முருகன் App
திருமுருகாற்றுப்படை
நக்கீரர்
திருவேரகம் (சுவாமிமலை)4 / 6
திருமுருகாற்றுப்படை · நக்கீரர்

திருவேரகம் (சுவாமிமலை)

35✓
இருமூன் றெய்திய வியல்பினின் வழாஅ
திருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
36✓
அறுநான் கிரட்டி யிளமை நல்லியாண்
⁠டாறினிற் கழிப்பிய வறனவில் கொள்கை
37✓
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்
திருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
38✓
ஒன்பது கொண்ட முன்றுபுரி நுண்ஞ்
புலராக் காழகம் புலர வுடீஇ
39✓
⁠உச்சிக் கூப்பிய தற்புகழ்ந்
தாறெழுத் தடக்கிய வருமறைக் கேள்வி
40✓
நாவியன் மருங்கி னவிலப் பாடி
விரையுறு நறுமல ரேந்திப் பெரிதுவந்
41✓
தேரகத் துறைதலு முரிய னதாஅன்று.