முருகன் App
மயிலாசல அலங்காரம்
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
வாழி3 / 3
மயிலாசல அலங்காரம் · வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

வாழி

105எண்சீர் விருத்தம்✓
அழகியசண் முகத்தொருமெய்க் கடவுள் வாழி
யமரர்குலா திபன்வளர்த்த வணங்கு வாழி
குழலுடைப்பூங் குயிலனைய குறத்தி வாழி
கொற்றவைவேண் மயில்சேவற் கொடிச்சீர் வாழி
பழமறையோ லிடுமயிலப் பொருப்பு வாழி
பத்திநெறிக் கவுமாரப் பண்பு வாழி
மழவிடைக்கோ னனையசிவ ஞானி வாழி
வையகமும் வானகமும் வாழி மாதோ.