முருகன் App
சந்நிதிக் கந்தன் சரிதை
ந. சுப்பிரமணியம்
வேறு3 / 3
சந்நிதிக் கந்தன் சரிதை · ந. சுப்பிரமணியம்

வேறு

15✓
திருவடிக்கீழ்க் கதிர்காமன் சென்ற பின்னர்,
சிறப்புடனே அவர்வம்சச் செல்வர் அங்கு
அருமையுடன் வாய்கட்டி ஆற்றிப் பூசை,
அவ்விடத்தில் ஆயிரத்துத் தொளாயி ரத்து
இருபத்தோர் ஆண்டினிலே எவரும் மெச்சும்
எழில்மிக்க புதுக்கோயில் எழுப்பி னார்கள்,
தரணியுளார் வினைநீங்கத் தருமம் ஓங்கத்
தவமோங்கச் சரவணனின் தலமும் ஓங்க.
16✓
திரிசூலம் புஷ்கரணி தென்கீழ், ஆனைத்
திருமுகனார் திசைதெற்கு, திருமால் பெற்ற
திருமாது வடகிழக்கு, திண்ணை தன்னில்
திருஎருது முகநந்தி, தேவ தேவன்
திருநாக தம்பிரான் வடமேல் நிற்கத்
திருச்செல்வச் சந்நிதியின் செவ்வேள் ஆங்கு
திருநடனம் ஆடிவரத் தேர்மேற் காண்போர்
திருமுருகன் திருவடிக்கீழ்ச் சென்று வாழ்வார்.