கலவிமகிழ்தல்(இன்பத்துறை) வண்ணம்
தண்டபாணி சுவாமிகள்
பெண்கலை-பிற்பகு4 / 4
கலவிமகிழ்தல்(இன்பத்துறை) வண்ணம் · தண்டபாணி சுவாமிகள்
பெண்கலை-பிற்பகு
திமுருகனையே தலைவியாக்கொண்ட அடிமை,இங்குத் தலைவனாம்
1✓
நாரணனுக்கின் பழுந்தோள்வலி ஆதியபெட்புந் தருஞ்சீரோடு
மார்பிலிருக்கின் றபெண்பாவையும் நாவினிடத்(து)அம் புயன்தோய்தரும்
வனிதையும் வானகத்து மகபதி நேயமிக்க
சசிமுத லாயுரைக்கும் விழியிமை யாதுபற்பல்
கோடியின்பப் பெறுகுறுமாதரும்
நாணுறும்பொற் புடைக்கிளி போல்பவள்
கார்முகில்வெட்குங் கவின்றோய்குழல், மாமலரொக்கும் பொலன்கூர்முகம்
✓
வாளெனவெட்டுந் திறஞ்சேர்விழி, வீழியுகுக்கும் பழம்போலிதழ்
கமுகது போலவிர்ச்சி தருகளம், மாரனுக்கும்
அவள்மனை யாளினுக்கும் அணிமுடி நேர்வனப்பு
மீறுகொங்கைத் துணைப்பொலிவாதிய
கோலமிஞ்சப் பொறுத்துளகோமளம்
✓
நாகரிகத்தந் திரந்தேர்பவள் பாலொடுகற்கண் டினுஞ்சீரிய
தாமொழிசற்றன் பொடும்பேசியும் மோகம்விளைத்தங் கசன்சேனையுள்
அதிபதி யாமெனச்சொல் பெருமைகொள் வாள்,அளப்பில்
மதகலை யாவினுக்கும் உரைதெரி வாள்,மிகுத்த
தோதகங்கற் றிருப்பவள்மாதவர்
தாழும்வந்தித் திடத்தகுமோகினி
குமரியர்கள் அரசான பண்பினாள். ⅝
✓
நானவளைக்கண் டுடன்போய்இரு தாளுந்நிலத்தென் றிடுஞ்சீர்முத
லாவனவற்றின் திறங்காணுத லான்மனிதப்பெண் களின்சேகரம்
எனமிகும் ஆவலுற்று மயல்வெறி யேறிடப்பல்
உதடுட னேபிடிக்க உடலமெ லாம்நடுக்கம்
ஆகிநெஞ்சத் திடுக்கமதோடுரு
வாறுமின்றித் தவித்திடும்வேளையில்
✓
மாதுரியத்திங் கிதம்பேசிய தோழியர்முற்றும் பிரிந்தேதனி
யானதனைக்கண் டுள்அஞ்சாதெனை நாடியும்வெட்குங் குணம்போல்ஒரு
விதநகை யோடுநிற்கும் நிலையையும் வேர்வைகொட்டும்
நுதலையும் நாடிஇச்சை வழிமுடி வாமெனக்கொ(டு)
ஆர்வமிஞ்சித் திருக்கணிவாய்மொழி
கூறவுஞ்சற் றிரக்கம்இலாததென்?
நாணமிகுக்கின் றதென்றால்என(து) ஆருயிர்நிற்கின் றதன்றாகும்மெய்
✓
காமரசத்தின் சுகந்தான்அறி யாயிதுகைப்பன் றுபின்தோணிடும்
எனதுக ணே!பழிப்பில் மதனகு டாரிஒத்த
மதுமினி யே!பழுத்து வரும்அமு தே!உனக்கோர்
ஆளெனும்சொற் பொறுத்தலைவேன்என(து)
ஆவிஉன்றற் கடைக்கலமாம்அடி
கொடுமைதவிர் எனநான்நெ ருங்கலால் ¾
✓
நீரணிபொற்பொன் றிடுந்தாழ்சடை நாதனடுக்கின் றஅன்றோடிய
பாவையெனக்கொஞ் சமுந்தோணலு றாததிருட்டன் புடன்போயினள்
இதுசரி யோஉனக்கென் மனதைவி டாதுகைக்கொ(டு)
உரிமையி லார்கள்ஒத்து விலகுவ தேது?சற்று
வாடி!அஞ்சப் பெடைக்கிணையாம்நடை
போதும்என்சொற்(கு) உருக்கம்உறாததுஎன்?
மோகமிகுக்கின் றதந்தோ!பழி சாருமெனக்கண் டுநின்(று)ஓர்தரம்
✓
நாணுனைமுத்தங் கொடுந்தோள்அணை வாகிடுமட்டின் றிசைந்தால்என
குறைபடு மோ?உனக்கும் அதுசுக மேஎனச்சொல்
வதுபிழை யே?சுகித்த பிறகறி வாய்தனித்த
வேளைஇந்தப் படிக்கெனைநீவிடல்
நீதம்அன்றொப் பெனச்சொலிவாடலும்
நீலியும்வெட்குந் தரஞ்சேர்பவள் கோபமிக்குக்குங் குணம்போல்ஒரு
✓
காலுமுனைக்கண் டதுண்டோஎன ஏசினள்அச்சந் தவிர்ந்தாளெனும்
நிலைமையி னோடுகிட்டி அளவுறும் ஆணையிட்டுன்
அடிமையெ னாஉரைத்து விழ,உட னேமகிழ்ச்சி
மீறிஅங்கைத் தொடிக்குலம்ஒலிட
ஓடிவந்துற் றெடுத்துறவாகினள்
இமயநிகர் முலைமார் பழுந்தவே ⅞
✓
நேயம்வளர்த்தங் கசன்றான் அட!நீஎனமெச்சும் பதம்பாடினள்
சோகமொழிக்குங் குகன்சீர்மிக வாழிஎனக்கும் பிடும்போதமொ(டு)
இதழ்,கவுள், மார்பு,நெற்றி, முலைமுத லாயவற்றின்
உறுசுவை தேறிமுத்தர் பகர்தரும் நூலுரைத்த
வாறழுந்த கடித்ததனோடுகிர்
யாவையும்பொற் புறப்பதிவாதல்செய்(து)
ஏகமயத்தொன் றிடும்பேரறி வாளரெனச்சிந் தையொன்றாய்மிகு
✓
தாடனமிட்டம் புயந்தேர்பணி தேனுறுதட்டென் றிடுஞ்சீர்திகழ்
கடிதட மாமுறுப்பு முதலிய தேறிஇச்சை
மணியதன் மீதிருக்கும் மதனனும் நாணிஅச்ச
மோடுகெஞ்சித் தொழப்பலவாகிய
லீலையுஞ்சித் திரப்படியேசெயும்
நேரமதிற்கண் சிவந்தோர்மயல் போலெதிரிட்டங் கசைந்தாடிய
✓
பேதைகழுத்தெண் புளின்சீரொலி யோடுகுகுக்குங் குகுங்கூவென
எழுதலின் ஆகமுற்றும் வெயர்வைகு லாவமிக்கு
மதனக லாஉணர்ச்சி ஒருசம மாகஇச்சை
நோயுமங்கிச் செலத்தருமாமலர்
தூவிஉம்பர்த் தலத்தினர்பேசிட
இனிதுபெறும் அநுபோகம் இன்பமே. 1