கலவிமகிழ்தல்(இன்பத்துறை) வண்ணம்
தண்டபாணி சுவாமிகள்
ஆண்கலை-முற்பகுதி2 / 4
கலவிமகிழ்தல்(இன்பத்துறை) வண்ணம் · தண்டபாணி சுவாமிகள்
ஆண்கலை-முற்பகுதி
தலைவன் புகழ் மூன்று கலைகளில்✓
ஆரணமெச்சும் பரன்; கோதறும் ஆகமமுற்றும் பகர்ந்தோன், அலர்
பூவிலிருக்கின் றவன்கோஎன ஓர்தலையைக்கொண்டிரந்தோன், அலை
கடல்நடு வேவிரித்த பணியணை மீதுறக்கம்
உறும்நெடு மால்வழுத்தும் இருகழ லாளன் நித்தன்
ஆதியந்தத் தடக்கமிலாதவன்
மாமணிந்திட் டகைக்கருணாகரன்
ஈடில்எழுத்தைத் தையுங்கற்றிடும் நேயர்களுக்கன் பன்னண்டோளியொடு
ஈமமதிற்சென் றுநின்றாடிய பூரணன் இக்கொன் றுடன் போர்பொர
மருமதன் ஆகமுற்றும் நொடியினில் நீறுபட்டு
விழவிழி யாலெரித்து மகிழ்சிவ யோகிஅத்தன்
ஆனைஒன்றைச் செகுத்ததளாகிய
போர்வைகொண்டுட் களித்தமனோகரன்
✓
ஆலநிழற்கண் புகுந்தேஒரு நால்வர்களுக்குஞ் சுகஞ்சேர்அநு
பூதியளிக்கும் பெருந்தேசிகன் ஆலமிடற்றந் தணன்கூர்விழி
உமைமண வாளன்எட்டு வகையுறு வாகிநிற்கும்
ஒருபொரு ளானகத்தன் மதியணி கோடிரத்தன்
நீடுகொன்றைத் தொடைத்திருமார்பினன்
வீறுசங்கக் குழைச்செவிவானவன்
அமலனது தவமீற வந்தசேய். ⅛
✓
ஆறுமுகப்புங் கவன்தோகையில் ஏறிநடத்துங் குகன்காசறும்
நாரதனச்சங் கொளுஞ்சீரோடு தீயிலுதித்தண் டரங்கோலிட
வருதகர் வாகனத்து முருகன்வி ணோர்துதிக்கும்
அரசிவர் ஆணையிற்செய் பவனிவி னோதன்வெற்றி
வேலுறுங்கைச் சமர்த்தன்மகாரதன்
வீரர்கெஞ்சித் தொழத்தகும்நாயகன்
✓
மாயையினைக்கண் டுமுன்காசிப மாமுனிசித்தந் தளர்ந்தேபதி
னாயிரலட்சந் தரந்தாள்தொழும் மோகமிகுத்தன் புடன்சேரலின்
விதிவலி யோடுதித்த அவுணர்கள் மூவருக்கும்
ஒருநம னாமெனச்சொல் பெருமைகு லாவுசித்தன்
வானமங்கைக் குரித்தறுகாவலன்
ஏனலின்கட் குறக்கொடிமோகனன்
✓
ஆகுலமுற்றுந் தவிர்ந்தேபர ஞானவிருப்பங் கொளுஞ்சீரியர்
யாவர்களுக்கும் துணிந்தேஉயர் தாரகநுட்பம் பகர்ந்தாள்பவன்
அதிகவி லாசமுற்ற கடல்களை யேநிகர்த்த
தமிழெழு னாள்அளித்த குறுமுனி நாதன்மெச்சு
சீல விந்தைக் குணத்துவிசாகன்அ
கோரவிஞ்சைச் செபத்தர்முனேர்பவன்
அறிவரிய விளையாடல் கொண்டவேள். ¼
✓
வாரணமுற்றிந் திரன்சேனையுள் ஆர்வமிகத்திண் பெறுந்தானவர்
தானைநடுக்கஞ் சுமந்தோடிட ஓரிருபக்கங் களின்பேரொலி
யொடுகுகு கூவெனச்செய் தொனிமலி கேதனத்தன்
அருணையி னூடுதித்த துணையுட லான்ஒருத்தன்
ஓதுசந்தத் திருப்புகழானம
தாணிதுன்றிச் சிறப்புறுமார்பினன்
✓
வீரமிக்குக்குங் கொடும்பேய்கைக ளால்மிகும்அச்சங் கொளும்பாவலன்
ஆண்மையொழித்தங் கவன்பாடிய பாடலினைப்பைங் கடம்போடணி
தருகும ரேசன்,இச்சை வழிதிகழ் ஆடலிட்டு
மலைதொறும் வாழுமுத்தன் ஒருபதி னாறுருக்கொள்
ஏகன்,இன்சொற் றமிழ்க்கிழவோதிடும்
மூடநெஞ்சத் தரைக்கடிவார்துணை
மாழைவரைக்கன் றகம்போய்அடி தாழஅடிக்கின் றசெண்டாயுதன்
✓
ஏழுபொருப்பும் பிளந்தேஒரு மாநதியைத்தந் திடுஞ்சேவகன்
எனதுக னாவிடத்தில் ஒருமொழி யானதைப்பல்
வதளிவி டாதுசெப்பி யருளிய தேவன்,அக்கும்
நீறுமிஞ்சத் தொடுத்தணிவார்எம
வாதையின்றிப் பெறக்கதியீவன் விமலமன தினர்தேட நின்றகோ. ⅜