முருகன் App
சண்முகப் பாமாலை
உருத்திர சாமி
காப்பு1 / 3
சண்முகப் பாமாலை · உருத்திர சாமி

காப்பு

1வெண்பா✓
பூங்கொன்றை மாலையணி புண்ணியவி நாயகனே
தீங்கொன்றும் யானென்றுஞ் சேராமல்-பாங்கொன்றத்
தந்தருள்செய் சொற்பொருளும் சண்முகப்பா மாலைக்குக்
கந்தமலர் நின்சரணே காப்பு.
2✓
நின்னடிக்கே சாத்து நிலவிப்பா மாலைக்கு
மன்னுயில் வேலேந்து வள்ளலே-என்னரும்வீழ்
செஞ்சொற் பொருளுமிகச் சேர்த்தளிப்பாய் நின்கழற்காற்
கஞ்ச மலரிரண்டே காப்பு.
3✓
வெண்டா மரைமலரில் வீற்றிருக்கு மன்னமே
விண்டாரை வெல்லும்வேல் விண்ணவர்க்குப்-பண்டாங்கச்
சாத்துமிப்பா மாலைக்குச் சார்பொருளுஞ் செஞ்சொல்லும்
காத்தளிக்க நின்கழலே காப்பு.
4✓
ஆதரிப்பார் சூழ்கோவ லாறுமுக தேசிகனே
நீதந்த ஞானத்தை நெஞ்சிருத்திப்-பேதையேன்
சாத்தி யிடுமிந்தச் சண்முகப்பா மாலைக்குக்
காத்திடுநின் காற்றுணையே காப்பு.