முருகன் App
திருமுருகாற்றுப்படை
நக்கீரர்
குன்றுதோறாடல் (திருத்தணி)5 / 6
திருமுருகாற்றுப்படை · நக்கீரர்

குன்றுதோறாடல் (திருத்தணி)

42✓
பைங்கொடி நறைக்கா யிடையிடுபு வேல
னம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு
43✓
வெண்கூ தாளந் தொடுத்த கண்ணிய
னறுஞ்சாந் தணிந்த கேழ்கினர் மார்பிற்
44✓
கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்
⁠நீடமை விளைந்த தேக்கட் டேறற்
45✓
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை யயர
46✓
விரலுனர்ப் பவிழ்ந்த வேறுபடு நறுங்காற்
குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி
47✓
⁠இணைத்த கோதை யணைத்த கூந்தன்
முடித்த குல்லை யிலையுடை நறும்பூச்
48✓
செங்கான் மராஅத்த வாலிண ரிடையிடுபு
சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை
49✓
திருந்துகா ழல்கு றிளைப்ப வுடீஇ
⁠மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு
50✓
செய்யன் சிவந்த வாடையன் செவ்வரைச்
செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன்
51✓
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்
52✓
⁠தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங்
கொடிய னெடியன் றொடியணி தோள
53✓
னரம்பார்த் தன்ன வின்குரற் றொகுதியொடு
குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயன்
54✓
மருங்கிற் கட்டிய நிலனேர்பு துகிலினன்
⁠முழவுறழ் தடக்கையி னியல வேந்தி
55✓
மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்து
குன்றுதே றாடலு நின்றதன் பண்பே யதாஅன்று.