வாழியோ கேண்மைகொ ணெஞ்சினின்
✓
கோளினி தெய்தல் கொண்டுமுன் னறிதி
பொழுது நாளும் புலப்பொடு கழியப்
பழுதொடு கிடந்து பரிந்துகை வருத்து
நிமிரா மண்டை நிமிர்க்குநர் யாரென
வமரா மென்முகத் தசைஇய நடையின்
✓
மருங்கிடைப் பற்றி வாங்க வாராக்
கருஞ்சிதா ருடுக்கைக் கவலைச் சுற்றம்
பூந்துகி லுடுத்துப் புனையிழைப் பொலிந்தாங்
கேந்திய பொலங்கலத் தின்பா லடிசி
னெய்யிடை யிட்ட குய்யுடைக் கருணையொடு
✓
வெய்ய வாக மேலவர்க் கருத்தி
யில்லே மென்னா விரந்துகடை நின்றோர்க்கு
வல்லே மென்னா வரையாது வீசி
யீண்டிய பலரொடு மினிதிருந்த் துண்ணு
மாண்டகு துழனியின் மகிழ்வின வாதலுந்
✓
தேரு மாவுந் திகழ்தரு களிறு
மூருஞ் செய்தி யுவப்பின வாதலும்
வானிலத் தன்ன மேனிலை மாடத்
தானிலை யின்பின வாதலுங் காண்டி யதான்று
✓
பண்டும் பண்டும் பயின்றறி குநர்தா
முண்டென வுரைக்கு மொருபெரும் பொருளைஃ
துண்டுகொ லின்றுகொ லென்றுள மலமரல்
விண்டினி தொளிர்தல் விழியிற் கண்டு
வெண்ணெய்ப் பாவை வெயிலிடைப் பட்டென
✓
வுண்ணெக் கெங்கு முருகலி னூன்பொதி
யென்புரு வாகி யியங்கும் யாக்கை
யன்புரு வாக வாங்குறு மளவி
லின்ப வெள்ள மிகவாது படிந்தீண்
டெடுத்த பிறப்பி னின்பமு மிழவாது
✓
விடுத்த பிறப்பின் வீடுநன் கெய்தி
நிலம்புடை பெயர்வ தாயினு நிலையிற்
கலங்குத லில்லாக் காட்சியும் பெறுதி
பிறப்பிற் றீராது பெயர்வண் ணவர்நிலை
சிறப்பென மருளுஞ் செய்கையுந் தவிர்ந்தி
✓
யுதுக்காண் டோன்று மொருமலை யெங்கும்
பொதுக்காண் பில்லாப் பொலிவுடைத் ததுவே
யதர்பல கடப்ப வருஞ்சேய்த் தென்னா
தெதிர்பணிந் தியறி யியன்றனி ராயி
னேனலு மிறுங்கு மெழில்செய் சீறூர்க்
✓
கானவர் விருந்தினி ராகித் தேனொடு
செந்தினை யிடிமகிழ் சிறந்தொரு பாங்கினு
முந்துறு வள்ளி முதலொரு பாங்கினுந்
துவரை யுழுந்தே துறுபனிப் பயறே
யவரை முதலவற் றவியலோர் பாங்கினு
✓
மைவனத் தரிசியி னாக்கிய வருஞ்சோ
றுய்வினத் தமுதி னூங்கொரு பாங்கினு
மின்சொலொ டளிப்ப வினிதுடன் பெறுதிர்
மென்சொலொ டாங்கண் வேண்டுபுலத் திறுத்து
நடைப்பெரு வருத்த நண்ணா தொழிய
✓
வுடைப்பெருஞ் செல்வ ருவப்பொடு போகி
யெண்ணில் குன்ற மிருந்துசூழ் போற்ற
விண்ணின் விளங்கு வியன்றிரு முடியி
னண்ணா மலையா மப்பெரு மலையின்
கண்ணார் சாரல் கனிவொடுங் குறுகின்
✓
மண்ணார் முழவின் மஞ்சுபடு முழக்கு
மெண்ணா ரருவி யிழுமெனு மிசையும்
வெஞ்சொற் பேசும் வேட்டுவ மகளி
ரஞ்சொற் கிளிக ளவைகடி குரலுந்
தண்டமிழ்க் குயிராந் தனித் திருமுறையின்
✓
வண்டமிழ்ப் பாடல் வகைபெறு பண்ணிற்
புரகர னாகிய புண்ணியற் பரவி
யரகர வென்னு மன்பின ரொலியுஞ்
செவிக்கினி தாகச் செவ்விதிற் கேட்டுப்
புவிக்கினி தாகிய புலனுஞ் சேர்திர்
✓
மாடமலி மறுகின் வளமனை யெங்கணும்
வேடமு நீறும் விளங்குமெய் யவரைச்
சென்றெதி ரேற்றுத் திருக்குழாத் திருத்தி
நன்றடி மண்ணுபு நன்மொழி நவிற்று
யீண்டிய வறுசுவை யினிதுறு மடிசில்
✓
வேண்டுவ வளிக்கும் விருப்புங் காண்குதிர்
குடையுங் கொடியுங் கூறுபல் சிறப்பு
மிடையும் வீதி விண்ணவர் செறியப்
பல்லிய மியம்பப் பாடலு மாடலும்
வல்லவ ரியற்ற வகைவகை யூர்தியி
✓
னாளு நாயக னணியொடும் போந்து
மீளுங் காட்சி விழாப்பல பணிதி ரவ்வழிச்
செங்கதிர்ச் செல்வன் றேண்மிசை யிவர
வெண்கதி ராரன் மீனல நுகர்நாட்
✓
புலரி யெழுந்து புனல்படிந் தருளின்
செலவுடன் படுமச் செய்கடன் முற்றிக்
கூதிர் நுண்டுளி கொண்டுட னலியினு
நோத லில்லா நோன்புடை யுளத்துப்
பெண்டிரு மகாரும் பிறங்கெழின் மைந்தரொடு
✓
வெண்டிரு நீற்று விளங்கொளிக் கீழாற்
றிலகந் தையிய திருநுதல் பொலிய
நிலவுந் துகிலி னிழன்மணி யணியி
னெல்வே றாகி யியன்மணிக் கோவையிற்
செல்வோ ராகித் திரைகடல் வளைந்தென
✓
விடையற வில்லா தியம்பிய வொலியிற்
புடையறச் சூழ்ந்து போகுநர் தம்மொடு
வெய்யோன் றிசைபெற விளங்கிய வாயிற்
கையோங் கெடுத்துக் கடிது விழுந்தெழுந்
தச்சமு மன்பு மகத்தொருங் கெய்த
✓
நச்சிய கிளையொடு நயந்துமென் னடையி
னருந்தவ ரிருக்கையு மளப்பிலர் செய்த
திருந்துபூந் தடமுந் தெய்வக் கோயிலும்
வயின்வயின் வயங்குவ வழிபடுந் திறத்தி
னியன்ற வியன்ற வினிதுட னிரப்பி
✓
மரபுளி வழாது மலைவலஞ் சென் றுமுன்
னுரைபெறு வாயி லூங்கினி தடைந்து
மேக்குற நிவந்த வியனெடும் புரிசை
நோக்கரும் பன்னிலை நுண்டொழிற் சிகரி
தொழுது நுழைந்து தூமணி நிரையி
✓
னெழுதுத லரிதா வெழில்பெற வியற்றி
ஐங்கை யண்ணலொ டறுமுகத் திளவ
றங்கு மிடங்க டகப்பணிந் ததற்பின்
விடைமுகத் தேவின் விடைகொ ளுள்புக்
கடைமுதற் கோயி லதனு ளென்று
✓
முருவுரு வாகிய வுமையொ டண்ண
லருவுரு வாயுறு மந்நிலை எய்தி
வலங்கொள வந்துடல் மலிபய னென்ன
நிலங்கொள விழுந்துணர்ந் தெழுந்து நேர்பெறக்
கண்ணீ ரரும்பக் களித்துள மலர
✓
வெண்ணீர் மையினா னிருகையுங் கூம்ப
மெய்ம்மயிர் பொடித்து விதிர்விதிர்ப் பெய்தச்
செம்மைநொ ளுரையுஞ் சிதறுபு குழற
வுருவுபிற வாகி யிருவரறி யாமை
யெரியி னிமிர்ந்த விறையோ யிமையோர்
✓
பகைவர் மூவெயில் படைமிகை யாக
நகையி னட்ட நற்பெரு விறலோய்
நின்னுறு மாணிக்கு நீணா ளருள்வான்
கொன்னுறு கூற்றைக் குமைத்த கழலோய்
பாம்பு மதியும் பகைதவிர்த் துடனணிந்
✓
தோம்ப நின்ற வொண்செஞ் சடையோய்
அழிவின் றமர ராரமு துண்ணத்
தழல்விடம் பருகிய தனிப்பெருங் கடவுள்
காமற் காய்ந்த கண்ணுதல் வாமத்து
நேரிழை பிரியா வோரிய லான
✓
வுலகுக் கொருவ வுணர்வுக் குணர்வ
பலகற் றவருளம் பயின்ற மெய்ப்பயன்
அளந்தோர்க் கரிய வலந்தோர் புகலென
வுளந்தெற் றளவையி னுவந்தபல வேத்திச்
செல்சுட ரமையத்துச் செறிவிசும் பிடையோர்
✓
வெல்சுடர்ப் பருமணி மிளிர்ந்த வியப்பி
னகத்திரு ளிரிக்கு மஞ்செஞ் சுடராத்
தகத்திரு மலைமிசைத் தான்முன் காட்டுங்
கார்த்திகை விளக்குக் கண்டுகை தொழுது
சீர்த்தீநனி பரவிச் சேர்ந்தனை நிற்பின்
✓
வெள்ளி மால்வரை வியனுருத் திரிந்தென
வுள்ளு மால்விடை வுமையொடு மிவரா
மைந்த ரிருவர் மகிழ்ந்துபுடை போதத்
தந்தைதா டடிந்த சண்டி பின்வரப்
பாரிட மெங்கணும் பரந்துபுடை சூழ
✓
வோரிட மில்லா துவட்டுவை பறையொ
டண்டர் வாழ்த்தி யணுகுதல் புரியத்
தொண்டர் மலர்தூய்த் தொழுதனர் பணியக்
கண்ணரு ளெங்குங் கரவாது பொழிய
வெண்ணில வெழிலின் மென்னகை யரும்ப
✓
விளம்பிறை துளங்க வெதிரெழுந் தருளிநின்
னுளங்கொளுங் கொள்கை யூங்கினி தறிகுவல்
கொம்ப ரில்லாக் கொடியென நீயினி
யிம்பர் ஞாலத் தலமர லோம்பென
வினிதுடன் மொழிந்துநீ யெண்ணிய பரிசே
✓
தனிநயந் தருளி நல்குவ னாண்மதி
யகலா மீனா டருவரை மீமிசை
யிகலார் மஞ்சி னிடையெழுந் தென்னத்
திண்கா ழிற்புகை செறிகருங் குழலி
னொண்காழ் மணிக்குழை யொருங்குட னிமைப்ப
✓
வெழுநிலை மாடத் தேந்திழை யவர்த
முழுதுற விளங்கு முகமு முனாஅ
தணிநிரை வீதியி னடிவடுப் படுக்கு
மணிநிரை யவையும் வருநர் தம்மி
னெல்லியும் பகலு மிடையறிந் தொழுக
✓
வல்லுந ரில்லா வகையி னெங்கு
மிருளற விளங்கு மிறும்பூ
தருணை மாநக ரமர்ந்துறை வோனே.