முருகன் App
வேலன் பாட்டு
சி. சுப்பிரமணிய பாரதியார்
வில்லினை யொத்த1 / 3
வேலன் பாட்டு · சி. சுப்பிரமணிய பாரதியார்

வில்லினை யொத்த

1✓
வில்லினை யொத்த புருவம் வளைத்தனை,
வே லவா !- அங்கொர்
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி
யானது, வேலவா!
சொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறு
வள்ளியைக்-கண்டு
சொக்கி மரமென நின்றனை தென்மலைக்
காட்டிலே.
கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட
பாதகன்-சிங்கன்
கண்ணிரண் டாயிரங் காக்கைக் கிரையிட்ட
வேலவா!
பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும்
வள்ளியை-ஒரு
பார்ப்பனக் கோலந் தரித்துக் கரந்தொட்ட
வேலவா!