முருகன் App
கந்தர் கலித்துறை
வை. தங்கமணி
வாழ்த்து1 / 3
கந்தர் கலித்துறை · வை. தங்கமணி

வாழ்த்து

1விநாயகர் வாழ்த்து✓
தார்மேவும் வேத விநாயக! தங்க நிகரழகா!
ஏர்கொண்ட உன்றன் இணையடி போற்றித் திருமுருகன்
பேர்பாடப் பேராற்றல் கொண்ட பெருமை தனையியம்பப்
பார்போற்றும் மூத்தோனே! பார்போற்ற ஈவாய் தமிழினையே!
2சிவன் வாழ்த்து✓
முக்கண் இறையவா! முத்தேர் முறுவல் உமையவளும்
பக்கல் இருக்க உலகினைக் காக்கும் கருணைமிகு
தக்கன் மருக! இணையடி யேத்தினன் கந்தனது
மிக்கு மிகுநெறி பாடவே காத்திட வந்தருளே!
3தமிழ்மொழி வாழ்த்து✓
கன்னித் தமிழே கனியே அமுதே உயிர்நெறியே!
உன்னை யடைந்து முருகன் பெருமை பரவிடவே
எண்ணி யுனதடி பற்றினன் வந்துநீ இச்செயற்கு
நின்று துணைபுரி சங்கம் வளர்ந்த நறுங்கனியே!