முருகன் App
கலவிமகிழ்தல்(இன்பத்துறை) வண்ணம்
தண்டபாணி சுவாமிகள்
சோலை, கோவில், மலை இவற்றின் சிறப்பு3 / 4
கலவிமகிழ்தல்(இன்பத்துறை) வண்ணம் · தண்டபாணி சுவாமிகள்

சோலை, கோவில், மலை இவற்றின் சிறப்பு

✓
வானைஅளக்கும் பசுஞ்சோலையி னூடுகுதிக்குங் குரங்காயிரம்
மாரன்மிகச்சிந் திடுந்தேமலர் வாளியினிற்றிந் தைநொந்தேவரும்
மயல்வெறி யாடல்முற்றி உவகையொ(டு) ஊடலிட்டு
மதுநிறை வானபுட்ப வகைமுத லானவற்றை
வீசிஅம்பொற் பதித்தருமீதினும்
ஏறிஉம்பர்க்(கு) உவப்புறஆடிடும்
ஆணவமுற்றுந் தவிர்ந்தேதிண்ண மூவகையிற்றொந் தழும்பாய்அபி
மானமுதற்சங் கடங்கோடியும் நீறுபடக்கண்டு,பொன்போல்மனம்
ஒளிர்பெரு வாழ்வுபெற்ற முனிவரும் ஓகைமிக்க
கவிபகர் சீர்படைத்த புலவரும் மாநிலத்தை
ஆளும்வென்றித் தனிக்குடைவீரரும்
நாளும்வந்துட் களிப்புறநீடும்
✓
மாசறுபொற்குன் றமுன்பாம்மலை யாவினுமிச்சம் படுஞ்சீர்கொளும்
யாவர்விருப்பம் பெறும்போகமும் ஈயும்வனப்பொன் றிடுந்தேவையில்
வணிகர்மு னாவுரைக்கும் அளவுறு கோடிபத்தர்
வழிபட லால்வளப்ப மிகுமொரு கோயிலுற்ற(து)
ஆகும்என்சொற் கவித்தொடையாதிய
சூடுகின்றக் குடிக்கிரிமேல்வளர்
விடலைதிரு வருள்போலும் மங்கையாள். ½