முருகன் App
திருமுருகாற்றுப்படை
நக்கீரர்
திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)2 / 6
திருமுருகாற்றுப்படை · நக்கீரர்

திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)

18✓
வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல்
வாடா மாலை யோடையொடு துயல்வரப்
⁠படுமணி யிரட்டு மருங்கிற் கடுநடைக்
கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பிற்
கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண்
19✓
டைவே றுருவிற் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி
⁠மின்னுற ழிமைப்பிற் சென்னிப் பொற்ப
நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை
சேண்விளங் கியற்கை வாண்மதி கவைஇ
அகலா மீனி னவிர்வன விமைப்பத்
தாவில் கொள்கைத் தந்தொழின் முடிமார்
⁠மனனேர் பெழுதரு வாணிற முகனே
20✓
மாயிருண் ஞால மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன் றொருமுக மொருமுக
மார்வல ரேத்த வமர்ந்தினி தொழுகிக்
காதலி னுவந்து வரங்கொடுத் தன்றே யொருமுக
21✓
⁠மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வியோர்க் கும்மே யொருமுக
மெஞ்சிய பொருள்களை யேமுற நாடித் திங்கள்போலத்
திசைவிளக் கும்மே யொருமுகஞ் செறுநர்த் தேய்த்துச்
செல்சம முருக்கிக்
22✓
⁠கறுவுகொணெஞ்சமொடு களம்வேட்
டன்றே யொருமுகங்
குறவர் மடமகள் கொடிபோ னுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே யாங்கம்
23✓
மூவிரு முகனு முறைநவின் றெழுகலி
னாரந் தாழ்ந்த வம்பகட்டு மார்பிற்
⁠செம்பொறி வாங்கிய மொய்ம்பிற் சுடர்விடுபு
வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்
விண்செலன் மரபி னையர்க் கேந்திய
தொருகை உக்கஞ் சேர்த்திய தொருகை
24✓
நலம் பெறு கலிங்கத்துக் குறங்கின் மிசையசை இயதொருகை
⁠அங்குசங் கடாவ வொருகை யிருகை
ஐயிரு வட்டமொ டெஃகுவலந் திரிப்ப வொருகை
மார்பொடு விளங்க வொருகை
தாரொடு பொலிய வொருகை
கீழ்வீழ் தொடியொடு மிமீசைக் கொட்ப வொருகை
25✓
பாடின் படுமணி யிரட்ட வொருகை
நீனிற விசும்பின் மலிதுளி பொழிய வொருகை
வானர மகளிர்க்கு வதுவை சூட்ட வாங்கப்
பன்னிரு கையும் பாற்பட வியற்றி
அந்தரப் பல்லியங் கறங்கத் திண்காழ்
26✓
வயிரெழுந் திசைப்ப வால்வனை ஞரல
உரந்தலைக் கொண்ட வுருமிடி முரசமொடு
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யகவ
விசும்பா றாக விரைசெலன் முன்னி
உலகம் புகழ்ந்த வோங்குயர் விழுச்சீ
27✓
⁠ரலைவாய்ச் சேறலு நிலைஇய பண்பே
யதாஅன்று