முருகன் App
கந்தர் கலித்துறை
வை. தங்கமணி
அவையடக்கம்2 / 3
கந்தர் கலித்துறை · வை. தங்கமணி

அவையடக்கம்

✓
பிஞ்சுக் குழந்தை பிதற்றும் மொழியை மடுப்பவர்கள்
நஞ்சுக் கிளவி இதுவெனச் சொல்ல எவருமிலர்!
செஞ்சொற் கவிதை வடிக்க முனையும் எனதுசொலும்
கொஞ்சும் மழலைச் சொலதாய் மகிழ்ந்தே அணைத்திடுகே!
4✓
தண்மதி யுள்ளில் மறுவது கண்டு வெறுப்பவர்கள்
உண்டெனச் சொல்லப் புவிதனில் யாரும் இலையதனால்
கண்மணி யன்னான் முருகனின் தன்மை இயம்பலினால்
எண்ணியே கொள்வர் இலங்கறி வுள்ளோர் இதனையுமே!