முருகன் App
கைலாச வாகனத்தில் கந்தா வா வா
ந. சுப்பிரமணியம்
விருத்தம்2 / 3
கைலாச வாகனத்தில் கந்தா வா வா · ந. சுப்பிரமணியம்

விருத்தம்

9✓
நல்லைநகர் முருகையா நாதா வா!வா!
ஞானவேல் ஏந்திவரும் நண்பா வா!வா!
தொல்லைகள் துயரனைத்தும் துடைப்பாய் வா!வா!
சோதியே அறிவொளியின் சுடரே வா!வா!
மெல்லிடையார் இருவருடன் மேள தாளம்
மிருதங்கம் இன்னிசைகள் மிளிர வா!வா!
கல்லினையும் உருக்கிவிடும் காட்சி நல்கும்
கைலாச வாகனத்திற் கந்தா வா!வா!