முருகன் App
கைலாச வாகனத்தில் கந்தா வா வா
ந. சுப்பிரமணியம்
வருகிறான் தேரில் கந்தன்3 / 3
கைலாச வாகனத்தில் கந்தா வா வா · ந. சுப்பிரமணியம்

வருகிறான் தேரில் கந்தன்

1விருத்தம்✓
ஆசிலாப் பதியாம் நல்லூர் அமைந்திடும் கோயில் முன்னால்
பாசமாய்த் தொழுது பண்ணாய்ப் பாடிடும் அன்பர்க் காக;
மாசறு மணிகள், தங்கம், மாணிக்கம் கோத்த மாலை
வாசனை மலர்கள் சூடி வருகிறான் தேரில் கந்தன்!
2✓
தாரணி துதிக்குந் தேரைச் சைக்கினிற் பார்க்க வந்தார்,
காரினில் வந்தார், மாட்டுக் கரத்தையில் வந்தார், மற்றும்
வீரர்போல் லொறியில், பஸ்ஸில், விமானத்தில் வந்தார், மற்றும்
சூரிய வெப்பந் தாங்கித் துள்ளியும் நடந்தும் வந்தார்.
3✓
கண்களிற் சுரக்கக் கண்ணீர், காதினில் வேதம் கேட்கப்
பண்ணுடன் வாய்கள் பாடப் பலமலர் மூக்கில் நாற,
விண்ணுறை முருகன் வள்ளி மெல்லிடை தெய்வ யானை
வண்ணமாய்த் தேரில் வந்தார் மண்ணினோர் மகிழ்ச்சி யெய்த!
4✓
வாரிதி நிகர்த்த கூட்டம், வானொலிச் சேவை யாளர்,
கூரிய வேலை நோக்கிக் கும்பிடு போடும் பெண்கள்,
பேரிசை மேள தாளம் பிரதிட்டை செய்வோர் சூழத்
தேரினில் முருகன் வந்தான் தெய்வானை வள்ளி யோடே!
5✓
நாவலர் வதிந்த நல்லூர் நற்பதி முருகா வா!வா!
காவலர் இருந்த நல்லூர்க் கார்த்திகைக் குமாரா வா!வா!
சேவலின் கொடியாய் வா!வா! செந்தில்வேற் கந்தா வா!வா
தேவனே மயிலில் வா!வா! தேரிலே பவனி வா!வா!