முருகன் App
மயிலாசல அலங்காரம்
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
பாயிரம்1 / 3
மயிலாசல அலங்காரம் · வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

பாயிரம்

1கொச்சகம்✓
அன்றுசிவப் பிரகாச னரியதுதி தனக்கெய்தச்
சென்றுபகர்ந் தமைநாடிச் சிவஞான பாலையன்
குன்றுளுயர் மயிலமலைக் குமரனுக்குக் கலம்பகமொன்
றின்றுசொலத் திருப்புகழோ னிடத்திலினி திசைத்தானே.
2நேரிசை வெண்பா✓
ஆட்டுப்பால் வாய்வை யடக்கி யடுத்துவந்து
சீட்டுக்கு ளாடலொன்று செய்துபல—பாட்டுடைய
பாலையனை யேவியென்னைப் பற்றிவலி தாண்டுகொண்டான்
சோலை மிகுயிலத் தோன்.
3எண்சீர் வண்ணவிருத்தம்✓
தனதன தத்தன தத்தத் தனந்தனனா
சயிலமு ழக்கவும் வெட்கச் சிறந்தரனார்
தமதுரு வொத்தரு விப்பொற் பிசைந்துளதா
மயிலம லைக்குக னுக்குக் கலம்பகநூல்
வனைகுவ தற்குயர் சொற்கட் டுவந்தருள்வீர்
வெயிலவ னுற்றவ யிற்றுச் செழுங்களிறே
வெளிறும லர்க்குளி ருக்கைக் கிசைந்தவளே
யயின்மயில் குக்குட முற்செப் பறின்றனவே
யடியர்ப தக்கம லத்துற் றநுண்பொடியே.