முருகன் App
திருச்சந்நிதித் தோத்திரமாலை
ச. வயித்தியலிங்கம் பிள்ளை
விநாயகர் காப்பு1 / 3
திருச்சந்நிதித் தோத்திரமாலை · ச. வயித்தியலிங்கம் பிள்ளை

விநாயகர் காப்பு

கட்டளைக் கலித்துறை✓
தங்கச்சிற் சந்நிதி கல்லோடை சின்னக் கதிரைதன்பேர்
தங்கச் சினகர வேலோனைப் போற்றியெண் சார்பிணிக்கே
தங்கச் சிரிக்க வருடரு வாயன்பர் தஞ்சநன்மா
தங்கச் சிதாடனத் தென்மேற் றளியமர் தற்பரனே.
✓
விக்கினந் தீர்க்கும் விநாயக னேயென் வினைகளெல்லாம்
உக்கிர மாக எனைவாட்ட வாட்ட உளம்பதைத்தே
இக்கண மேஎன் னுடல்ப்பொரு ளாவியை ஏழைமையேன்
தக்கிணை யாகத்தந் தேன்சிவ மேயெனைத் தாங்கிக்கொள்ளே.