ஆறுமுகன் அருட்பேராயிரம்
ச. சுப்பிரமணியம் பண்டிதர்
நூல்3 / 4
ஆறுமுகன் அருட்பேராயிரம் · ச. சுப்பிரமணியம் பண்டிதர்
நூல்
1ஆயிரம் நாமம்✓
போற்றியோம் எண்ணி லாற்றற் புங்கவ புனித! போற்றி
போற்றிமற் றரியாய் யாரும் வெலப்படா வீர போற்றி
போற்றியோம் அநாதர்க் காத்த தவறுறாப் பயனே போற்றி
போற்றியோம் அசோக போற்றி மூப்பிலா முருக போற்றி. 1
2✓
போற்றியோம் அபய போற்றி உயர்குண வள்ளல் போற்றி
போற்றியோம் பாவ நாச முதலெண்ண நிற்பாய் போற்றி
போற்றிமால் வரைநாள் பால அநந்தமாம் மாண்ப போற்றி
போற்றியோம் எல்லை யில்லாய் அளவிலின் பருள்வாய் போற்றி. 2
3✓
போற்றிகே டில்லாய் கேடில் முத்திதந் தருள்வாய் போற்றி
போற்றியோம் அநாதி நாத அளப்பரும் அளவே போற்றி
போற்றியோம் அழிவி லானே வழுவிலா உறுதி போற்றி
போற்றியோம் கறையி லானே அபிராம போற்றி போற்றி. 3
4✓
போற்றிமுன் னேன்று நிற்பாய் அளப்பில்வீ ரியனே போற்றி
போற்றியோம் அநாதர் நாத அநாதியாம் அமல போற்றி
போற்றிசோர் விலாவுற் சாக தேவர்கள் தேவ போற்றி
போற்றிவெம் பகைகாய் தீர எவைக்குமா தார போற்றி. 4
5✓
போற்றியெண் குணமாஞ் சித்த முன்னின்றே வுகிற்பாய் போற்றி
போற்றிசஞ் சலமில் லானே அமரர்போற் றெடுப்பாய் போற்றி
போற்றிநிட் களங்க போற்றி அள ணா கார போற்றி
போற்றிதீப் பயந்தோய் தோமி லவயவத் துருவ போற்றி.5
6✓
போற்றியற் புதனே வேண்டும் வரமருள் பவனே போற்றி
போற்றிஐம் புலனெட் டானே அறிவரும் இயல்பா போற்றி
போற்றிகாண் பரியாய் யாரும் புணர்கிலாப் புணர்ப்பாய் போற்றி
போற்றியா பத்தைப் போக்கி ஆரியா போற்றி போற்றி.6
7✓
போற்றுபூ ரணனே போற்றும் ஆகமத் துதியாய் போற்றி
போற்றிநோ வுற்றார்க் காப்பாய் மூலமாம் முதல்வ போற்றி
போற்றியா நந்த! மேலோர் சேவிக்கும் சீரோய் போற்றி
போற்றிசார்ந் தவர்க்கு தார ஆனந்த மயனே போற்றி. 7
8✓
போற்றியே ழையர்ச காய வியப்பருள் வடிவ போற்றி
போற்றிஆ நந்த ரூப துன்பர்துன் பொழிப்பாய் போற்றி
போற்றிஐங் கரற்குத் தம்பி ஏவர்க்கும் இனியாய் போற்றி
போற்றிமா உரித்தோன் மைந்த மறைகள் போற்றெடுப்பாய் போற்றி. 8
9✓
போற்றியிந் திரவாழ் வீவாய் போற்றிபுண் ணியப்பே றாவாய்
போற்றியின் பன்பர்க் கீவாய் இருமையும் அளிப்பாய் போற்றி
போற்றியெம் வேண்ட லீவாய் இந்திரன் பணிதாள் போற்றி
போற்றியோம் போற்ற வுள்ளாய் ஈசனார் குமரா போற்றி.9
10✓
போற்றியீந் தருள்வாய் இட்டம் ஈதிபீ திகள்தீர் போற்றி
போற்றியோம் போற்ற வுற்றாய் வேகம்முன் றில்லாய் போற்றி
போற்றியீ கையினாம் கீர்த்தி ஓய்விலா நுழைப்பாய் போற்றி
போற்றியாண் மையினால் மிக்கோய் மேலுயர் சத்தா போற்றி. 10
11✓
போற்றியுற் சாக போற்றி உயர்குணத் துதார போற்றி
போற்றிநல் விழாவை வேட்பாய் மலர்தரு மலரே போற்றி
போற்றியீ சன்பால் வந்தோய் கொடியர்க்குக் கொடியாய் போற்றி
போற்றியோம் நெடியாய் துட்டர்ச் சுடுசுடர்க் கண்ணா போற்றி. 11
12✓
போற்றியோம் வெற்றி வேழ வெவ்வினை தணிப்பாய் போற்றி
போற்றியோம் துயர்து டைப்பாய் நரகர்க்கு நாத போற்றி
போற்றியோம் வலிமை மிக்கோய் புராணனாய் வளர்ந்தாய் போற்றி
போற்றியோம் உமையாள் மைந்த உதவுசீ ரகத்தாய் போற்றி.12
13✓
போற்றிசங் கரனார் மைந்த வழிமுத்திக் கருள்வாய் போற்றி
போற்றிவீ ரியத்தைக் காப்பாய் வலிமைவாய்ந் தவனே போற்றி
போற்றிமேல் நிலைக்கே உய்ப்பாய் மேலவர் மேலோய் போற்றி
போற்றிமே லுலக வேந்த தைரிய சாலி போற்றி. 13
14✓
போற்றியோம் புகழார் வள்ளால் மேலாநின் ஆணை போற்றி
போற்றிவான் முனிவர் போற்றாய் கடன்மூன்றும் ஒழிப்பாய் போற்றி
போற்றிதிவ் வியசீர் ரூப நேர்வழி உய்ப்பாய் போற்றி
போற்றிநேர் வழிகாட் டீச உண்மைவாழ் உறையுள் போற்றி.14
15✓
போற்றிநேர் மையிலே நேச காளைகண் டனையாய் போற்றி
போற்றியோம் வளர்ப்பாய் எம்மை ஒளிவளர் உண்மை போற்றி
போற்றிதாழ்ந் தோரை மீட்பாய் புயற்பிறப் பொழிப்பாய் போற்றி
போற்றிமான் கரத்தன் மைந்த ஏகனே போற்றி போற்றி.15
16✓
போற்றிபா வங்கள் நீப்பாய் ஆக்கமுற் றருள்வாய் போற்றி
போற்றிஇந் திரபோ கத்த புலன்களை புனித போற்றி
போற்றியிந் திரன்சேய்க் கீச வீரியா கரனே போற்றி
போற்றிமூ லிகைகள் பூத்தாய் வீரியம் விளைப்பாய் போற்றி.16
17✓
போற்றியோம் அன்ன தாதா போற்றியோம் உதார சீல
போற்றியோம் உமையாள் பால போற்றியுக் கிரனார் சேயே
போற்றிஉந் ததபே றீவாய் போற்றியோம் வரதர்க் கீச
போற்றியோம் மருந்தை ஆக்கி மருந்துமா யிருப்பாய் போற்றி. 17
18✓
போற்றிஒள டதவா கார போற்றியோம் சுடரும் சோதி
போற்றிசூ ரியன்போற் றீச போற்றிஅம் பிகையாள் மைந்த
போற்றியன் னம்பா லிப்பாய் போற்றிகா லாரி பால
போற்றியோம் குருடு போக்கி போற்றியோம் கமலக் கண்ண.18
19✓
போற்றிமா யாதி யில்லாய் போற்றியோம் அமரர் நாத
போற்றியோம் தெளிய ஒண்ணாய் போற்றிபுண் ணியப்பே றார்த்தி
போற்றியோம் பகையி லானே போற்றிபே தகப்பேச் சில்லாய்
போற்றிநற் கதிதந் தீவாய் போற்றியோம் கார்த்தி கேய.19
20✓
போற்றிநாம் விரும்பும் ரூப போற்றியோம் குமர போற்றி
போற்றியோம் கிரவுஞ்ச பேத போற்றிகா மியங்கள் ஈவாய்
போற்றிகா ரணனாம் பூத போற்றிகா மியமாய் உள்ளாய்
போற்றிகட் டழக போற்றி திருவருள் வாரி போற்றி. 20
21✓
போற்றிபொன் னொளியார் வண்ண போற்றிபே ரொளிப்பி ழம்ப
போற்றியான் மாக்கட் கன்ப போற்றிஇச் சிப்ப நல்கி
போற்றிஞா னப்பா வாண போற்றிமா கீர்த்தி ஈட்டி
போற்றியோம் சேவ் லேந்தி போற்றியோம் ஆதி மூல.21
22✓
போற்றியோம் குவளைக் கண்ண போற்றிகுங் குமநேர் வண்ண
போற்றியோம் இடுக்கண் தீர்ப்பாய் போற்றிசா துரிய போற்றி
போற்றிசே வலம்ப தாகை போற்றிதீப் பொறியு தித்தாய்
போற்றிதீ யோர்கு ரூர போற்றிதீ யோரைத் தீப்பாய். 22
23✓
போற்றிவெங் கலிக்குக் கால போற்றிமன் மதன்மேல் ரூப
போற்றிகற் பகமாய் நிற்பாய் போற்றியோம் காந்தி நாத
போற்றியோம் கருதிற் றீவாய் போற்றிமங் களங்கள் செய்வாய்
போற்றியோம் கிலேச நாச போற்றியோம் கருணா மூர்த்தி.23
24✓
போற்றிமா கருணை வாரி போற்றியோம் பாவம் கல்வி
போற்றிஆள் வினையி னான்றோய் போற்றிதீ யோர்க்குக் கோர
போற்றியோம் கவசம் பூணி போற்றிகா ரியப்பே றுள்ளாய்
போற்றிகோ மளவா கார போற்றிதர்ப் பையின்மேல் பற்றோய். 24
25✓
போற்றிநிற் தனையர் நாச போற்றியோம் கலைமி லைந்தோய்
போற்றியோம் கியாதி யாள போற்றியோம் பரிசை யேந்தி
போற்றிவா ளங்கை தாங்கி போற்றியோம் கதைகைக் கொண்டோய்
போற்றிதீ யவர்தண் டிப்பாய் போற்றிமெய்ப் புகழ்நல் கீச.25
26✓
போற்றிவிண் சுடர்கட் கீச போற்றிமே தகவி ருப்ப
போற்றிவா னவர்போற் றாத்த போற்றிதா பங்கள் போக்கி
போற்றிவா னகத்தே வாழ்வாய் போற்றிவா னகசஞ் சார
போற்றிவா னவர்தம் பற்றே போற்றிபூண் பிறையான் பிள்ளாய். 26
27✓
போற்றிகுன் றுகள்தோ றாடி போற்றிவிண் ணவர்தம் காப்பே
போற்றியா காய ரூப போற்றிதீ வினைகண் டித்தோய்
போற்றிவான் மகளிர் போற்றாய் போற்றிகாங் கேய போற்றி
போற்றியோம் மலைமான் செல்வ போற்றியோம் கணேசர் தம்பி. 27
28✓
போற்றியோம் குகனே போற்றி போற்றியோம் காவற் கார
போற்றிவா னவர்சே விப்போய் போற்றிமுக் குணங்க டந்தோய்
போற்றியுட் குகையு ளானே போற்றிமேற் கதியி வானே
போற்றியெண் குணமார் செல்வ போற்றிகாம் பீர்ய தேவ.28
29✓
போற்றிமா மலையாள் பால போற்றியோம் மறையு ளானே
போற்றியோம் வைத்ய நாத குணாதீச போற்றி போற்றி
போற்றிசற் குணமுன் னோனே போற்றியோம் மலையா னானே
போற்றியோம் வனமா னானே பேற்றியோம் மறையா னானே. 29
30✓
போற்றியோம் அகந்தை போக்கி போற்றிசற் குணம்பா லிப்பாய்
போற்றியோம் அந்த ரங்க போற்றியோம் குணந்தேர் ஞானி
போற்றிகீ தங்கள் தேர்வாய் போற்றியோம் கவலே இல்லாய்
போற்றிசற் குணத்தின் சார்பே போற்றிபா வுரையா னானே.30
31✓
போற்றிகண் ணியனே போற்றி புவிதொழு பவனே போற்றி
போற்றிவிண் டலசஞ் சாரி போற்றிநற் சரிதை யானே
போற்றியோம் கிலேச மில்லாய் சற்குண வாரி போற்றி
போற்றியோம் கருணா நோக்க போற்றியொள் ளொளிக்கு வித்தே. 31
32✓
போற்றியோம் மேக நாத மணிநாதப் பிரிய போற்றி
போற்றிவெம் பாச மோச போற்றிவான் மழைமே லார்வ
போற்றிபே ரின்ப மானாய் போற்றியோம் வெம்மை வீட்டி
போற்றியோம் காந்தி மானே போற்றிகா னனம் எய்தாய்.32
33✓
போற்றியோம் ஒளியாய் உள்ளாய் போற்றியோம் தயாள மூர்த்தி
போற்றியோம் நாத ரூப போற்றிதைத் தியசங் கார
போற்றிமா செல்வம் சேர்ப்பாய் மழையுமுன் இரப்பாய் போற்றி
போற்றிமா பலவ போற்றி போற்றிசைத் திரிக போற்றி.33
34✓
போற்றிசித் திரமாம் வண்ண ஓய்விலா தியங்கி போற்றி
போற்றிசஞ் சலமாங் காந்தி போற்றிமெய்ஞ் ஞான மானாய்
போற்றிமெய்ஞ் ஞான ரூப ஞானவா நந்த போற்றி
போற்றியோம் நீடு வாழ்வாய் போற்றிசித் திரப்பொன் னாடை. 34
35✓
போற்றிசித் திரப்பூ ணானே போற்றிசிந் திக்க நிற்பாய்
போற்றிநின் வியப்பார் செய்கை சோரரைக் களைவாய் போற்றி
போற்றிமா சதுரா போற்றி பெருவனப் பாள போற்றி
போற்றிபொற் பூணாய் கோடி நிலாவெயில் ஒளியாய் போற்றி. 35
36✓
போற்றியிந் தணிந்தோன் பால மறையுறுப் புருவ போற்றி
போற்றியோம் கபடம் நீக்கி பாசமுற் றொழிப்பாய் போற்றி
போற்றிபோக் கிருள்சேர் துன்பம் புகழ்குடை கவித்தாய் போற்றி
போற்றிதா பந்த ணிப்பாய் பாற்கடல் கடைந்தாய் போற்றி.36
37✓
போற்றிமுக் குணவ தீத போற்றிஆ சைகளில் லாதாய்
போற்றியோம் ஐயந் தீர்ப்பாய் வேதமாம் வடிவாய் போற்றி
போற்றிவே தத்தோ டேகி பாசசே தகனே போற்றி
போற்றியோம் பிரபா ரூப புவிக்கிதம் புரிவாய் போற்றி.37
38✓
போற்றிமா ஞாலம் போற்றி உலகின்மா முதியாய் போற்றி
போற்றியோம் உலக மானாய் போற்றிமுற் றுலகின் தந்தாய்
போற்றிகங் கைக்குப் பால பகைவென்ற பகவ போற்றி
போற்றிசற் குருவே ஞாலத் துயர்வெற்றி விகிர்தா போற்றி.38
39✓
போற்றிஐம் புலன்க டந்தோய் வெற்றியால் விளங்கி போற்றி
போற்றிமுப் பிறப்பில் லானே சோதியுட் சோதீ போற்றி
போற்றியோம் உலக நாத உலகைவாழ் விப்பாய் போற்றி
போற்றியோம் உயிர்க்கா தார உலகெலாம் தொழுதாள் போற்றி. 39
40✓
போற்றியோம் உலகில் மேலோய் போற்றியோம் கிலேசம் வென்றோய்
போற்றியோம் உலகுக் கீச சகம்பணி தலைவ போற்றி
போற்றியோம் கருத்தா வானாய் சான்றாகும் சால்ப போற்றி
போற்றியோம் உலகு வப்பாய் மகபதி பணிதாள் போற்றி.40
41✓
போற்றியோம் சயமீ வானே மனோகர மாண்ப போற்றி
போற்றியா நந்தம் நல்கி மூடம்போக் கறிஞ போற்றி
போற்றிசெம் மலர்போல் வானே போற்றிகட் கினிய ரூப
போற்றியோம் சனங்கட் கீச போற்றிசோ பனனே போற்றி.41
42✓
போற்றியோம் பிறப்பொ ழிப்பாய் வெற்றிதந் தருள்வாய் போற்றி
போற்றியோம் உயிர்த்துன் பாற்றி போற்றிதா னவரைச் சாடி
போற்றியோம் வென்றி ஏறே சினம்வென்ற தீர போற்றி
போற்றியோம் செருக்கை வென்றோய் உயிர்கட் கோருறவ போற்றி.42
43✓
போற்றிவெம் புயல்போல் வேக பந்தங்கள் அறுப்பாய் போற்றி
போற்றிவெவ் வசுரர்க் கேறே முழவொலிப் பிரிய போற்றி
போற்றிமெய்ஞ் ஞான மூர்த்தி ஞானியர்க் கணியாய் போற்றி
போற்றிமெய் யறிவ போற்றி ஞானமா நிதியே போற்றி.
44✓
போற்றி'டங் கார''க் கூத்த கொடிவச்ர தரனே போற்றி
போற்றியோம் அகில தண்ட மலவிருட் கிரவி போற்றி
போற்றிமா மகிமை யானே அகங்கார ரூப போற்றி
போற்றியோம் துடிப்பி ரீத உடுக்கினின் னுரையாய் போற்றி.
45✓
போற்றிபுள் துடியால் தோற்றி உடுக்கொலிக் குவப்ப போற்றி
போற்றிதா னவரச் சோட்டி போற்றிவா னவர்ச காய
போற்றிதுண் டீரர் தம்பி தத்துவத் தறிஞ போற்றி
போற்றிதத் துவத்தை யுற்றாய் போற்றிதீ வீரனே போற்றி.
46✓
போற்றியோம் தவசொ ரூப தபோமய னானாய் போற்றி
போற்றியோம் சுருதி ரூப முக்காலம் அறிவாய் போற்றி
போற்றிமும் மூர்த்தி யானாய் போற்றிமுக் குணமு மாவாய்
போற்றியோம் அமரர்க் கீச போற்றிதா ரகசங் கார.
47✓
போற்றிமுத் தாபந் தீர்ப்பாய் தாபதர்க் கினியாய் போற்றி
போற்றியோம் மகிழ்ச்சி நல்கி போற்றிநாம் மகிழ வைப்பாய்
போற்றிதீட் சணிய போற்றி மெய்த்தவ வேட போற்றி
போற்றிமுக் காலம் காண்பாய் உமாபதி துதியாய் போற்றி.
48✓
போற்றிநாம் துதிக்க நிற்பாய் துதியுகந் தருள்வாய் போற்றி
போற்றியோம் துதியே போற்றி தோத்திர சொரூப போற்றி
போற்றிதோத் திரப்பி ரீத போற்றியோம் இறைவ போற்றி
போற்றியோம் தாணு போற்றி போற்றிதா பகனே போற்றி.
49✓
போற்றியோம் தூல சூக்க பருமித உருவ போற்றி
போற்றியோம் விருத்த வேட போற்றியோம் தூல ரூப
போற்றியோம் எவைக்கும் ஈட போற்றியோம் தீரனே போற்றி
போற்றியோம் நிலைபே றான அடக்கம் துடையாய் போற்றி.
50✓
போற்றியோம் தயாப ரேச யாவையும் தருவாய் போற்றி
போற்றியோம் பவவி நாச அனுகுதற் கரியாய் போற்றி
போற்றிநாக் கழக போற்றி தயாநந்த ரூப போற்றி
போற்றிதே வாதி தேவ தயாநிதி யோனே போற்றி.
51✓
போற்றிதாழ் வுரையி லானே தெளியொணாத் தேவ போற்றி
போற்றிவல் லாள போற்றி பளிங்கெனும் படியாய் போற்றி
போற்றியோம் சுமைக்க டங்காய் தானசீ லத்தாய் போற்றி
போற்றியீ ராறு கண்ணா போற்றிகை யிராறுள் ளானே.
52✓
போற்றிபன் னிருகா துள்ளாய் போற்றியீ ராறு கூற
போற்றியே ழையர்பங் காள போற்றியோம் சர்ப்பர்க் கீச
போற்றியோம் சவியு ளானே போற்றிபே ரெழிலா வானே
போற்றியோம் திவ்ய தேக போற்றியோம் அடக்க மாவாய்.
53✓
போற்றியோம் நெடியாய் போற்றி நீண்டகைத் தலத்தாய் போற்றி
போற்றிநீண் டழகார் கண்ணா போற்றியோம் சுவர்க்க நாத
போற்றியோம் தண்ட ரூப போற்றியோம் அடக்கி யாள்வாய்
போற்றியோம் பெருமை யாள தேவர்சிங் கேறே போற்றி.
54✓
போற்றியோம் உறுதி நோன்பு பெறற்கரும் பேறே போற்றி
போற்றியோம் அடைதற் கெட்டாய் சுடருரு வினனே போற்றி
போற்றிகாண் பரிய ஈச போற்றிதிவ் வியபூண் பூணி
போற்றிமா வுதரற் கொன்றாய் துக்கங்கள் துரப்பாய் போற்றி.
55✓
போற்றிதீப் பகையைக் கொல்லி போற்றியெண் டிசைக்கும் ஈச
போற்றிவெல் லரிய சூர தேவசே னேச போற்றி
போற்றியோம் அறியொ ணாதாய் கடந்திடற் கரியாய் போற்றி
போற்றியோம் அசனி ஏறே போற்றியோம் தருக்காய் போற்றி.
56✓
போற்றிமா தவர்சி ரேட்ட சோதிடர்க் கீச போற்றி
போற்றிதே வரைவாழ் விப்பாய் எம்பரம் சுமப்பாய் போற்றி
போற்றியோம் தரும பால தனமருள் தாதா போற்றி
போற்றிதை ரியம்வ ளர்ப்பாய் போற்றிதர் மேச போற்றி.
57✓
போற்றியோம் அறநூல் கண்டாய் வல்வில்லி என்பாய் போற்றி
போற்றியோம் தரும சித்த போற்றியோம் குபேர போற்றி
போற்றியோம் செல்வ நாத போற்றிவல் லாள தேவ
போற்றிபா தகங்கள் தீர்ப்பாய் தருமகா ரணனே போற்றி.
58✓
போற்றியோம் தரும தீர தருமமே செய்வாய் போற்றி
போற்றியோம் தருமந் தேர்ந்தோய் உறுதியாய் உள்ளாய் போற்றி
போற்றியோம் சிருட்டி கர்த்த மதிமிக வுள்ளாய் போற்றி
போற்றிதர் மானுட் டான சிறந்தசீ ராள போற்றி.
59✓
போற்றியெம் பரந்தாங் கீச போற்றியோம் விரத சீல
போற்றிநாள் விழாக்கொள் வானே நித்திய நிறைவா போற்றி
போற்றியோம் சலமி லானே குறையிலா நிறைவே போற்றி
போற்றியோ ருருவி லானே களங்கமி லானே போற்றி.
60✓
போற்றிபற் றிலானே போற்றி மமதையில் லானே போற்றி
போற்றியோம் அகந்தை யில்லாய் போற்றியோம் மோக மில்லாய்
போற்றிதொல் லைகளில் லானே நித்தியா நந்தா போற்றி
போற்றியா தங்க மில்லாய் நிர்ப்பிர பஞ்சா போற்றி.
61✓
போற்றிநோ யிலானே போற்றி குற்றமற் றவனே போற்றி
போற்றியா சைகளற் றோனே இணையிலி இறைவ போற்றி
போற்றியோம் சுத்த தேக மூப்பில்விண் ணவர்கோ போற்றி
போற்றியோம் சங்கை தீர்ந்தோய் கேள்விநூற் றுதியாய் போற்றி.
62✓
போற்றிசத் துருவில் லானே போற்றிசார் பொன்று மில்லாய்
போற்றிவிக் கினங்க ளில்லாய் தான்தோன்றி ஈச போற்றி
போற்றிநித் தியனே நித்த கல்யாண ரூப போற்றி
போற்றிபே தகமில் லானே பற்றுக்கோ டிலாதாய் போற்றி.
63✓
போற்றிநா யகனாம் ஈச நிதியமாய் நிறைவாய் போற்றி
போற்றிபற் பலவாம் ரூப சுரநதி சுதனே போற்றி
போற்றிவே டிச்சி காந்த புரம்பொடி படுத்தாய் போற்றி
போற்றியோம் பெரும்பற் றாள போற்றிகண் கண்ட தேவே.
64✓
போற்றிகண் முன்னிற் பானே பரமேச போற்றி போற்றி
போற்றியோம் நிறைவாம் புண்ய புண்ணிய வித்தே போற்றி
போற்றிபுண் ணியப்பே றானாய் புண்ணியத் துருவ போற்றி
போற்றிபுண் ணியஞ்செய் ஊக்கம் புண்ணியத் தோற்றம் போற்றி.
65✓
போற்றிமிக் குயர்ந்த சோதி புண்ணியம் புரிவோய் போற்றி
போற்றிபுண் ணியம்வ ளர்ப்பாய் பராநந்தப் படிவ போற்றி
போற்றிமே லவர்க்கு மேலோய் புண்ணியப் புகழோய் போற்றி
போற்றிமுன் னவர்முன் னோனே உவப்பருள் உருவ போற்றி.
66✓
போற்றியோம் பிராண நாத போற்றிகா லிலாத சர்ப்ப
போற்றிகா லுணாக்கொள் நாக தொழும்பர்துன் பொழிப்பாய் போற்றி
போற்றிபூ ரணனே போற்றி பார்ப்பதி பாலா போற்றி
போற்றியோம் பிரபு போற்றி சுத்தான்ம சொரூப போற்றி.
67✓
போற்றியோம் புருட போற்றி போற்றியோம் பிராண ரூப
போற்றிகா ரணனே போற்றி புருடோத்த மனேயோம் போற்றி
போற்றியோம் அருள்செய் சேயே தெளிந்ததூ வொளியே போற்றி
போற்றிவித் தகனே போற்றி சகஞ்சூழும் தலைவ போற்றி.
68✓
போற்றியோம் பரமா போற்றி பரமான்ம நாத போற்றி
போற்றியோம் பரம்ப ரேச பரோப காரா போற்றி
போற்றிகாண் பினிய மூர்த்தி தூயனே போற்றி போற்றி
போற்றியூட் டுதவு வோனே அறவினை யானாய் போற்றி.
69✓
போற்றிகெவ் வண்ணா சேந்தா ஊட்டங்கள் வளர்ப்பாய் போற்றி
போற்றியோம் மறங்கள் மாற்றி பாசபா ணியனே போற்றி
போற்றியோம் செருக்க ரக்கர்க் கசனியே தீர்த்தா போற்றி
போற்றிமுத் தீயாந் தேவ பூசனைக் குரியாய் போற்றி.
70✓
போற்றிபூ ரணவா நந்த முழுமுதற் பொருளே போற்றி
போற்றியோம் நிறைவே மேலாம் பரமேட்டி போற்றி போற்றி
போற்றியோம் தொன்மை யானே தந்தைதாய்ப் பேணி போற்றி
போற்றிமுன் துணைசெல் வானே உயிர்ப்பருள் பவனே போற்றி.
71✓
போற்றியெவ் வுயிர்க்கும் தந்தாய் நாட்டுமா ணையனே போற்றி
போற்றியங் கியிலு தித்தோய் பரம்பொருள் வடிவ போற்றி
போற்றிமா நிதிக்கு வித்தே நிதிமிக வளர்த்தாய் போற்றி
போற்றியோம் ஊட்ட மாக்கி ஒளிவளர் விளக்கே போற்றி.
72✓
போற்றியோம் வரப்பிர தாப அறிவறி அறிவ போற்றி
போற்றியோம் தலையாஞ் செல்வ வியாபக போற்றி போற்றி
போற்றியோம் அடல்மிக் கோனே சேடனாய்த் திகழ்வாய் போற்றி
போற்றிநா கேச நாக ரத்தினப் பூணா போற்றி.
73✓
போற்றிநற் பலன்கள் நல்கி பலன்கமேற் காட்டி போற்றி
போற்றிபூங் கண்ணா பாவம் "பட்"டெனப் பறைவாய் போற்றி
போற்றிபா தலர்கள் சூட்டே நீண்டகைத் தலனே போற்றி
போற்றிபே ரண்ட ரூபா அதிபல வானே போற்றி.
74✓
போற்றிவல் லமையி னானே வலியர்மேல் வலியாய் போற்றி
போற்றியோம் அயன்மா லீச மதிதரு மதியே போற்றி
போற்றிமா மதியர் மேலோய் போற்றிகோ மளக்கு ருந்தே
போற்றிபே ரண்ட சூலி மாணியாம் மணியே போற்றி.
75✓
போற்றிவித் தகர்வி னோத போற்றியோம் கேள்வி மேலோய்
போற்றியோம் மதிப்பு மிக்கோய் பூசுரர்க் கினியாய் போற்றி
போற்றிபூ சுரர்ச காய போற்றிமா வலனைச் சாடி
போற்றியோம் பிரம மானாய் பரப்பிரம பிரானே போற்றி.
76✓
போற்றிதிக் கிசைசீ ராள வெந்தீவித் துதித்தாய் போற்றி
போற்றிமா தானை யானே பிலத்துக்கண் வளர்வாய் போற்றி
போற்றியெண் ணிலவாந் தோள பலத்திரு வாள போற்றி
போற்றி பல்லசுரர்க் காய்ந்தோய் பிலத்திடை உறைவாய் போற்றி.
77✓
போற்றிமா வேல்வில் ஏந்தி இளவெயி லொளியாய் போற்றி
போற்றியோம் இளங்கு மார போற்றியான் றமைந்த மார்ப
போற்றிமா காய வானே போற்றியோம் சுகசொ ரூப
போற்றியிந் திரற்கு மீச எதிர்கொளும் விளைவே போற்றி.
78✓
போற்றியோம் பாச மோச பவசிவப் பிரிய போற்றி
போற்றிபத் தியினார் பேறே பயங்கெடுப் பவனே போற்றி
போற்றியெம் முளக்கோள் தேர்வாய் நச்சினார்க் கினிய போற்றி
போற்றியோம் பத்தி முத்தி பாலிப்பாய் போகி போற்றி.
79✓
போற்றியோம் பகவ செல்வ பாக்கியம் வளர்ப்பாய் போற்றி
போற்றியோம் மிளிர்கின் றோனே பாவனை மனத்தாய் போற்றி
போற்றியோம் அனைத்தும் தாங்கி அஞ்சுதற் கமைந்தாய் போற்றி
போற்றியச் சுறுத்தும் சத்தி பூதிதந் தருள்வாய் போற்றி.
80✓
போற்றியோம் பூதி பூப்பாய் பயன்நுகர் பவனே போற்றி
போற்றியெம் பூத மானாய் புவனநா யகனே போற்றி
போற்றிமங் களவ சர்வ பாக்கியம் விளைப்பாய் போற்றி
போற்றிமா மருந்த சுத்த சோபனர் துணைவ போற்றி.
81✓
போற்றியோம் பரங்கு மார பிறவிநோய் தணிப்பாய் போற்றி
போற்றியூட் டியவுற் றுண்ணி பிறப்புய்த்து மீட்பாய் போற்றி
போற்றிபோக் கியங்க ளீவாய் மருட்கையைத் தெருட்டி போற்றி
போற்றிது ரியனா யுள்ளாய் புவனிக்குப் புகலே போற்றி.
82✓
போற்றிவேண் டுறுதி யீவாய் நன்றுடை யானே போற்றி
போற்றியோம் பரவற் பாலாய் பரிகார வரனே போற்றி
போற்றிமாச் சேனை நாத பெருங்கொடை வள்ளால் போற்றி
போற்றிபே ராற்ற லாள போற்றிபே ரொளியு ளானே.
83✓
போற்றிமா புத்தி மானே பெருந்திற லான போற்றி
போற்றியுற் சாகம் மிக்கோய் மகாபல சாலி போற்றி
போற்றியோம் நிறைந்த போக மாமாயை யுடையாய் போற்றி
போற்றிமே தாவி லாச அரவரை ஞாணா போற்றி.
84✓
போற்றியோம் மகத்தா யுள்ளோய் முனிவரர்ச் சிதனே போற்றி
போற்றியான் றோர்தம் போற்றாய் மகாநந்த முள்ளாய் போற்றி
போற்றிமா கீர்த்தி மானே திறமைமிக் கவனே போற்றி
போற்றிநன் மதிப்பார் செல்வ வேண்டும்பே றளிப்பாய் போற்றி.
85✓
போற்றிநா முச்சி மேற்கொள் புனித! புண் ணியனே போற்றி
போற்றிமா பலமார் தீர மதிப்பருள் மஹானே போற்றி
போற்றியோம் மாலை மார்ப மதிதரு மதியாய் போற்றி
போற்றிமுத் திலங்கு மார உளங்கவர் கள்வ போற்றி.
86✓
போற்றியோம் நிதிக்கீ ழானே எமக்கின்றி யமையாய் போற்றி
போற்றிகா ரிகையார் ரூப போற்றிமா முனிவ ரேச
போற்றியுத் தமர்சி ரேட்ட மாற்றரும் உபாய போற்றி
போற்றியீந் தருள்வாய் போகம் வழங்குமங் களனே போற்றி.
87✓
போற்றியோம் முதவா கார வீடருள் விமல போற்றி
போற்றியோம் மஹாபோ கேச பாந்தளாம் படிவ போற்றி
போற்றியீட் டிசையாய் போற்றி போற்றிகுண் டலியாம் சேட
போற்றியோ கியர்தம் யோக துகளிலாத் துறவ போற்றி.
88✓
போற்றிபே ரிசையி னானே போற்றியோம் யோக மூர்த்தி
போற்றிதக் கவரின் மிக்கோய் யோகமாச் செல்வ போற்றி
போற்றியோம் இயம முள்ளாய் துறவர்வந் திதனே போற்றி
போற்றியோம் யோக யோக! யோகந்தேர்ந் தவனே போற்றி.
89✓
போற்றியோ கசித்தி யீவாய் போற்றியந் திரமா யுள்ளாய்
போற்றியந் திரத்தி னுள்ளாய் போற்றியந் திரந்தேர்ந்தோனே
போற்றியந் திரமுள் ளானே போற்றியந் திரத்தால் தாங்கி
போற்றிமாத் துயர்க ளில்லாய் போற்றியோம் யோக போற்றி.
90✓
போற்றியோ கேச போற்றி வரயோக துங்க போற்றி
போற்றியோம் அழகி யோனே போற்றியா ரழகு ரூப
போற்றியோம் சுவைதெ ளிந்தோய் தெவிட்டாத சுவையாய் போற்றி
போற்றியோம் இனிய வார்த்தி இன்பூட்டப் பெறுவாய் போற்றி.
91✓
போற்றியோம் ஆசை யானே மனக்கினி யவனே போற்றி
போற்றிசங் கரர்கு மார போற்றியோம் போர்வி ருப்ப
போற்றியூ ராண்மைப் போராய் நசைவெறுப் பறுப்பாய் போற்றி
போற்றிமா மணிபோல் வண்ண மனோரம்ய மூர்த்தி போற்றி.
92✓
போற்றிபே ரழகு பிம்ப இரத்தினாங் கதனே போற்றி
போற்றியோம் மணிப்பூண் பூணி போற்றியேர் வளரு ரூப
போற்றியோம் சுவையுண் டாக்கி சுவைப்புறு சுவையே போற்றி
போற்றியோம் மகிழ்வூட் டுற்றோய் போற்றியோம் பிணிநோய் சிந்தி
93✓
போற்றிதா மரைநேர் கண்ண இராசாதி ராச போற்றி
போற்றிசெவ் வணியா ரத்த போற்றிமூ வேதம் போற்றி
போற்றிமுக் குணத்தி ணைந்தோய் போற்றிவெண் ணிலவேர்க் கோலம்
போற்றிகுண் டலப்பூண் சோபை மணிமுடிக் காந்தி போற்றி.
94✓
போற்றிகிண் கிணிபூண் பாத உலகுக்கோர் தலைவ போற்றி
போற்றிமூ வுலகுக் கீச கோமள குமார போற்றி
போற்றிநா யகனே எம்மான் அனைத்தையும் காப்பாய் போற்றி
போற்றிசிட் சிக்க வல்லோய் உலகெலாம் உவப்பாய் போற்றி.
95✓
போற்றியோம் உறவ எல்லாம் படைத்தருள் பவனே போற்றி
போற்றிமூ வுலக சாந்த சிரோமணிச் சீர போற்றி
போற்றியெவ் வுலகும் போற்றி போற்றிகா மருசீர் ரூப
போற்றிலீ லாவி நோத உலகுடை முதல்வ போற்றி.
96✓
போற்றியுத் தமகு ணத்த வரதுங்க போற்றி போற்றி
போற்றியோம் வரத ராச பிணிகடீர் வைத்ய போற்றி
போற்றியோம் விசிட்ட யாவும் தெறவல்ல திறலோய் போற்றி
போற்றியோம் பெருமாள் போற்றி விபுதர்முன் விரைவாய் போற்றி.
97✓
போற்றிநம் வசமா வானே விகற்பமி லமல போற்றி
போற்றிபந் தனையில் லானே போற்றியோம் துயர்நோ யில்லாய்
போற்றியோம் விசித்தி ராங்க சூரிய சோதி போற்றி
போற்றிவித் தியாத ரேச சுத்தான்ம சொரூப போற்றி.
98✓
போற்றிவே தாங்க மானாய் விபுதர்க்கு விருப்ப போற்றி
போற்றிவார்த் தைகளை ஆக்கி வியாபக விமல போற்றி
போற்றிவித் தகவிஞ் ஞான வினயமுள் ளவனே போற்றி
போற்றிவித் துவசி ரேட்ட தெவ்வுடு திறலோய் போற்றி.
99✓
போற்றிவீ ரேச போற்றி ஆசையற் றவனே போற்றி
போற்றியோம் பிறப்பி லானே போற்றியோம் வணக்க முள்ளோய்
போற்றியோம் வேத மோதி செல்வமீ செல்வ போற்றி
போற்றிதே சருளும் தேச போற்றியோம் விசால நோக்க.
100✓
போற்றியோம் உயர்வே உள்ளி மனம்வசப் படுத்தோய் போற்றி
போற்றிநற் சுவாதீ னத்தாய் வேதவேத் தியனே போற்றி
போற்றியோம் துரிசில் லானே வேதவித் தகனே போற்றி
போற்றியோம் விசுவ கர்ம போற்றியோம் பயமில் லானே.
101✓
போற்றிவா கீச போற்றி வாசவன் பணிதாள் போற்றி
போற்றியோம் செறுநர்த் தேய்த்தோய் வியாபக விசுவ போற்றி
போற்றியோம் விசுவ ரூப போற்றிசீ ரிருக்கை யானே
போற்றியோம் விசாகபோற்றி விமலனே போற்றி போற்றி.
102✓
போற்றிநல் வாக்கு வல்லோய் வித்துவ சிரேட்ட போற்றி
போற்றியோம் வேத பார போற்றியோம் பிரம சாரி
போற்றிவீ ரியர்மேல் வீர போற்றியோம் வீர தீர
போற்றியோம் வித்தி யேச அமரரா சிரய போற்றி.
103✓
போற்றியோம் விசய துங்க போற்றியோம் விநயம் மிக்கோய்
போற்றியோம் அறிஞ ரேறே சீரியோய் போற்றி போற்றி
போற்றிரா சதமில் லானே போற்றியோம் வசுக்க ளானாய்
போற்றிவீ ரரைவெல் வீர போற்றியோம் வெம்மை யில்லாய்.
104✓
போற்றியோம் அறியத் தக்காய் வேகமிக் கவனே போற்றி
போற்றிவீ ரியமிக் கோனே எமைவசஞ் செய்வாய் போற்றி
போற்றியோம் சிறந்த சீல வரகுணாட் டியனே போற்றி
போற்றியோம் விடுத்த சோக குலிசபா ணியனே போற்றி.
105✓
போற்றியோம் சத்தி ஏந்தி சரவண பவனே போற்றி
போற்றிதெவ் வரைத்தேய்த் தீர போற்றிமா மயிலூர் வானே
போற்றியோம் சீரார் சிட்ட திருவாளர் திலக போற்றி
போற்றியோம் வாலி யோனே சுத்தனே போற்றி போற்றி.
106✓
போற்றிசா சுவத மூர்த்தி வேதசா கரனே போற்றி
போற்றியோம் புகலா வானே சுகமருள் சுகுண போற்றி
போற்றியோம் சுகசொ ரூப சிட்டருட் சிட்ட போற்றி
போற்றியோம் சாந்த நல்ல இலக்கண மமைந்தாய் போற்றி.
107✓
போற்றியோம் சூல பாணி உத்தமோத் தமனே போற்றி
போற்றிதூ மனத்து மாண்ப சங்கரா போற்றி போற்றி
போற்றியோம் சிவசொ ரூப போற்றியோம் சிவகு மாரா
போற்றிது ரருக்குச் சூர சாந்திமீ பவனே போற்றி.
108✓
போற்றியோம் சோகம் கொல்லி அறுவரன் னையனே போற்றி
போற்றியோம் அறுமு கேச அறுகுணச் செல்வ போற்றி
போற்றிசட் சக்கிர வாச துயரநோய் துடைப்பாய் போற்றி
போற்றிவே தாங்க பார பிராயமா றிலாதாய் போற்றி.
109✓
போற்றியோம் ஆறா யுள்ளாய் போற்றிசாத் திரவே தஞ்ஞ
போற்றியா றெழிற்க முத்தாய் பகையாறுய்த் தழிப்பாய் போற்றி
போற்றியோம் பகையா றட்டோய் ஆறுக்கும் அடைவே போற்றி
போற்றியா றாதா ரத்தாய் திருமுடி யாறா போற்றி.
110✓
போற்றியோம் கிரம மாறாய் அறுகோணத் தகத்தாய் போற்றி
போற்றிபே டலிதீர்ப் பானே சேனைநா யகனே போற்றி
போற்றிசௌ பாக்கிய வானே போற்றியோம் கந்த சாமி
போற்றியோம் சுரர்க்கா நந்த சாதுக்கள் சார்பே போற்றி.
111✓
போற்றியோம் சுப்பிர மண்ய சுரர்க்கதி பதியே போற்றி
போற்றிமுற் றறிவ போற்றி போற்றிமுற் றருள்வாய் போற்றி
போற்றியோம் சுகமுள் ளானே நச்சினார்க் கெளியாய் போற்றி
போற்றியோம் அருள்வாய் சித்தி; சித்திசா தனனே போற்றி.
112✓
போற்றிசித் தார்த்த என்றும் சித்திசங் கற்ப போற்றி
போற்றியோம் சித்த மானாய் போற்றியோம் சாது போற்றி
போற்றியோம் வரசு ரேசா சந்தமார் தோளாய் போற்றி
போற்றியா வையும றிந்தாய் கரியெனக் காண்பாய் போற்றி.
113✓
போற்றிநல் வரப்பிர சாத என்றுமுள் ளவனே போற்றி
போற்றியோம் அமிர்த நாத போற்றியோம் சுயம்பிர காச
போற்றியோம் சுயம்பு நாதா முகமெங்கு முள்ளாய் போற்றி
போற்றிசா மர்த்திய வானே உபசரிப் புறுவாய் போற்றி.
114✓
போற்றிநுண் ணியனே போற்றி போற்றியின் முகமே காட்டி
போற்றிமுற் றின்ப மூட்டி போற்றிநல் லெண்ணத் தோழ
போற்றியோம் மிகம கிழ்ந்தோய் தேவரிற் சிறந்தோய் போற்றி
போற்றியோம் சுசீல மாறா வாய்மைக்கு வலியே போற்றி.
115✓
போற்றிநன் மதிப்பு மிக்கோய் தூயர்சே விப்பாய் போற்றி
போற்றியா கமநூல் தேர்ந்தோய் தெளிவரும் தெளிவே போற்றி
போற்றிவீ ரரிற்சி ரேட்ட சச்சிதா னந்த போற்றி
போற்றிசற் சனர்தம் சார்பே சகலலட் சணனே போற்றி.
116✓
போற்றிமெய்த் தருமா சார போற்றிமுற் றமரர் ரூப
போற்றிசத் துவனே என்றும் சுவையுணா உதவி போற்றி
போற்றிசீர் மிகுவில் லாள போற்றிநன் மதிமிக் கோனே
போற்றிசத் தியனே சர்வ விக்கின விநாச போற்றி.
117✓
போற்றியெத் துயரும் சிந்தி சுகுமார போற்றி போற்றி
போற்றிசீ ராருங் கண்ட சுலோசன போற்றி போற்றி
போற்றிசீ ரிலங்குஞ் சென்னி சாரமாய்த் திகழ்வாய் போற்றி
போற்றியோம் விண்ணோர் வேந்தே சுராரியர்த் தெறுவாய் போற்றி.
118✓
போற்றிவிக் கிரம எல்லா எழுத்துமாய் நிற்பாய் போற்றி
போற்றிசார்ப் பேந்திர ரூப ஏழ்நாவன் புதல்வ போற்றி
போற்றிதே வேந்திர எல்லாப் படையுங்கை தேர்ந்தாய் போற்றி
போற்றிமுற் றுலகோர் நாத சிவபூசைப் பிரிய போற்றி.
119✓
போற்றிவெண் கரியான் போற்றாய் கரியுரித் தவன்சேய் போற்றி
போற்றியோம் மலங்கள் மாய்ப்பாய் கரசித்திரா யுதனே போற்றி
போற்றியோன் மணிப்பூ ணானே மலர்தரு வதன போற்றி
போற்றியோம் பசுமை வண்ண மாமகிழ் வருளி போற்றி.
120✓
போற்றியா மகிழ்வுக் கூற்றே குன்றெளி இறுத்தாய் போற்றி
போற்றியோம் ஹம்ச ‘‘ஹும்’’ என் றழித்தியே பாவம் போற்றி
போற்றியோம் கிரிசை பால அரிதிரு மருக போற்றி
போற்றியோம் இரண்ய ரூப மனத்தகத் தானே போற்றி.
121✓
போற்றியோம் களிப்பு ளானே போற்றியிந் திரன்ச காய
போற்றியோம் ஹம்ச மந்திர ஹம்சத்தின் நடையாய் போற்றி
போற்றியோம் அவியா யுள்ளாய் பொன்வண்ணத் துருவ போற்றி
போற்றியோம் இதஞ்செய் வானே களிப்பருள் களிப்பே போற்றி
122✓
போற்றிபொன் னணியா ராக சிவன்மகிழ் மதலாய் போற்றி
போற்றியோம் இதமே ஈவாய் பாசமுற் றறுப்பாய் போற்றி
போற்றியோம் சிவன்பால் வந்தோய் சேமமா யிருப்பாய் போற்றி
போற்றியோம் சேமம் செய்வாய் சேமத்துக் குரியாய் போற்றி
123✓
போற்றிசேத் திரந்தேர்ந் தோனே உலப்பிலா ஒருவ போற்றி
போற்றியோம் சேத்திர பால பொறையினா தார போற்றி
போற்றியோம் சேம சேத்திர பொறையின் துறைவே போற்றி
போற்றிபூ ரியரைக் கொல்லி பொறையருள் பொறைய போற்றி.
124✓
போற்றியோம் சேம மானாய் புவனபூ டணனே போற்றி
போற்றியோம் பொறையின் சார்பே புன்பவம் பொடிப்பாய் போற்றி
போற்றியோம் குன்றிப் போனார் குடிதழை விப்பாய் போற்றி
போற்றிமின் கற்றை நேர மிளிர்சடை விமல போற்றி.
125✓
போற்றியோம் மலைமான் கஞ்ச முகமலர்க் கருண போற்றி
போற்றியோம் ஒன்பான் வீரர் படைத்துணை உடையாய் போற்றி
போற்றியோம் இன்னா நீக்கி! ஊழிகண் டுறைவாய் போற்றி
போற்றியோம் துரிசி யாவும் தூளிசெய் தூய போற்றி.
126✓
போற்றியோம் வெப்ப சாந்தி! சந்திர வதன போற்றி
போற்றியோம் மனோவே கப்பொற் சித்திரத் தேரூர் வோனே
போற்றியோம் க்ருபா கார குமரவேள் போற்றி போற்றி
போற்றியோம் வள்ளி தேவ குஞ்சரி மணாள போற்றி.