முருகன் App
வேலன் பாட்டு
சி. சுப்பிரமணிய பாரதியார்
ஆறு சுடர்முகங்3 / 3
வேலன் பாட்டு · சி. சுப்பிரமணிய பாரதியார்

ஆறு சுடர்முகங்

3✓
ஆறு சுடர்முகங் கண்டு விழிக்கின்ப
மாகுதே:-கையில்
அஞ்சலெ னுங்குறி கண்டு மகிழ்ச்சியுண்
டாகுதே.
நீறு படக்கொடும் பாவம் பிணிபசி
யாவையும்-இங்கு
நீக்கி யடியரை நித்தமுங் காத்திடும்
வேலவா!
கூறு படப்பல கோடி யவுணரின்
கூட்டத்தைக்-கண்டு
கொக்கரித் தண்டங் குலுங்க நகைத்திடுஞ்
சேவலாய்!
மாறு படப்பல வேறு வடிவொடு
தோன்றுவான்-எங்கள்
வைரவி பெற்ற பெருங்கன லே,வடி
வேலவா!