முருகன் App
வேலன் பாட்டு
சி. சுப்பிரமணிய பாரதியார்
வெள்ளலைக் கைகளைக்2 / 3
வேலன் பாட்டு · சி. சுப்பிரமணிய பாரதியார்

வெள்ளலைக் கைகளைக்

2✓
வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்குங்
கடலினை-உடல்
வெம்பி மறுகிக் கருகிப் புகைய
வெருட்டினாய்.
கிள்ளை மொழிச்சிறு வள்ளி யெனும் பெயர்ச்
செல்வத்தை-என்றும்
கேடற்ற வாழ்வினை யின்ப விளக்கை
மருவினாய்.
கொள்ளைகொண் டேஅம ராவதி வாழ்வு
குலைத்தவன்-பானு
கோபன் தலைபத்துக் கோடித் துணுக்குறக்
கோபித்தாய்.
துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன்
மானைப்போல்-தினைத்
தோட்டத்தி லேயொரு பெண்ணை மணங்
கொண்ட வேலவா!